முகப்புசெய்திஇந்தியாஎதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

-

காஷ்மீர் முன்னெப்போதும் இல்லாத வகையில் அடக்குமுறையை சந்தித்து வருகிறது. ஜீரோ பிரிட்ஜ் முதல் விமான நிலையம் வரை, வாகனங்களின் சில அசைவுகள் தெரியும். மற்ற இடங்கள் முற்றிலுமாக எல்லைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன. நோயாளிகள் அல்லது ஊரடங்கு அனுமதி உத்தரவுகளைப் பெற்றவர்கள் மட்டுமே வெளியே செல்ல முடிகிறது.

ஒமர் அப்துல்லாவையோ, மெகபூபா முஃப்தியையோ அல்லது சாஜித் லோனையோ தொடர்பு கொள்ள முடியாது. அவர்களுக்கு தகவல் அனுப்பக்கூட முடியாது.

மற்ற மாவட்டங்களில், ஊரடங்கு மிகக் கடுமையாக உள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் எட்டு மில்லியன் மக்களும் சிறையில் அடைக்கப்பட்டதைப் போல் உள்ளதாகக் கூறலாம். இப்போது வரை உணவுக்கும் அத்தியாவசிய பொருட்களுக்கும் பற்றாக்குறை இல்லை.

ஷா ஃபைசல்.

மக்களுக்குத் தேவையான பொருட்களை ஒருங்கிணைக்க மட்டும் செயற்கைகோள் தொலைபேசிகள் பயன்படுத்துவதாக நிர்வாகத்தில் பணியாற்றும் நண்பர் ஒருவர் கூறினார். மற்றபடி தகவல்தொடர்பு முற்றிலும் இல்லை.

டிஷ் டிவி இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டுமே செய்தியை அறிய முடிகிறது. கேபிள் இணைப்புகள் சரிவர இயங்கவில்லை. பலருக்கு என்ன நடக்கிறது என்பதுகூட தெரியவில்லை. சில மணிநேரங்கள் வரை வானொலி வேலை செய்தது. பல மக்கள் தூர்தர்ஷனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தேசிய ஊடகங்களும்கூட உள்புற பகுதிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஸ்ரீநகரில் உள்ள எல். டீ. மருத்துவமனை தன்னுடைய திறனுக்கு அதிகமாக பணியாற்றிக்கொண்டிருக்கிறது. இறுதி நேர சிரமத்தை தவிர்க்க, கர்ப்பிணி பெண்கள் முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதியாகின்றனர். சிலர் அங்கே சமுதாய உணவுக்கூடங்களை நடத்தவும் திட்டமிட்டிருக்கின்றனர்.

இதுவரை எந்தவொரு வன்முறை சம்பவம் குறித்தும் தகவல் இல்லை. ராம்பாக், நதிபோரா, டவுண்டவுன், குல்காம், அனந்த்நாக் போன்ற இடங்களில் ஆங்காங்கே கல்வீச்சு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  உயிரிழப்புகள் குறித்த தகவல் ஏதும் இல்லை.

8,000 முதல் 10,000 வரையிலான உயிரிழப்புகளை சந்திக்கவும் அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோன்ற பெருந்திரள் படுகொலைக்கு நாம் வாய்ப்பு தரக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உணர்வற்று உள்ளனர். தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து அவர்களால் உணர முடியவில்லை. அனைவரும் தாம் எதையோ இழந்தற்காக அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

பலருடன் உரையாடியதில் 370-வது பிரிவை நீக்கியதைக் காட்டிலும் மாநில தகுதியை இழந்தது குறித்து ஆழமாக கவலை அடைந்துள்ளது தெரிகிறது. கடந்த 70 ஆண்டுகளில் இந்திய அரசு செய்த மிகப்பெரும் துரோகமாக இதைப் பார்க்கிறார்கள்.

அடக்குமுறையிலிருந்து தப்பித்த பல தலைவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் அமைதியாக இருக்கும்படி அழைப்பு விடுத்துள்ளனர். 8,000 முதல் 10,000 வரையிலான உயிரிழப்புகளை சந்திக்கவும் அரசு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அதுபோன்ற பெருந்திரள் படுகொலைக்கு நாம் வாய்ப்பு தரக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

என்னுடைய கருத்தும் அதுதான், நாம் உயிரோடு இருப்போம், அதன் பிறகு மீண்டும் போராடுவோம்.

பாதுகாப்புப் படையினரின் உடல் மொழி படுபயங்கரமாக உள்ளது. ஜம்மு – காஷ்மீர் போலீசு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டுவிட்டது. எனக்குத் தெரிந்த ஒருவரிடம் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர், “நாங்கள் இப்போது உங்களுடைய இடத்தை காட்டப் போகிறோம்” என சொல்லியிருக்கிறார்.

உள்ளூர்வாசிகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதைப் போன்ற செய்திகள் எனக்கு பல இடங்களிலிருந்து வந்தபடியே உள்ளனர். ஆனால், காஷ்மீரிகளின் அமைதி, மனம் ஈர்க்கக்கூடிய ஒன்றாக உள்ளது.

நிதர்சனம் என்னவென்றால் நரேந்திர மோடியும் அமித் ஷாவும் மட்டுமே நம்மிடமிருந்து பட்டப்பகலில் திருடிய செல்வத்தை ஒரு நாள் திரும்பத் தர முடியும்.

காஷ்மீருக்கு வர விரும்புகிறவர்கள், சில காலம் வராமல் இருப்பது நல்லது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும், ஊழல் மிக மோசமான நிலையில்தான் இருக்கும்.

விமான நிலையத்தில், மனது உடைந்த நிலையில் சில இளைஞர்களை சந்தித்தேன். அவர்கள் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டார்கள். நாம் அனைவரும் உச்ச நீதிமன்றம் சென்று முறையிட்டு, அநீதியை திரும்பப் பெற கேட்போம் என்றேன். நம்முடைய வரலாற்றையும் அடையாளத்தை இழக்க வைத்த அரசியலமைப்பற்ற சட்டங்களை எதிர்க்க அனைத்து அரசியல் கட்சிகளும் இங்கு உள்ளோம்.

இப்போதிருக்கும் நம்பிக்கை அது ஒன்றுதான். சர்வதேச சமூகம் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. எனவே, அவர்களிடமிருந்து நான் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நிதர்சனம் என்னவென்றால் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் மட்டுமே நம்மிடமிருந்து பட்டப்பகலில் திருடிய செல்வத்தை ஒரு நாள் திரும்பத் தர முடியும்.

படிக்க:
காயத்தில் உப்பைத் தடவாதீர்கள் : ஆளுநருக்கு காஷ்மீர் மாணவர்கள் கண்டனம் !
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !

ஆனால், அப்போது என்ன இழக்க வேண்டுமோ, அதை இழந்திருப்போம். அல்லது அனைத்தையுமே இழந்திருப்போம். மீண்டும் போராடும் துணிவு மட்டும் இருக்கும். நாம் அதைச் செய்வோம்.

கட்டுரையாளர் : ஷா ஃபைசல்
தமிழாக்கம் : கலைமதி

நன்றி : தி வயர்.