றந்து போன பா.ஜ.க தலைவர் வாஜ்பாய்-க்கு தமிழக பா.ஜ.க சார்பில் சென்னையில் அஞ்சலிக் கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரசு, பா.ம.க, புதிய தமிழகம், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதன் கட்சி, ஏ.சி.சண்முகம் கட்சி, லோக் ஜனசக்தி இவர்களோடு விடுதலைச் சிறுத்தைகளின் திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பி.சம்பத்தும், சி.பி.ஐ சார்பில் வீரபாண்டியனும் கலந்து கொள்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் நெல்லையில் நடந்த கலைஞர் அஞ்சலிக் கூட்டத்தில் தமிழிசை கலந்து கொண்டு முழங்கினார். இன்று வாஜ்பாய் கூட்டத்தில் தமிழிசையின் முன்னால் இவர்கள் வாஜ்பாயிக்காக கண்ணீர் வடிக்கப் போகிறார்கள்.

அரசியல் நாகரீகம், இரங்கல் கூட்டம், நீத்தோர் நினைவு, வாஜ்பாய் மட்டும் நல்லவர் என பல சமாதானங்களைக் கூறிக் கொண்டு ‘தோழர்கள்’ இன்று காவிக் கரையோரம் கண்ணீர் வடிக்கப் போகிறார்கள். இந்த வெட்கம்கெட்ட நடத்தையை காறித்துப்புகிறது தமிழ் ஃபேஸ்புக்!
-வினவு

vajbayee praise meeting

Thiru Yo
அப்போ இனிமேல் சாவர்க்கர் நினைவு தினம், கோட்சே தியாகநாள், கோல்வால்கர் நினைவுநளெல்லாம் தோழர்கள் கொண்டுவார்களா என்கிறார் ஆர்வமிகுதி கொண்ட ஒருவர்.

அவருக்கு என்ன பதிலைத் தருவது தோழர்களே? (இந்த கேள்வி சிவப்பிற்கும், நீலத்திற்கும்)
————-

Keetru Nandhan
இவங்க எல்லாம் வருசா வருசம் பசும்பொன் முத்துராமலிங்கத்துக்கு திதி கொடுக்கிறதை நினைச்சிப் பார்த்தால், இதுக்கு ஷாக் ஆக மாட்டீங்க…
————-

Samsu Deen Heera
என்ன சொல்லிப் புகழப்போகிறீர்கள் தோழர்களே..?

நரகலை மிதித்துவிட்டதைப் போல அருவெறுப்பாய் இருக்கிறது. அரசியல் நாகரிகம், மண்ணாங்கட்டி என்று பிழைப்பு வாதிகளைப்போல பசப்பப்போகிறோமா..? அவநம்பிக்கையாய் உணர்கிறேன். இனம் புரியாத பதட்டமும் கடும் எரிச்சலும் கலந்த மனநிலையில் எதாவது மரியாதைக் குறைவாக எழுதிவிடுவேனோ என்ற அஞ்சுகிறேன்.

கம்யூனிஸ்டுகளுக்கென்று ஒரு பாரம்பரியமுண்டு.. பாசிஸ்ட்டுகளைப் புகழ்ந்து பேச கம்யூனிஸ்டுகளின் நா எழுமா..?

#கொடுமை..
————-

Villavan Ramadoss
அன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் ஃப்ரீ. அதான் வாஜ்பாய மகிமைப்படுத்தி, அக்ரஹாரத்தை ஜனநாயக்கப்படுத்தி அப்படியே முதலாளித்துவ கழுதைய வென்றெடுக்கலாம்னு முடிவு பண்ணி நிகழ்ச்சிக்கு ஒத்துக்கிட்டோம்!
————-

Sukirtha Rani is feeling angry.
இனி
பசு எனக்குப் புனிதம்
தாமரை என் மலர்
காவி என் நிறம்
தமிழிசை எனக்குத் தலைவி
ஸ்ரீசுகிர்தானந்தமாயி என் பெயர்.
————-

Nethaji AT
#வாஜ்பாய்க்கு_புகழஞ்சலிப்_பாடப்போகும்_தலைவர்களே!

#மறந்திடாமல்_இதையும்_சேர்த்துப்_புகழாய்ப்_பாடுங்கள்_நாடே_கேட்கட்டு_காரித்துப்பட்டும்!

௦ வந்தேமாதிரப் பாடலை பாடதவர்கள் பாக்கிஸ்தானுக்கு ஓடவேண்டுமெனச் சொன்னவர்தான் வாஜ்பாய்.

௦ பாபர் மசூதி இடிப்பு குறித்து விசாரனை நடத்திய லிபரான் கமிசனை முடக்கிப்போட்ட மகான்தான் வாஜ்பாய்.
௦ மும்பை கலவரம் குறித்த கிருஷ்ணா கமிசனை ஒன்றுமில்லாமல் அடித்த உத்தமர்தான் வாஜ்பாய்.

௦ கார்கில் போர்வீரர்களின் சவப்பெட்டியில் கூட ஊழலை நிகழத்திகய கண்ணியவான்தான் வாயஜ்பாய்.

௦ குஜராத் கலவரத்தின்போது மோடி! ராம ராஜ்ஜியத்தை காத்துக்கொள்ளென முழங்கிவர்தான் வாய்பாய்.

௦ ஆர்.எஸ்.எஸ் என் ஆன்மா என்று தீரமுடன் சொன்ன மதவாதிதான் வாஜ்பாய்.

௦ சிறப்பு பொருளாதர மண்டலத்தின் மூலம் நூறு சதவீதம் அன்னிமுதலீடுகளை திணித்த கார்பரேட் கைக்கூலிதான் வாஜ்பாய்.

௦ ரியலெஸ்டேட்டில் எம்பது சதவீதம் அன்னிய முதலீட்டை திணித்து தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வழிவகுத்தவர்தான் வாஜ்பாய்.

௦ காப்பீட்டுத் துறைகளை தனியாருக்கு கபலிகரம் செய்த புன்னியவான்தான் வாஜ்பாய்.

௦ ஐயாயிரம் கோடிக்குமேல் மதிப்புள்ள பால்கா நிறுவனத்தை ஐநூற்றைம்பைது கோடிக்கு விற்ற கொள்ளை கூட்டத் தலைவன்தான் வாஜ்பாய்.

o ஆயிரக்கணக்கான சதுர ஏக்கர் கனிமவள நிலஙககளை தனியாருக்கு விற்றுபோட்டு இந்திய இயற்கை வளங்களை அழித்தவர்தான் வாஜ்பாய்
————-

இரவிக்குமார்
சோசலிசத்துக்குப் பதிலாகத் தேசியவாதத்தை முன் வைத்த, சுட்டுக் கொல்லப்பட்ட இணையற்ற வீரன் முசோலினிக்குப் புகழாஞ்சலி!
————-

Thiru Yo
அரசியல் நாகரீகம் கருதி ஆர்எஸ்எஸ்-ல் கூட சேரலாம். 🤷🏿‍♂️

வாஜ்பாய்க்கு கம்யூனிஸ்ட்டு தலைவர்கள் ஆற்ற வேண்டிய ‘இகழாஞ்சலி‘! CPI ML செய்தி!

தேவையற்றுப்போன முகமூடி!
————-

மு.வி.நந்தினி
அப்பயும் பாருங்க, இடதுசாரிகளை விமர்சனம் பண்றாங்க, விசிகவை விமர்சனம் பண்றாங்க, ஆனா திமுக அந்த லிஸ்ட்லேயே சேர்த்துக்கல.
————-

வில்லவன்:
இந்தியாவின் பெரிய அச்சுறுத்தல் இந்துத்துவா.
அடுத்ததாக வரப்போவது இந்த அரசியல் நாகரீகம்தான் போல..
விசி மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களும் வாஜ்பாயை என்ன சொல்லி புகழப்போகின்றன?

செத்தவர்கள் எல்லோருமே புகழத்தக்கவர்கள் என்றால் அடுத்து இந்து மகாசபா போன்ற இயக்கங்கள் கோட்ஸேவுக்கு புகழஞ்சலி செலுத்த கூப்பிடும். போவீர்களா?

பாஜகவை மகிமைப்படுத்துவதான் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை மோடி டெமோ காட்டிவிட்டார். டெட்பாடிக்கு பாவ புண்ணியம் பார்க்க வேண்டாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்சுக்கு டெட்பாடிகள்தான் மூலதனம்
————-

எழுத்தாளர் யமுனா ராஜேந்திரன்
எல்லாரும் ஒன்னாச் சேர்ந்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஜனநாயகச் சாந்து அடிக்குறாங்க. பாசிசம் பத்தி இனிமே வகுப்பு எடுக்காம இருங்க..
————-

பத்திரிகையாளர் கவின்மலர்
வாஜ்பாய் நல்ல கவிஞர். அமைதியே உருவானவர். அதனால்தான் குஜராத்தின் புகழ்பெற்ற கவிஞரான வலிகுஜராத்தியின் கல்லறையை மோடி இடித்தபோது வாஜ்பாய் அமைதியாய் இருந்தார். மெல்லிய மனம் படைத்த வாஜ்பாயால் மோடியின் இந்த செயலுக்கு எப்படி எதிர்ப்பு தெரிவிக்கமுடியும்? அதனால்தான் குஜராத் வன்முறைகளின்போதும் அமைதிகாத்தார். தன் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்றால் மோடி வருத்தப்படுவார் என்பதை உணர்ந்து குஜராத் வன்முறைகளை நிறைவாகச் செய்யும்படி ஆசீர்வதித்த உத்தமர் அவர். பாபர் மசூதியை இடிக்கப் புறப்பட்டு வந்த கரசேவகர்களின் மனம் கோணாமல் அவர்களுக்கு ஆதரவளித்த மஹான் வாஜ்பாயி. எவர் மனதையும் நோகடிக்காத மென்மையான கவிமனம் அவருக்கு…

இப்படித்தான் உரையாற்றப் போகிறீர்களா தோழர்களே?
————-

அரசியல் செயல்பாட்டாளர் நிவேதா:
அடுத்ததாக
சாத்வீக தீவிரவாதி வாஜ்பாய் ஜி அவர்களுக்கு தோழர் புகழஞ்சலி செலுத்துவார்…
————-

செயல்பாட்டாளர் முருகன் கண்ணா:
வாஜ்பாயை நாமும் கொஞ்சம் புகழுவோமா ?

சுதந்திர போராட்டத்தை வேடிக்கை பார்க்க வந்ததாக பிரிட்டிஷ் அரசிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த மிக சிறந்த போராளி.

சர்வதேச முதலாளிகள் மிக எளிதாக தங்களின் சரக்குகளை நகர்த்தி செல்ல தங்க நாற்கர சாலை திட்டத்தை செயல்படுத்திய ஒரு சிறந்த கார்ப்ரேட் எடுப்பு.

குஜராத் படுகொலை உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை அரங்கேற்ற துணையாக இருந்த சிறந்த மனிதநேய பண்பாளர்.

ராமர் கட்டிய பாலத்தை கண்டு பிடித்து இடிக்கவிடாமல் தடுத்து தேச வளர்ச்சிக்கு உதவிடும் சேதுசமுத்திர திட்டத்தை நிறுத்திய மிக சிறந்த பொறியியல் வல்லுனர்.

ராணுவ வீரர்களுக்கு சவபெட்டி வாங்கும் போது எப்படி ஊழல் செய்யனும் என்று கற்றுக் கொடுத்த முன்மாதிரி அரசின் மிக சிறந்த பிரதமர்.

மொத்தத்தில் ஆர்.எஸ்.எஸ்ன் ஒரு சிறந்த சங்கி

போதுமா இன்னும் புகழனுமா ?

***

அடல் பிகாரி வாஜ்பாயும் இந்திய வலதின் அகோர வளர்ச்சியும்

முன்னாள் பிரதம மந்திரி அடல் பிகாரி வாஜ்பாய் இன்று காலமானார்.

இந்திய வலதுசாரி அரசியல்வாதிகளில் மிகப்பெரும் உயர்ந்த நிலையும் கௌரவமும் கொண்டவராக வாஜ்பாய் இருந்தார். ஜனசங்க காலத்திலிருந்து, அதன்பின் ஜனதா கட்சி கட்டம் ஊடாக, இறுதியில் BJPயாக அது வளர்ச்சியடையும் வரையில் RSSன் நாடாளுமன்ற அரசியலை அவர் வழிநடத்தினார். காந்தியத்தோடும், சோசலிசத்தோடும் அவர் கொண்டிருந்த சிறுபிள்ளை காதல் BJPயின் வரலாற்றுக் கட்டத்தில் மறக்கப்பட்ட ஒன்றானது. ஆனால், அத்வானியின் தாக்குதல் தன்மைகொண்ட இந்துத்துவா பிரச்சார இயக்கத்துக்குப் பின்பு BJP இந்தியாவின் ஆகப் பெரும்பான்மை கொண்ட கட்சி ஆனபோது வாஜ்பாய் BJPயின் அரச முகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

RSS ன் கருத்தியல் தலைவர் கோவிந்தாச்சார்யா சொன்ன மறக்க முடியாத உருவகத்தை நினைவுபடுத்திக்கொள்வோம். “வாஜ்பாய் தாராளவாத முகமூடி. BJPயின் உண்மையான முகம் அத்வானி“. BJP தனது மதவெறி பாசிச முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டிய காலத்தில் , அக்கட்சியின் கவனத்தை ஈர்த்த தலைவர்களில் ஒருவராக வாஜ்பாய் இருந்தார். அத்வானி, அல்லது மோடி போன்ற தீவிர RSSகாரர்ககளை ஆதரிப்பதில் சங்கடத்துக்கு ஆளான NDA கூட்டணியின் பங்காளிகள் வாஜ்பாயின் மகிழ்வான, பண்பானவர் என்ற தோற்றத்தைக் கொண்டு தங்களின் அம்மனத்தை மறைத்துக்கொள்ள முடிந்தது.

NDAவின் முதல் அரசு காலத்தின்போது, தான் ஆற்ற வேண்டிய பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கு வாஜ்பாய் தனது அரசியல் வார்த்தைகளை மென்மையாக்கிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்று நாம் NRC பிரச்சனையில் மோடி மற்றும் அமித் ஷா புலம்பெயர்ந்தவர்கள் பற்றி விஷத்தைக் கக்கும் உரைகளைக் கேட்டுவருகிறோம். 1983ல் அசாமில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது “அன்னியர்கள் இங்கே வந்திருக்கின்றனர். ஆனால், அரசு ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் ஒருவேளை பஞ்சாப்பில் நுழைந்திருப்பார்கள் என்றால், கண்டம்- துண்டமாக வெட்டி வீசப்பட்டிருப்பார்கள்“ என்று அனல் கக்கப் பேசியதை நாம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது. அதனையடுத்து ‘நெல்லி‘யில் 2000 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன்பின் மேற்படி உரையிலிருந்து விலகி நிற்பது நல்லது என்று BJP உணர்ந்தது.

1992ல் பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பு அயோத்தியிலிருந்து RSSஆல் திட்டமிடப்பட்ட வகையில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவர் வாஜ்பாய். அதற்கு முன்பு அவர் கரசேவகர்கள் மத்தியில் உரையாற்றினார். “தரையைச் சமப்படுத்த வேண்டும் என்றால், இடித்துத் தள்ளுவதற்கான ‘சாதனங்கள்‘ வேண்டும்“ என்ற பொருள்பட மறைபொருளாகப் அவர் பேசினார். கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். அது அடுத்த நாள் மசூதியை இடிக்கும் வரை நீண்டது. வாஜ்பாய் பயன்படுத்திய உவமையைக் கரசேவகர்கள் சரியாகப் புரிந்துகொண்டார்கள் என்பதை அது காட்டியது.

2002ல் குஜராத்தில் மதவெறி வன்முறை அரங்கேறியபோது வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்தார். மோடி ‘ராஜதர்மத்‘தில் தவறிவிட்டார் என்று கள்ளத்தனமாகக் கண்டித்தார். அதன்பின்னும் மோடி முதலமைச்சராகத் தொடர்வதற்கு அனுமதித்தார். 2002 மதவெறி வன்முறையின்போதும், அதன் பின்னரும் முஸ்லீம்கள் காக்கப்படுவதை உறுதி செய்வதற்கு வாஜ்பாய் எதனையும் செய்யவில்லை.

நயத்தக்க நாகரீகம்- விவாதம் என்ற நிலைப்பாட்டை வாஜ்பாய் கடைபிடித்து வந்தார். மதமாற்றத்தைத் தடுப்பது என்ற காரணம் சொல்லிக்கொண்டு, RSSன் அமைப்புகள் நடத்திய மதவெறி வன்முறையை கிருத்துவர்கள் எதிர்கொண்டிருந்த சூழலில் “வாருங்கள்.. மத மாற்றம் பற்றி விவாதம் நடத்துவோம்“ என்று கிருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்தார்! 2004ல் குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர், இந்தியா ஜொலிக்கிறது என்ற கட்டுக்கதை குப்புற வீழ்ந்த பின்னர் வாஜ்பாய் வழிநடத்திய NDA ஒட்டுமொத்த தோல்வியைத் தழுவியது.

இன்றைய BJPயும் NDAவும் அவர்களின் அரசும் மிகவும் மாறுபட்ட காலத்தில் இருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு முகமூடி எதுவும் தேவையில்லை. மோடியும் யோகியும் இன்றைக்கு BJPயின் நட்சத்திரங்கள். அவர்கள் மதவெறியைச் சற்றும் மறைப்பதில்லை. அடித்துக்கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு மந்திரிகள் மாலையிடுவர். முஸ்லீம் ஒருவரை உயிருடன் எரித்தவரை RSS அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேமிரா முன்பு கட்டித் தழுவிக்கொள்வார்கள். அவரை ’வீரக் கதாநாயகர்‘ ஆக்கி மகிழ்வார்கள். ‘பசு வதை‘ பற்றியோ, ‘காதல் கொலை‘ பற்றியோ ‘தேசிய விவாதம்‘ எதனையும் நடத்த வேண்டிய தேவை இனியும் BJPக்கு இல்லை. வாஜ்பாய் காலத்தைச் சேர்ந்த BJP தலைவர்கள் அனைவரும், NDAவில் வாஜ்பாயின் பாத்திரத்திற்கு துணையாக நின்ற அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் இன்று ‘ஆலோசனை‘ சொல்கின்ற இடத்தில் அடைத்து வைக்கப்பட்டுவிட்டனர்.

மதவெறி பாசிசமாக அல்லாமல், பிற்போக்கு வலதுசாரிக் கட்சியாக BJP இருக்க முடியும் என்ற இந்திய ஆளும் வர்க்கம் மற்றும் வலதுசாரி அறிவாளிகளின் மாயக் கனவின் பிரதிநிதியாக வாஜ்பாய் இருந்தார். வாஜ்பாய் உடல் ரீதியாக மறைவதற்கு வெகுமுன்பே அந்த மாயக்கனவு கரைந்து கலையத் துவங்கியிருந்தது.

இன்றைய நிலையில், இந்திய வலதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமான அடையாளமாக வாஜ்பாய் இருக்கிறார். வாஜ்பாயின் நேற்றைய காலத்துக்கும் மோடியின் இன்றைய காலத்துக்கும் இடையிலான தொடர்பு என்ன? மாறுபாடு என்ன? என்பதை வேறுபடுத்தி தற்போதைய பாசிச தாக்குதலின் தீவிரம் என்ன என்பதைக் கண்டுபிடிப்பதற்கான அளவுகோலாக இருக்கிறார்.

CPI(ML) Liberation கட்சியால் 16 August 2018 அன்று வெளியிடப்பட்டது.

மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த ராஜதந்திரி…
போராட்டக்காரர்களை காட்டிக்கொடுத்த சாணக்யன்…
பிரிட்டிஷ் அரசுக்கு பணிந்த மதியூகி. ..
குஜராத் கலவரத்துக்காக நீலிக்கண்ணீர் வடித்த நீதிமான்…
தங்க நாற்கர சாலையில் சாவடி அமைக்க காவடி தூக்கிய தேசபக்தர்…
வங்கி சேமிப்பு வட்டியை குறைத்த வள்ளல்…
இன்னும் புகழ வார்த்தையின்றி தொண்டை அடைக்கிறது.
————————–

குறிஞ்சி நாதன்
கலைஞர்க்கு அஞ்சலி செய்வது—- சுயமரியாதை
வாஜ்பேய்க்கு செய்வது— அவமரியாதை
பாசிச பாஜக வாஜ்பேக்கு யார் செய்தாலும் சந்தேகம் கொள்
அவர்கள் தமிழின விரோதிகள்தான் என்பதை விட #மக்கள் விரோதிகளே என்பதை புரிவோம்
————-

Sasi Dharan
நான் பி.ஜே.பி இல்ல..
ஆர்.எஸ். எஸ் சப்போட்டர் இல்ல..
ஆனா எங்க இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு..
யோசிச்சி சொல்லு..
————-

Thiru Yo
ஒரு ஓநாயின் நிகழ்ச்சித் திட்டத்திற்குள் எல்லா ஆடுகளும் தானாக சென்று அடைந்து கொ(ல்)ள்கின்றன. பெரிய ஆடு, சின்ன ஆடு, மலையாடு, வரையாடு, வெள்ளாடு, செம்மறியாடு… என எந்த வேறுபாடுமில்லை. அனைத்தும் ஒற்றைமயம்.
————-

Thiru Yo
 “அரசியல் நாகரீகம்” கருதி அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்தால் தேர்தல் செலவு மிஞ்சும்.
————-

இரவிக்குமார்
மிக மென்மையாக மனிதக்கறி சுவைத்துண்ட இடி அமீனுக்குப் புகழாஞ்சலி!
————-

பரிசல் சிவ. செந்தில்நாதன்
ஹிட்லருக்கு வீர வணக்கம் செழுத்துறது அரசியல் நாகரிகம் தோழர்😳
வெங்காயம்
————-

இரவிக்குமார்
அகாலத்தில் தற்கொலையுண்ட சிறந்த ஓவியக் கலைஞரான தோழர் ஹிட்லருக்குப் புகழாஞ்சலி…