அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீதான மோடி அரசின் தாக்குதல்
மக்கள் அதிகாரம் பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தியா முழுவதும் செயல்வீர்ர்கள் மீதான பாசிசத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் போலியான ஆதாரங்களைக் கொண்டு சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டது, தமிழகத்தில் மாணவி சோஃபியா பாஜக-வுக்கு எதிராக முழக்கமிட்டதற்காக கைது செய்யப்பட்டது மற்றும் அவரது பாஸ்போர்ட்டை முடக்க முயற்சி மேற்கொள்வது என பாசிசம் எங்கும் தலைவிரித்தாடுகிறது.
இதனைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர், பிரபல சமூகச் செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டேவுடன் இணைந்து பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்துகின்றனர்
நாள் : 08-09-2018
நேரம் : நண்பகல் 12 மணி
இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம், சேப்பாக்கம்
தவிர்க்கவியலாத தொழில்நுட்பக் காரணங்களினால் வினவு நேரலை ரத்து செய்யப்படுகிறது. ஏமாற்றமளித்ததற்கு வருந்துகிறோம்
https://youtu.be/A_lEcSuUjDI
பாருங்கள் பகிருங்கள்