முகப்புசெய்திஇந்தியாபொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார், நிர்மலா சீதாராமன்.

-

டிப்படையான எட்டு தொழில்துறை பிரிவுகளில் கடந்த ஆண்டு ஜூலையில் 7.3%-மாக இருந்த வளர்ச்சி இந்த ஆண்டு ஜூலையில் 2.1%-மாக குறைந்துவிட்டதாக அரசு வெளியிட்ட தரவுகளே தெரிவிக்கின்றன.

நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு,  உரம், எஃகு, சிமெண்ட் மற்றும் மின்சாரம் உள்ளிட்ட முக்கியமான 8 தொழில்துறைப் பிரிவுகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த விவரம் நேற்று (செப்-2, 2019) அரசால் வெளியிடப்பட்ட தரவுகளில் இருந்து எடுக்கப்பட்டது.

இத்தகவலின்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் சுத்திகரிப்புப் பண்டம் ஆகியவற்றின் உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் இறங்குமுகமாக வீழ்ச்சியை நோக்கியே சென்றிருக்கிறது.

இங்கு குறிப்பிடப்படும் 8 தொழில்துறைப் பிரிவுகளில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 5.9%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3%-மாக சரிந்தது.

இந்த 8 அடிப்படை தொழிற்துறைப் பிரிவுகளும் தொழிற்சாலை உற்பத்திப் பட்டியலில் (Index of Industrial Production (IIP)) உள்ள பண்டங்களின் பங்கில் சுமார் 40.27% பங்களிக்கின்றன.

எஃகு தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு (2018) ஜுலையில் 6.9%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 6.6%-மாகவும், சிமெண்ட் தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு ஜுலையில் 11.2%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 7.2%-மாகவும், மின்சார தொழிற்துறைப் பிரிவில் கடந்த ஆண்டு ஜுலையில் 6.7%-மாக இருந்த வளர்ச்சி, இந்த ஆண்டில் 4.2%-மாகவும், சரிந்துள்ளது.

இருப்பினும், உரத் தொழிற்துறைப் பிரிவில் மட்டும் கடந்த ஆண்டு ஜூலையில் 1.3%-மாக இருந்த வளர்ச்சி, ஓரளவு முன்னேறி 1.5%-மாக வளர்ந்திருக்கிறது.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

ஏப்ரல் – ஜூலை காலகட்டத்திற்கான வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரையில், இந்த 8 தொழிற்துறைப் பிரிவுகளிலும், கடந்த 2018-ம் ஆண்டு இதே காலகட்டத்திலிருந்த 5.9% வளர்ச்சி இந்த ஆண்டில் 3%-மாக –அதாவது, கிட்டத்தட்ட பாதியாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், இந்த அடிப்படையான 8 தொழிற்பிரிவுகளின் வளர்ச்சி விகிதம் சரிவைக் கண்டுவருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் 5.8%-மாக இருந்த வளர்ச்சி விகிதம், ஏப்ரல் மாதத்தில் 5.2%-மாகவும், மே மாதத்தில் 4.3%-மாகவும், ஜூன் மாதத்தில் 0.7%-மாகவும் சரிந்தது.

உற்பத்தி மற்றும் நுகர்வின் அளவு குறைந்து அதன் காரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவீட்டில் சரிவு ஏற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து இத்தகவல்கள் வெளியாகின்றன. கடந்த 25 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மொத்த உள்நாட்டு  உற்பத்தி (GDP) 5%-மாகக் குறைந்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (GDP Rate) தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. கடைசியாக மார்ச் 2013-ம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.3%-மாக இருந்தது. அதுதான் மிகவும் குறைவான அளவாக இருந்தது. தற்போது அதனை நெருங்கி வந்துகொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்த வீழ்ச்சி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் பரந்துபட்ட பலவீனத்தின் வெளிப்பாடாகவே இருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டின் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் 12.1%-மாக இருந்த உற்பத்தி வளர்ச்சி,  இந்த ஆண்டு ஏப்ரல் – ஜுன் காலாண்டில் 0.6%-மாக இருக்கிறது. விவசாயம், வனம் மற்றும் மீன்பிடித்துறைப் பிரிவில் கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இருந்த 5.1% வளர்ச்சியானது, இந்த ஆண்டு 2.0%-மாகக் குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் பொருளாதார வீழ்ச்சி உச்சத்தை எட்டி உள்ள நிலையிலும், இந்தியாவின் ’முதல் பெண் நிதித்துறை அமைச்சரான’ நிர்மலா சீதாராமன், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். பொருளாதார மந்தநிலை குறித்து நிருபர்கள் கேள்விகேட்டால்கூட, கேமராவுக்கு முன்னேயே அதிகாரத் தொனியில் மிரட்டி அவர்களை வாய்மூடச் செய்கிறார். நிருபர்கள் வாயை மூடலாம். நடுக்கடலில் கப்பலில் விழுந்த ஓட்டையை மறைக்க முடியுமா என்ன ?


நந்தன்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

 1. இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த வேண்டும் என்பது தானே உங்களின் அடிப்படை நோக்கம் அதற்காக தானே ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை பற்றி பொய்களை பரப்பி பல ஆயிரம் தொழிலாளர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வந்து இருக்கிறீர்கள், ஹைட்ரோகார்பன் (கச்சா எண்ணெய்) உற்பத்தி, மீத்தேன்(இயற்கை எரிவாயு) உற்பத்தி வீழ்ச்சியை பற்றி பேசி கொண்டே, ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க கூடாது என்று பொய்களை மக்களிடம் பரப்பி போராட்டங்கள். அணு உலை வந்தால் எதிர்ப்பு, சரி அணு உலை வேண்டாம் என்று சூரிய மின்சாரம் கொண்டு வந்தால் விளைச்சல் மேய்ச்சல் நிலங்கள் பறிபோய்விட்டது என்று எதிர்ப்பு.

  கேட்டால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நாசம் செய்வதற்கு பெயர் புரட்சி புடலங்காய் என்று சொல்கிறீர்கள்.

  இந்திய பொருளாதாரத்தை வீழ்த்த வேண்டும் என்ற உங்களின் நோக்கம் வெற்றி பெற்றதற்காக சந்தோஷப்படுங்கள். உங்கள் சீனா பாக்கிஸ்தான் எஜமானர்கள் இன்னும் ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பார்கள்.

  போலித்தனம் நயவஞ்சகம் உனது பெயர் தான் இந்திய கம்யூனிசமோ ???

  • கொஞ்சம் நாளா ஆளைக் காணோமே மாட்டுமூளை மணிகண்டா..! காஷ்மீர்ல இடம் வாங்கி கொடுக்க மாமா வேலை பார்க்க போயிருந்தியா? இங்கே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பைப் பற்றி பேசிக்கிட்டு இருக்குற போது நாசகார ஸ்டெர்லைடால வேலை இழந்த ஆயிரம் பேரைப் பத்தி பேசி ஸ்டெர்லைட் முதலாளி காலை நக்குற… ஏற்கனவே இருக்குற நிறுவனங்களிலே உற்பத்தி ஏன் குறையுதுன்னு கேட்டா புதுசா ஹைட்ரோகார்பன் உற்பத்தி பண்ண விடமாட்டேங்கிறீங்க ன்னு பேசுற..
   உங்களுக்கெல்லாம் ஆண்டவன் மூளைய உட்கார்ற இடத்துல படைச்சுட்டானா..?

   • சார் பல ஆயிரம் பேர் வேலை செய்த ஆலையை பொய் சொல்லி மூடியது தவறு என்பதே எனது வாதம், அதனால் பாதிக்கபட்ட குடும்பங்களை பற்றி உங்களை போன்றவர்கள் சிந்திப்பதும் இல்லை. மேலும் இந்த மாதிரி பொய்களை சொல்லி மக்களை தூண்டி விட்டு போராட்டம் என்ற பெயரில் அமைதியின்மையை கம்யூனிஸ்ட்கள் கொண்டு வருவதற்கு காரணம் தேசத்தின் பொருளாதாரத்தை நாசம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான்.

    கம்யூனிஸ்ட்களின் இந்திய விரோத (மக்கள் விரோத) செயல்களை பற்றிய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

  • புரிந்து கொள்ளமுடியாதற்கு காரணங்களில் ஒன்று அறியாமை, மற்றொன்று மேதாவித்தனம் இதில் உங்களுக்கு எது?
   அடித்தட்டு மக்கள் நாங்கள் படும் துன்பத்திற்கு அளவே இல்லை, நாங்கள் ஓடியாடி உழைத்து சேர்க்கும் பணம் உண்பதற்கும் ,அத்தியாவசிய செலவிற்குமே போதவில்லை.
   வல்லரசு கனவு ,வளர்ச்சி, என்ற தெனாலிராமன் குதிரைக்கு கட்டிய புல்லுக்கட்டை காட்டியே இதுவரை கொண்டுவந்துவிட்டீர்கள். எங்களால் சிறுதொழில்கள்,சிறுவணிகம்,விவசாயம் உள்ளிட்ட தொழில்களை தொடர்ந்து செய்ய முடியவில்லை.
   புதிதாக தொடங்கவும் முடியவில்லை.
   குழந்தைகளை கடன்வாங்கி படிக்க வைக்க பயமாக உள்ளது. வேலை கிடைப்பதில்லை. வேலை இழப்பு, வேலைநீக்கம் அதிகரிக்கிறது.
   கடன் வாங்கவும் முடிவதில்லை, வாங்கிய கடனை கட்டவும் முடியவில்லை.
   கல்விகடனை வசூலிக்க ரிலைன்ஸ் வட்டிக்காரனிடம் ஒப்படைத்து விட்டீர்கள்,அவன் எங்களை தற்கொலைக்கு தள்ளுகிறான். குடிக்கும் தண்ணீர் கூட விலைகொடுத்து வாங்குகிறோம்.மழைக்கு வரிவிதித்த ” சூயஸ்” நிறுவனம் தண்ணீர் விநியோகம்.இது கூடவா வல்லரசு கனா காணும் நம்மால் முடியாது.
   தொழில் வளர்ச்சி என்று எங்கள் நிலம்,நீர் ,மின்சாரம்,வங்கி கடன் எல்லாம் கொடுத்தோம்.தேவை முடிந்தவுடன் நட்டம் என்று நடையை கட்டிவிட்டான் .மீண்டும் அவர்களை கொண்டுவர வெளிநாட்டு சூறாவளி பயணங்கள்.
   கடன் வாங்கியும் வயிறு கழுவ முடியாத எங்களுக்கு, சிபுல் ஸ்கோர்-கடன் மறுப்பு-சம்மன்-ட்ராக்டர் பறிமுதல்-நிலம்,வீடு,கடை பறிப்பு…
   வெளிநாடு தப்பித்தவர்கள், உல்லாச வாழ்க்கையோடு செய்தி ஊடகங்களிடம் உலகறிய பேட்டி கொடுக்கும்போது நீங்கள் வலைவீசி தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்.

   இயற்க்கை அழித்து, வாழ்வாதாரம் அழித்து, உரிமை அழித்து நாளைய “சொர்க்கத்திற்கு”எங்கள் வாழ்க்கை நரபலி .
   எதிர்த்தால்,மறுத்தால் சிறை, வழக்கு இது ஜனநாயகமோ?

   சொல்லாமல் விட்டவை பல உண்டு.

   “அறிவு”ஜீவிகள், அறிவு”ஜீவிகள்” இவற்றையெல்லாம் பார்க்க மறுப்பார்கள்.
   நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள மக்களிடம் போய் கேட்டு பாருங்கள், நடந்துகொண்டிருப்பது “வளர்ச்சியா” ? இல்லை வீழ்ச்சியா ?என்று…

   • நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை…

    நீங்கள் சொல்லும் விஷயத்திற்கும் ஸ்டெர்லைட் ஆலையை பொய்களை பரப்பி மூடியதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது ? நீங்கள் சொல்வது போலவே வைத்துக்கொள்வோம் ஏன் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்தவன் எல்லாம் மனுஷன் இல்லையா ? அல்லது ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்தவன் எல்லாம் மிக பெரிய செல்வந்தனா ? அவனும் நம்மை போல் முதல்தலைமுறையாக சம்பாதிக்க ஆரம்பித்த அடித்தட்டு மக்களில் ஒருவன் தானே அவனுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் இருக்கிறது தானே அவனும் உங்களை போல் கடன் வாங்கி படித்தவன் தானே…

    ஏன் ஸ்டெர்லைட் ஆலையில் வேலை செய்த தொழிலாளியை பற்றி சிந்திக்காமல் பொய்களை பரப்பி அந்த ஆலையை மூடினார்கள் என்பது தான் எனது கேள்வி.

    கம்யூனிஸ்ட்களின் மனசாட்சியற்ற பொய்கள் தூத்துக்குடியில் அப்பாவி மக்களின் உயிரையும் பறித்து இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

 2. “மாட்டுமூளை” மணிகண்டா…கார்த்திகேயன் நண்பா மாடு பாவமில்லையா?

  • nepolian நண்பரே..! நமக்குதான் நாலாபுறமும் அழுத்தம். கோபப்பட்டு வைவதற்கு கூட வார்த்தைகளை தேடவேண்டியிருக்கு.
   ஆனால் இவனுங்களை பாருங்க..! மனநலம் பாதிக்கப்பட்டவன் ரோட்டுல நடந்து போய்க்கிட்டு இருக்கும்போதே வயித்தால போன மாதிரி எழுதிக்கிட்டு போய்க்கிட்டே இருக்கான்..!

   • இந்திய தேசத்தை நாசம் செய்வதையே நோக்கமாக வைத்து இருக்கும் கம்யூனிஸ்ட்களிடம் அடிப்படை நேர்மையோ மனிதத்தன்மையோ இல்லை அதனால் தான் உங்களால் நேர்மையாக வாந்தங்களை வைக்க முடிவது இல்லை.

 3. விடுங்க கார்த்திகேயன் நண்பா … ஸ்டெர்லைட் முதலாளி மணிகண்டன் அவர்களோடு நமக்கென்ன பேச்சு..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க