Wednesday, May 12, 2021
முகப்பு செய்தி இந்தியா பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

பசுக்கள் நிறைய பால் கறக்க கண்ணனைப் போல் குழல் ஊதுங்கள் !

“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார்.

-

மாடுகள் அதிகமாக பால் கறக்க புல், தீவனத்தை தருவார்கள். சிலர் ஹார்மோன் ஊசியைப் போட்டுக்கூட பால் கறப்பதுண்டு. இவற்றைச் செய்தால் நிச்சயம் பால் ஓரளவு அதிகமாகவே கிடைக்கும். ஆனால், பாஜக – ஆர்.எஸ்.எஸ் விஞ்ஞானிகளைப் பொறுத்தவரை, பால் அதிகமாகக் கறக்க வேண்டுமென்றால் ‘கண்ணனைப் போல’ புல்லாங்குழல் ஊத வேண்டுமாம். எந்த பரிசோதனை சாலையில் இதெல்லாம் கண்டுபிடித்தார்கள் என்று கேட்டால், நாக்பூர் பசுமாட்டு சிறப்பு பரிசோதனைக் கூடத்தில் என்று சொன்னாலும் சொல்வார்கள்.

அசாமின் சில்சார் தொகுதியிலிருந்து இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திலீப் குமார் பால், கண்ணன் (கடவுள் கண்ணன்) இசைத்த சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு அதிகமாக பால் கறக்கும் என்கிறார்.

அசாமின் சில்சார் தொகுதி எம்.எல்.ஏ திலீப் குமார் பால்

“கடவுள் கண்ணன் இசைத்ததைப் போல சிறப்பு ராகத்தில் புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும். இது நவீன அறிவியலாளர்கள் நிரூபித்தது” என்கிறார் திலீப் குமார். அவர் சொல்லும் ‘நவீன அறிவியலாளர்கள்’ உள்ள சிறப்பு பரிசோதனைக்கூடம் நாக்பூரில் உள்ளதாக இருக்கலாம்.

“இது பண்டைய காலத்தில் அறிவியலாக இருந்தது. இந்த நுட்பத்தை இந்த நவீன காலத்தில் நாங்கள் மீண்டும் கொண்டு வரப்போகிறோம்” என அறைகூவல் விடுக்கிற திலீப் குமார், “நான் ஒன்றும் விஞ்ஞானி அல்ல, ஆனபோதும் எனக்கு இந்திய பாரம்பரியம் குறித்த அறிவு இருக்கிறது. நான் சொன்னது உண்மைதான், அறிவியலாளர்கள் இப்போது இதுபோன்ற கருத்துக்களை நம்ப ஆரம்பித்துவிட்டார்கள்” என்கிறார் பெருமிதமாக.

படிக்க:
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
♦ கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

2014-ம் ஆண்டு சில்சார் தொகுதியில் இடைத் தேர்தலில் வெற்றி பெற்று, குறுகிய காலத்தில் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவியை 39 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டார். பெங்காலி பேசும் எம்.எல்.ஏ-வுக்கு அசாமில் கிடைத்த அரிதான வெற்றியாம் இது.

நீண்ட கால ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ள இவர் அசாமில் பெங்காலி பேசும் மக்கள் அதிகமாக உள்ள பராக் பள்ளத்தாக்கிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இந்தப் பகுதியில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் அடிப்படையில் இது வரையில் நான்கு லட்சம் பெயர்கள் விடுபட்டுள்ளன. அதுகுறித்தெல்லாம் கவலைப்படாத திலீப் குமார், பசு மாடு அதிகமாக பால் கறக்க வேண்டும் என கவலை கொள்கிறார்.

கடந்த ஆண்டு காங்கிரசின் மகளிர் அணி தலைவரும் சில்சார் எம்பி-ஆக இருந்தவருமான சுஷ்மிதா தேவ், ஆண் தொண்டர் ஒருவருடன் பைக்கில் போராட்டத்துக்காக வந்தபோது, ‘சில்சாரின் களங்கம்’ என்றும் ஐம்பது வயதாகியும் திருமணம் ஆகாதவர் என்றும் அவரை கேலி செய்தார் இந்த எம்.எல்.ஏ.

சமீபத்தில் ‘ஆடிட்டர் அறிவுஜீவி’யும் ரஜினியின் அரசியல் வழிகாட்டியுமான குருமூர்த்தி 30 சதவீத பெண்கள்தான் பெண் தன்மை உள்ளவர்கள் என சொன்னார். பெண் வெறுப்பும், பிற்போக்குத்தனமும் சேர்ந்த கலவைதான் நாக்பூரின் வார்ப்புகளான காவிகளின் அடிப்படை குணம்.

கும்பல் வன்முறையில் ஈடுபடும் அடிமட்ட குண்டர் முதல் அமைச்சர், ஆடிட்டர் வரை காவிகள் அனைவரும் இந்த விசயத்தில் ஒரே கருத்தைத்தான் சொல்வார்கள். ஏனெனில் காவிகள் மக்களிடம் விதைக்க நினைப்பது வெறுப்புணர்வையும் அடிமைத்தனத்தையும் தானே !

வினவு செய்திப் பிரிவு

கலைமதி
நன்றி:  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

  1. புல்லாங்குழல் இசைத்தால் மாடுகள் பல மடங்கு பால் கறக்கும் …சரி..சரி…எதை இசைத்தால் நல்ல முறையில் அது வரும் …அடுத்தமுறை மறக்காம கூறிடுங்க ..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க