privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !

காஷ்மீரிகளை ஒடுக்காதே ! பஞ்சாப் விவசாயிகள் போராட்டம் !

நாற்பது நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தார்மீக உணர்வுடன் காஷ்மீர் பிரச்சினையில் மக்கள் பக்கம் நிற்கிறார்கள்.

-

ங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தாங்களே முடிவெடுக்கும் உரிமையை காஷ்மீரிகளுக்குத் தரவேண்டும் என பஞ்சாப் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதிந்தாவில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கிய மத்திய அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து செப்டம்பர் 10-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

punjab farmers protest for kashmir
காஷ்மீர் மக்களின் உரிமை பறிப்புக்கு எதிராக போராடும் பஞ்சாப் விவசாயிகள்.

போராட்டத்தின் போது பேசிய சங்கப் பிரதிநிதிகள், “காஷ்மீரிகளுக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும். மக்களை கொள்ளையடிக்க கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியிருக்கும் சுதந்திரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். காஷ்மீரில் போடப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும். இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தினர்.

பாரத கிசான் யூனியன் ஏக்தா உக்ரகான் என்ற விவசாய சங்கம் நடத்திய போராட்டத்தில்தான் அச்சங்கத் தலைவர்கள் இவ்வாறு பேசினர்.

இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில், “கடந்த 72 ஆண்டுகளாக ஆளும் கட்சிகள் காஷ்மீர் மக்களை ஒடுக்கிவருகின்றன. இராணுவத்தை அங்கே அனுப்பும்போது, அங்கே அமைதி திரும்பியவுடன் காஷ்மீரிகள் எந்த நாட்டுடன் இணைய விரும்புகிறார்களோ அல்லது தனி நாட்டை அமைக்க விரும்பினாலும் அதற்கான உரிமை தரப்படும் என சொல்லப்பட்டது” என்றனர்.

படிக்க:
காஷ்மீர் : ஸ்ரீநகர் மத்திய சிறை வாயிலில் காத்து நிற்கும் குடும்பங்கள் !
♦ காஷ்மீர் : ஓட்டுப் போடக் கூறி பிரச்சாரம் செய்த வழக்கறிஞர் சிறையில் !

“படைகளைப் பயன்படுத்தி பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் காஷ்மீரை ஒடுக்கிவருவதாகவும் அவர்கள் குற்றம்சுமத்தினர். அதோடு, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் தலித்துகளையும் சிறுபான்மையினரை குறிவைத்துத் தாக்குவதாகவும் சாடினர்.

தங்களுடைய குடும்பங்களுடன் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு போதிய உதவிகளை பஞ்சாப் அரசு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

நாற்பது நாட்களுக்கும் மேலாக காஷ்மீர் முடக்கப்பட்டுள்ள நிலையில் பஞ்சாப் விவசாயிகள் தார்மீக உணர்வுடன் காஷ்மீர் பிரச்சினையில் மக்கள் பக்கம் நின்றிருக்கிறார்கள். நாடு பிடிக்கும் ஆசையில் உள்ள இந்திய பொதுப்புத்தி அங்குள்ள மக்களின் விடுதலை குறித்து எப்போது சிந்திக்கப்போகிறது?


கலைமதி
நன்றி
: த ட்ரிப்யூன்.