முகப்புசெய்திஇந்தியாதீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !

இந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், கடனளிக்கும் நிதி நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறையில் தேவை மற்றும் நுகர்வில் சரிவு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

-

ந்த ஆண்டு நுகர்வோர் பொருட்களுக்கான பண்டிகைக்கால விற்பனை படுமோசமாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்தக் காலாண்டில் மிகப்பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 125 நிறுவனங்களில் சுமார் 60%-க்கும் மேலான நிறுவனங்கள் கடந்த ஜூன் வரையிலான காலாண்டில் அவர்கள் முன்னனுமானித்த இலாபத்தை அடையாமல் இழந்திருக்கிறார்கள். இந்த 60% என்பதுதான் கடந்த 2016-ம் ஆண்டிலிருந்து காலாண்டு இழப்பு ஏற்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் அதிகமாகும்.

Economic Crisisஇந்தியாவின் வாகன உற்பத்தி நிறுவனங்களும், கடனளிக்கும் நிதி நிறுவனங்களும், ஆட்டோமொபைல் துறையில் தேவை மற்றும் நுகர்வில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை மணியை அடித்துள்ளன.

பொதுவாகவே, பண்டிகைக் காலங்கள் சிறப்பான வியாபார காலகட்டமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் விஜயதசமியில் தொடங்கி அக்டோபரில் தீபாவளி மற்றும் டிசம்பரில் கிறிஸ்துமஸ் வரையில் நீடிக்கும் பண்டிகைக்காலம், அதிகபட்ச வியாபாரத்தை அளிக்கும். ஆனால் இந்த ஆண்டு தீபாவளி இருள் கவிழ்ந்ததாக இருக்கப் போகிறது என்கிறார், சாம்கோ காப்பு நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவு தலைவர் உமேஷ் மேத்தா.

குறிப்பாக இந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான இந்தியப் பொருளாதார வளர்ச்சி கடந்த நான்காண்டுகளில் இல்லாத அளவிற்கு மந்தமாகவே இருந்திருக்கிறது. தவறான காலத்தில் பெய்த பருவமழை, அதிக வேலைவாய்ப்பின்மை மற்றும் வங்கித்துறை பிரச்சினைகளையொட்டி வந்த பணப்புழக்க நெருக்கடி ஆகியவை பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மைக்கு கூடுதலாக பங்களிப்பு செலுத்தியிருக்கின்றன.

இந்த நிலைமை குறித்து நிதி ஆலோசகர்கள், மற்றும் பல்வேறு தொழில்துறை நிறுவனங்களின் வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

படிக்க:
நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்
♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

“தற்போது நிலவும் மந்தநிலை காரணமாக நுகர்வோர்கள் புதிய பொருட்கள் வாங்குவதைத் தள்ளிப்போட்டுவிடுகின்றனர்” என்கிறார், குவாண்டம் காப்பு நிறுவனங்களின் இயக்குனர் நீரஜ் தெவான்

“தற்போதுள்ள பொருளாதார நிலை காரணமாக தேவையானது குறைவாகவே இருக்கும்” என்று நுகர்வோர் பொருள் ஜாம்பவானான இந்துஸ்தான் யுனிலீவர் தெரிவித்துள்ளது.

இந்திய பங்குச் சந்தையான நிஃப்டியின் புள்ளிகள், ஆசியாவின் பிறநாடுகளின் பங்குச் சந்தைகளின் பட்டியலில் கீழிருந்து நான்காவது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் நிஃப்டி புள்ளிகள் தொட்ட அதிகபட்ச அளவிலிருந்து இப்போது 10%-க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

Auto-sales-fallஅதே போல சந்தையின் தேவையின் வீழ்ச்சியால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்  கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மாத விற்பனை 17 முதல் 20% ஆட்டோமொபைல் விற்பனை சுருங்கிவிட்டது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கார்களின் விற்பனை 30% குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில், வருமானத்தில் முதலில் இருக்கும் டாட்டா மோடார்ஸ் நிறுவனம், ஜுன் வரையிலான கடந்த காலாண்டில், எதிர்பார்த்ததை விட பெருமளவிலான இழப்பைச் சந்தித்தது. அதன் போட்டி நிறுவனமான மாருதி சுசுகி விற்பனையில் 18%-ஐ இழந்துள்ளது.

அசோக் லேலாண்ட் நிறுவனத்தின் நிதிப்பிரிவு தலைவர் கோபால் மகாதேவன் கூறுகையில், “இது பொதுவான பொருளாதாரப் பிரச்சினை, சந்தையின் தேவைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல” என்கிறார்.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

மொத்த உலகப் பொருளாதாரமும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே வீழ்ச்சியில் இருக்கும் இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக அமெரிக்க டிரம்ப் நேற்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. குறிப்பாக “இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் என்று கூறிக் கொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் பல்வேறு சலுகைகளை அனுபவிக்கின்றன. அவர்கள் வளர்ந்து விட்டார்கள். இத்தகைய சலுகைகளை நிறுத்த வேண்டும்” என்று கூறியிருக்கிறார். அமெரிக்க பாசிசக் கோமாளி இந்தியாவிற்கு அடுத்து என்ன சூனியம் வைக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

இந்த நாட்டில் 1947-ல் இருந்தே இது போன்ற நெருக்கடிகள் மட்டும்தான் சுதந்திரமாகத் திரிகின்றன. பொருளாதாரம் என்றும் ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாகவே இருக்கிறது !


நந்தன்
நன்றி : தி வயர்

  1. தற்போதைய நிலையில் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது வங்கி அல்லாத கடன் நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன உதாரணத்திற்கு dhfl என்ற நிறுவனம் கூடிய விரைவில் திவால் நோட்டீஸ் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.பிஸ்னல் நிறுவனமும் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது இதற்கு முக்கிய காரணம் ஆளும் அரசின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இவர்கள் தங்கள் கையிருப்பில் உள்ள நிலங்களை வணிகரீதியான பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அந்த நிறுவனத்தை லாபகரமாக ஆற்ற இயலும் ஆனால் ஆனாலும் மத்திய அரசின் அதிகாரிகளும் அமைச்சர்களும் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர் இதற்கான உண்மையான காரணம் அனேகமாக bsnl ரிலையன்ஸ் நிறுவனத்திடம் விற்றுவிட வேண்டும் என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம் விரைவில் இந்த நிறுவனத்தை நஷ்டம் நிறுவனம் ஒரு சொல்லி என்று சொல்லி இதனை நடத்துவது அரசிற்கு லாபகரமானது அல்ல என்று மக்களை நம்ப வைத்து பிறகு இந்த நிறுவனத்தை ரிலையன்ஸ் இடம் விற்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன் அதுவும் குறைந்த விலைக்கு விற்றுவிடுவார்கள் என்று நினைக்கிறேன்

  2. ”கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் கார்களின் விற்பனை 30% குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.”
    What about price of the Cars?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க