அறிவியலுக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரான
பகவத்கீதை மற்றும் புராணக்கதைகளை
பொறியியல் பாடத்திட்டத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் CEG, ACT, SAP மற்றும் MIT வளாகங்களில் படிக்கின்ற மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் யோகா, பகவத்கீதை, உபநிடதங்கள் மற்றும் புராணக் கதைகளை கட்டாய பாடமாக்கியுள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இவற்றை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு Stress management and Yoga (AD5094), Essence of Indian Knowledge Tradition (AD5097), Personality development through life enlightenment Skills (AD5095) Lomoji Philosophy (HM5302) ஆகிய பாடங்கள் மூலம் சேர்த்துள்ளனர். இப்பாடங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (AICTE) வழிகாட்டுதலின் படியே அமல்படுத்தியிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சிறந்து விளங்குகின்ற அண்ணா பல்கலைக்கழகத்தில் அறிவியல் கண்ணோட்டத்தை மறுக்கக்கூடிய, வர்ண – சாதி ஏற்றதாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் நியாப்படுத்துகின்ற பகவத் கீதை, வேத -புராணக்கதைகளை பாடமாக வைத்துள்ளதை பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கண்டிப்பதோடு பல்கலைக்கழக நிர்வாகம் அப்பாடங்களை உடனடியாக நீக்க வேண்டும் எனவும் CCCE கோருகிறது.
நான்காவது தொழில் புரட்சிக்கு தேவையான தகுதியும் திறனையும் கொண்ட மாணவர்களை உருவாக்க வேண்டும் எனக்கூறி 2018-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாதிரி பாடத்திட்டத்தை AICTE வெளியிட்டது. அப்பாடத்திட்டத்தின் வாயிலாக இந்தியாவிலுள்ள மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் பகவத் கீதை, யோகா, உபநிஷத்துக்கள், வேதங்கள் மற்றும் இவற்றில் சொல்லப்பட்டுள்ள போலி அறிவியல் கருத்துக்களையும் பாடமாக வைத்திருக்கிறது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சமஸ்கிருதத்தை பரப்புவதற்காக முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி தலைமையில் குழுவை அமைத்தது. அக்குழுவோ “Vision and Road Map for the Development of Sanskrit-Ten year perspective plan” என்ற அறிக்கையை சமர்பித்தது. அதில் உயர் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம், யோகா, வேத -புராணக் கதைகளை பாடமாக வைக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. அக்குழுவின் பரிந்துரைப்படி IIT மற்றும் NIT களில் சமஸ்கிருதம் மற்றும் புராணங்களில் உள்ளதாக சொல்லப்படுகின்ற போலி அறிவியல் தொடர்பான பாடப்பிரிவுகளை விருப்பப்பாடமாக வழங்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே பொறியியல் கல்லூரிகளிலும் இந்தப் பாடங்களை விருப்பப் பாடங்களாக அறிமுகப்படுத்தியுள்ளனர்.
‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன், அவரவருக்கு வகுக்கப்பட்ட தொழிலை மீறுவது குற்றம்’ என வர்ண – சாதிய பாகுபாட்டையும் ஒடுக்குமுறையையும் போதிக்கின்ற புத்தகமே பகவத்கீதை . மேலும் அணு (Atom) கண்டுபிடுப்பு, புவிஈர்ப்பு விசை, ஆகாய விமானம், தொலைக்காட்சி பெட்டி, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை, சோதனைக் குழாய் குழந்தை முறை போன்றவையெல்லாம் புராண காலத்திலேயே இருந்தது என்ற வாதங்களெல்லாம் அறிவியல் ஆதாரங்கள் இல்லாத கற்பனை கதைகளே. இருப்பின் தங்களின் இந்து ராஷ்ட்ரா கனவிற்கு ஆதரவான கருத்து நிலையை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தோடு கடந்த ஐந்து வருடங்களாக சமஸ்கிருதம் மற்றும் வேத – புராண குப்பைகளை பள்ளிகல்வி உயர்கல்வி பாடத்திட்டத்தில் கட்டாயமாக்கி வருகிறது மத்திய அரசு.
படிக்க:
♦ பகவத் கீதையை தடை செய் !
♦ நூல் அறிமுகம் : இந்திய வரலாற்றில் பகவத்கீதை
இந்துத்துவ மேலாதிக்கத்திற்காக உயர்கல்வி நிறுவனங்களில் திணிக்கப்படும் கீதை – வேத – புராண குப்பைகளுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும். மேலும் RSS-BJP-ன் இந்துராஷ்ட்ரா திட்டத்தின் ஓர் அங்கமான உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியமாகும்.
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
தொடர்புக்கு: 9444380211, 9489235387, 9600582228
பேரா. வீ. அரசு, ஒருங்கிணைப்பாளர், CCCE- சென்னை.
பேரா. மன்சூர், திருச்சி, ஒருங்கிணைப்பாளர், CCCE-திருச்சி.
பேரா. அமலநாதன், ஒருங்கிணைப்பாளர், CCCE-நெல்லை.
பேரா. கதிரவன், சென்னை.
பேரா. சிவக்குமார், சென்னை.
பேரா. கருணானந்தன், சென்னை.
பேரா. அருணாச்சலம், திருச்சி.
பேரா. மருதை, திருச்சி.
பேரா. மதிவாணன், திருச்சி.
பேரா. அய்யம்பிள்ளை, திருச்சி.
பேரா. சோமசுந்தரம், நெல்லை.
முனைவர். ரமேஷ், சென்னை.
Vanakamu tholar what’s up erudha enai add panunga Tholar