Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விதிருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - வாசகர் படக் கட்டுரை !

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !

கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை!

-

ரசுப் பள்ளி என்ற தலைப்பில் வாசகர் துன்மதி குமரவேல் அனுப்பிய படங்கள் இவை. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை எனக் காரணம் காட்டி படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எத்தனையோ அரசுப் பள்ளிகள் நமக்கு தெரியமலேயே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

படிக்க:
கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

இப்பள்ளிகள் பல அந்தந்த ஊர்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களின் முன்முயற்சியால் சிறப்பாக நடக்கின்றன. அலங்காரங்கள் ஏதுமின்றி அழகாக செயல்படும் பள்ளிகளை நாம் முதலில் பார்வையிட வேண்டும்.இங்கே நாம் பார்ப்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளின் புரட்டு சாதனைகளை விளம்பரங்களாக திணிப்பார்கள். அரசுப் பள்ளிகளின் சாதனையை நாம்தான் பரப்ப வேண்டும்.

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – பசுமையாக இருக்கிறது.
பள்ளிக்கு ஆர்வத்தோடு வரும் மாணவர்கள்.
இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்தும் மாணவர்கள். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அணிவகுப்பின் நேர்த்திக்கு குறைவில்லை!
“நீ ஏன் அந்த மாணவியுடன் பேசினாய்” என்று ஆண் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால், ஆண் – பெண் பேதமின்றி அருகருகே உட்கார வைத்து சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறது அரசுப் பள்ளிகள்.
ஏழெட்டு பேர் பைக்குகளில் சாகசம் காட்டுவது, வானத்திலிருந்து பாதுகாப்பாக கடலில் விழுவது என ’சாகசங்களுக்காக’ பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கோட்டைகளில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம், கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள்.
நீங்கள் நினைவுகூறும் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…
இன்றைய செய்தி, அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் காலை வணக்க நிகழ்வில் உண்டு. பங்கேற்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பும் உண்டு.

படங்கள்: துன்மதி குமரவேல்

நீங்களும் புகைப்படம் அனுப்ப வேண்டுமா? அடுத்த வாரம் விளையாடும் குழந்தைகள் எனும் தலைப்பில் படமெடுத்து அனுப்புங்கள்! விவரங்களுக்கு இணைப்பை அழுத்துங்கள்!

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்