Thursday, October 24, 2019
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி - வாசகர் படக் கட்டுரை !

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – வாசகர் படக் கட்டுரை !

கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள். கிராமத்து பள்ளி ஒன்றின் படக்கட்டுரை!

-

ரசுப் பள்ளி என்ற தலைப்பில் வாசகர் துன்மதி குமரவேல் அனுப்பிய படங்கள் இவை. அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் ஒழுங்காக வருவதில்லை எனக் காரணம் காட்டி படிப்படியாக மூடிக்கொண்டிருக்கிறது அரசு. ஆனால், எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற எத்தனையோ அரசுப் பள்ளிகள் நமக்கு தெரியமலேயே இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது.

படிக்க:
கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !

இப்பள்ளிகள் பல அந்தந்த ஊர்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்களின் முன்முயற்சியால் சிறப்பாக நடக்கின்றன. அலங்காரங்கள் ஏதுமின்றி அழகாக செயல்படும் பள்ளிகளை நாம் முதலில் பார்வையிட வேண்டும்.இங்கே நாம் பார்ப்பது வேலூர் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி. தனியார் பள்ளிகளின் புரட்டு சாதனைகளை விளம்பரங்களாக திணிப்பார்கள். அரசுப் பள்ளிகளின் சாதனையை நாம்தான் பரப்ப வேண்டும்.

திருமால்பூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி – பசுமையாக இருக்கிறது.

பள்ளிக்கு ஆர்வத்தோடு வரும் மாணவர்கள்.

இன்முகத்தோடு காலை வணக்கம் செலுத்தும் மாணவர்கள். குறைவான மாணவர்கள் இருந்தாலும் அணிவகுப்பின் நேர்த்திக்கு குறைவில்லை!

“நீ ஏன் அந்த மாணவியுடன் பேசினாய்” என்று ஆண் மாணவர்களுக்கு தண்டனை கொடுக்கின்றன தனியார் பள்ளிகள். ஆனால், ஆண் – பெண் பேதமின்றி அருகருகே உட்கார வைத்து சமத்துவத்தைக் கற்றுக்கொடுக்கிறது அரசுப் பள்ளிகள்.

ஏழெட்டு பேர் பைக்குகளில் சாகசம் காட்டுவது, வானத்திலிருந்து பாதுகாப்பாக கடலில் விழுவது என ’சாகசங்களுக்காக’ பல கோடி ரூபாய்கள் செலவு செய்து கோட்டைகளில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. மறுபுறம், கரும்பலகைக்கு பெயின்ட் அடிக்கக்கூட வழியில்லாமல் இருந்தாலும் உற்சாகமாய்க் குடியரசைக் கொண்டாடும் அரசுப் பள்ளிகள்.

நீங்கள் நினைவுகூறும் பள்ளிப் பருவத்தின் இனிமைகளை உங்கள் குழந்தைகளும் சுவைக்க வேண்டுமா? வாருங்கள், அரசுப் பள்ளிகளை நோக்கி…

இன்றைய செய்தி, அறிவிப்புகள், பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் காலை வணக்க நிகழ்வில் உண்டு. பங்கேற்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பும் உண்டு.

படங்கள்: துன்மதி குமரவேல்

நீங்களும் புகைப்படம் அனுப்ப வேண்டுமா? அடுத்த வாரம் விளையாடும் குழந்தைகள் எனும் தலைப்பில் படமெடுத்து அனுப்புங்கள்! விவரங்களுக்கு இணைப்பை அழுத்துங்கள்!

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

 1. Inraiya kalathula intha mathiri nalla news padika romba santhoshama iruku…1000 privates schools open pannalum government schools la kathukara paadam…!!! ippo irukara generation ku puriyathu… Private schools la English la peasuna dhan gethu nu ippo irukara parents um private school la dhan avanga pasangala sekkaranga…Correct dhan but private schools la life enna nu solli kudukarathu illa… Government schools la naalu pasanga kuda sernthu padikum pothu paadamum kathupanga life ah enna nu therinjipanga… Ozhukam, mattaravarkalidam eppadi nadanthukanum la irunthu ellam therinjikalam… Na romba perumai padara government school la na padichanu… Wonderful lines #Thumathi… Congratulations dear… Keep rocking…Feeling proud to be a such wonderful friend like you… ❤️😊

 2. Inraiya kalathula intha mathiri nalla news padika romba santhoshama iruku…1000 privates schools open pannalum government schools la kathukara paadam…!!! ippo irukara generation ku puriyathu… Private schools la English la peasuna dhan gethu nu ippo irukara parents um private school la dhan avanga pasangala sekkaranga…Correct dhan but private schools la life enna nu solli kudukarathu illa… Government schools la naalu pasanga kuda sernthu padikum pothu paadamum kathupanga life ah enna nu therinjipanga… Ozhukam, mattaravarkalidam eppadi nadanthukanum la irunthu ellam therinjikalam… Na romba perumai padara government school la na padichanu… Wonderful lines #Thunmathi… Congratulations dear… Keep rocking…Feeling proud to be a such wonderful friend like you… ❤️😊

  • உங்கள் கருத்துக்களை பகிர்ந்தற்கு மிக்க நன்றி தோழியே…..

 3. இப் பள்ளிக்குழந்தைகளின் பெரும்பாலன பொற்றோர்கள் நெசவாளிகள். சென்னை-அரக்கோணம் அருகே உள்ள இக் கவரப்பேட்டையின் மூதாதைகர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நெசவு தொழிலாளர்கள். உலகப்புகழ்பெற்ற சங்கு மார்க்,கிப்ஸ் லுங்கிகளின் பிறப்பிடம் இது. பல கோடீஸ்வர தனியார் லுங்கி முதலாளிகள் இவர்கள் ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக துப்பிவிட்டார்கள். நெசவு தொழில் படுத்தவுடன் அம்முதலாளிகள் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு தாவி விட்டார்கள். தொழிலாளர்களோ போக்கிடம் இன்றி அத்துக்கூலிகளாக சென்னை,ஆந்திரா,பெங்களூர் என்று சிதறிவிட்டனர். இங்கு, இதுநாள்வரையில் பலர் உயிரை ரேசன் அரிசியும் 100 நாள் வேலையும்தான் காப்பாற்றுகிறது. அத் தொழிலாளர்களுக்கு இருக்கும் கடைசி சொத்து இம்மழலைகள்தான். அக்குழந்தைகளுக்கு,அரசுபள்ளி இல்லையென்றால் என்னாவது? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது

  • அரசு பள்ளி இல்லாமல் போய்விட கூடாது என்பதற்கான விழிப்புணர்வு தான் இது.

 4. பல அரசு பள்ளிகளை மூடும் இச்சூழலில் இது போன்ற கட்டுரைகள் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். தனியார் பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் மட்டுமே குறிக்கோள். அரசு பஸ் பள்ளிகளில் மாணவர் கோளின் புரிதல் ஒன்றே
  மையமாக உள்ளது.நானும் ஒரு அரசுப்பள்ளி மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். மேலும் இது போன்ற கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள் துண்மதி.

 5. அரசுப் பள்ளிகளின் நிலை உயர இது போன்ற கருத்துகள் உதவும். முந்தைய கருத்தில் உள்ள பிழைகளுக்கு மன்னிக்கவும்.

 6. பணம் கொடுத்து பெறும் நிலையில் கல்விக் கூடங்கள்.,வாங்குகிற பணத்திற்கு என்ன வேலை செய்கிறார்கள் என்ற எரிச்சலில் பெற்றோர்,நம்மை பெற்றோர் ஏதாவது கேட்பதற்கு முன் நாம் குழந்தைகளை பற்றி ஏதாவது கூறி விட வேண்டும் என்ற பதற்றத்துடன் ஆசிரியர்கள்,அப்பாடா,எப்படியோ,பிரச்சினை அவர்களோடு தீர்ந்து விடும் என்ற ஆசுவாசத்துடன் பணம் பெற்று கல்வி வழங்கும் கல்வியாளர்கள்,தனியார் பள்ளிகளின் நிலை இவ்வாறு இருக்க,; அனைவருக்கும் கல்வி என்னும் அறத்தை விழுதுகளாய் தாங்கி நிற்கும் அரசுப் பள்ளிகள்.தொண்டை நாடு,சான்றோர் உடையது,என்ற உண்மையை உணர வைக்கிறது.திருமால்பூர் அரசுப் பள்ளி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க