privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகுஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மோடிதான் குற்றவாளி என ஜாகியா ஜாஃப்ரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று 19.11.2018 விசாரணைக்கு வருகிறது.

-

றக்க முடியுமா? குஜராத், 2002 ஆம் ஆண்டில் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். நவீன சமுதாய வரலாற்றில் ஊரறிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படாத மிகப்பெரும் குற்றங்களின் இதுவும் ஒன்று.

குல்பர்க் சொசைட்டி
ஆள் அரவமற்று, பேய்க் குடியிருப்பாக மாறி நிற்கும் குல்பர்க் சொசைட்டி. (கோப்புப்படம்)

இந்தப் படுகொலை கலவரம் நடக்கும் போது முதலமைச்சராக இருந்தவர் நரேந்திர மோடி. அந்தக் கலவரத்தில் இந்துமதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட காங்கிரசு தலைவர் இஷான் ஜாஃப்ரியின் மனைவியான ஜாகியா ஜாஃப்ரி மோடி மேல் வழக்கு தொடுத்திருந்தார். மோடிதான் கலவரத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற முறையில் உத்தரவு போட்டார் என முன்னாள் போலீசு அதிகார சஞ்சீவ் பட் முதல் பலரும் நேரடி சாட்சியங்களை அளித்திருக்கின்றனர். ஆனாலும் மோடியை விடுதலை செய்தது குஜராத் உயர்நீதிமன்றம். என்ன இருந்தாலும் இன்றைய நீதி என்பது இந்துத்தவத்தின் பிடியில் அல்லவா இருக்கிறது!

குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து 80 வயது முதிய பெண்மணியான ஜாகியா ஜாஃப்ரி, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கு இன்று 19.11.2018 அன்று விசாரணைக்கு வருகிறது. சிறப்பு விடுமுறை மனுவாக அவரது வழக்கை இன்று நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் தீபக் குப்தா விசரிக்கின்றனர். குலபர்க் சொசைட்டி எனும் இடத்தில்தான் பிப்ரவரி 28, 2002 அன்று இஷான் ஜாஃப்ரி இந்துத்துவ கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.

குல்பர்க் சொசைட்டி வழக்கு குறித்து விரிவாக படிக்க:
குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் அக்டோபர் 5, 2017 அன்று மோடி நிரபராதி என்று தீர்ப்பளித்திருந்தது. மோடி மற்றும் சில பா.ஜ.க அரசியல்வாதிகள், மூத்த அதிகாரிகளை சிறப்பு விசாரணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. அதில் போதுமான ஆதாரங்கள் இல்லையென நீதிமன்றம் மேற்படியானோரை விடுவித்தது.

குல்பர்க் சொசைட்டி படுகொலையில்  குற்றவாளிகளை தண்டிக்கக்  போராடிவரும் இஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி.

கடந்த வருடம்தான் மாநகர நீதிமன்றத்தின் உத்திரவை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது குஜராத் உயர்நீதிமன்றம். மேலும் நரோடா பாட்டியா, நரோடா காம், குல்பர் வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்ட மாபெரும் கலவரம் என ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த மனுவையும் குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் கலவரம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ல்தான் மோடி மற்றும் அவரது அரசு எந்திரம், அரசு அதிகாரிகள் மீது ஜாகியா குற்றம் சாட்டி வழக்கு தொடுத்திருந்தார். இதற்கே அவர் கடும் மிரட்டல்கள், வழக்கறிஞர்கள் – செயற்பாட்டாளர்கள் மீதான எச்சரிக்களைத் தாண்டி கடுமையாக போராட வேண்டியிருந்தது.

கடந்த 2012-ம் ஆண்டில், கோத்ராவுக்கு பிந்தயை கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட 58 நபர்களை மாநகர நீதிமன்றம் விடுவித்தது. இந்தக் குற்ற வழக்கின் படி மேற்படி நபர்கள் 69 பேர்களின் படுகொலைக்கு காரணமானவர்கள். “சிறப்பு விசாரணைக் குழுவின்படி, மேற்கண்ட 58 பேர்கள் மீதி எந்தக் குற்றமும் நிரூபிக்கப்படவில்லை” என மாநகர நீதிமன்றத்தின் நீதிபதி எம்.எஸ்.பட் தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.  அதன்பிறகு இந்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு   செய்யப்பட்டு 2013-ல் மாநகர தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்டது. அந்த வழக்குதான் தற்போது உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ளது.

ஆர்.கே.ராகவன்
குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கில் மோடியையும், அவரது அதிகாரிகளையும் விடுவித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ஆர்.கே.ராகவன். (கோப்புப்படம்)

மோடி தலைமையிலான இந்துமதவெறியர்களை தப்பவிடும் முகமாகவே சிறப்பு விசாரணைக் குழுவும், நீதிமன்றங்களும் செயல்பட்டதை அறிய ஞானக்கண் எதுவும் தேவையில்லை. இப்போது உச்சநீதிமன்றத்திலும் நீதி கிடைபதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.

ஆனால் கேட்பார் கேள்வியின்றி குஜராத் ‘கலவரத்தில்’ முசுலீம் மக்கள் கொல்லப்பட்டதற்கு இங்கே மோடியை உள்ளடக்கி யாரையும் தண்டிக்க முடியாது என்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடா, பாசிஸ்டுகளின் காடா என்ற கேள்வி எழுகிறது.

புதிய செய்தி: இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நவம்பர் 26-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

செய்தி ஆதாரம்:2002 Gujarat riots case: SC to hear Zakia Jafri’s plea challenging Narendra Modi’s acquittal – Indian Express

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க