Monday, October 7, 2024
முகப்புசெய்திஇந்தியாமுறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

முறைகேடுகள் : அம்பலப்படுத்தும் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் !

முந்தைய குற்றச்சாட்டை ஒப்பிடும் போது தற்போதைய குற்றச்சாட்டில் உறுதியான சான்றுகள் இருப்பதாகவும், நிர்வாக குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இன்கவர்ன் (InGovern) கூறியிருக்கிறது.

-

ந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் வருவாய் மற்றும் இலாபங்களை உயர்த்துவதற்காக “முறைகேடான நடவடிக்கைகளில்” தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் ஈடுபட்டதாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (US Securities and Exchange Commission) மற்றும் இன்போசிஸ் நிர்வாக குழுவிற்கு (Infosys Board) நிறுவனத்தின் முறைகேடுகளை உள்ளிருந்து அம்பலப்படுத்தும் ஒரு குழு புகார் அளித்துள்ளது. இதற்கான உறுதியான சான்றுகள் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் இன்போசிஸ் நிர்வாக குழுவிற்கு 2019, செப்டம்பர் 20-ம் தேதி இந்தக் குழுவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. மேலும் 2019, அக்டோபர் 3-ம் தேதியில் குரல் பதிவுகள் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் மற்றுமொரு மின்னஞ்சலும் அனுப்பபட்டது.

பெரிய ஒப்பந்தங்களுக்கான மதிப்பாய்வுகளையும் ஒப்புதல்களையும் புறக்கணித்து ’அனுமானங்களின்’ அடிப்படையில் இலாபத்தை அதிகரித்துக் காட்ட தன்னுடைய முதன்மையான ஊழியர்களுக்கு சலீல் அழுத்தம் கொடுக்கிறார் என்ற அந்த புகார் ஒரு வணிக செய்தித்தாளில் முதலில் வெளியானது.

இந்த தவறுக்கு அந்நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியும் உடந்தை என்று உள்ளிருந்து அம்பலப்படுத்தும் குழு கூறுகிறது. கடந்த சில காலாண்டுகளில் பல பில்லியன் டாலர் ஒப்பந்தங்களில் இலாபம் ஏதுமில்லை என்று அக்குழு குற்றஞ்சாட்டுகிறது. மேலும் ஒப்பந்த முன்மொழிவுகள், இலாப விகிதங்கள், வெளியிடப்படாத முன் மொழியப்பட்ட திட்டங்கள் மற்றும் தணிக்கையாளர்களால் சரிபார்க்கப்பட்ட வருவாய் விவரம் ஆகியவற்றைப் கேட்குமாறு நிறுவனத்தை கேட்டுக் கொண்டதாகவும் அக்குழு கூறுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பதில் :

”நிறுவனத்தின் நடைமுறைக்கு ஏற்ப தணிக்கைக் குழுவின் முன் உள்ளிருந்து அம்பலப்படுத்துபவர்களின் (Whistle Blowers) புகார் வைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்ளிருந்து அம்பலப்படுத்துபவர்களின் கொள்கைக்கு (Whistle Blower Policy) இணங்க இது தீர்க்கப்படும்” என்று இன்போசிஸ் பதில் கூறியது.

படிக்க:
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !
காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

விசா செலவுகளை இந்த காலாண்டில் முழுமையாக அங்கீகரிக்க வேண்டாம் என்று புகார்தாரர்கள் எப்படி அறிவுறுத்தப்பட்டனர் என்றும் ஒரு திட்ட ஒப்பந்தத்தில் 50 மில்லியன் டாலர் தள்ளுபடியானதை உடனடியாக கணக்கில் வைக்க வேண்டாம் என்றும் அவர்கள் அழுத்தம் கொடுக்கப்பட்டனர் என்பதையும் அவர்களது குற்றச்சாட்டுகள் விளக்குகின்றன. நிறுவன கொள்கைகளில் அபாயகரமான மாற்றங்களைச் செய்து தங்களுக்கு கீழுள்ள கருவூல நிர்வாகத்திற்கு அதிக இலாபத்தைக் காட்டுமாறு தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிதிக் குழுவிற்கு அழுத்தம் கொடுத்தனர் என்றும் அது குற்றம் சாட்டியது.

முதன் முறையல்ல :

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக சிக்கல்கள் குறித்து கடந்த 2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் முன்னால் விசில்ப்ளோவர் ஒருவர் கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்ததக்கது. செபியும் (SEBI) இந்த குற்றச்சாட்டை ஆய்வு செய்ய ஒரு குழுவை நிர்ணையித்தது.

முன்னாள் தலைமை நிதி அதிகாரி இராஜீவ் பன்சாலுக்கு இழப்பீடாக கொடுக்கப்படவிருந்த 17.4 கோடி ரூபாய் குறித்தும், இஸ்ரேலிய மென்பொருள் நிறுவனமான பனயாவை (Panaya) 200 மில்லியன் டாலர் கொடுத்து கையகப்படுத்தியதில் இன்போசிஸ் செய்த நிதி முறைகேடுகள் குறித்தும் அந்த உள்ளிருந்து அம்பலப்படுத்துபவர்கள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். தொடர்ந்து இராஜீவ் பன்சால் பதவி விலகியதுடன் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக் அந்த இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.

முந்தைய குற்றச்சாட்டை ஒப்பிடும் போது தற்போதைய குற்றச்சாட்டில் உறுதியான சான்றுகள் இருப்பதாகவும், நிர்வாக குழு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்றும் இன்கவர்ன் (InGovern) எனும் தனியார் நிறுவனம் (Proxy advisor firm – பங்குதாரர்களுக்கு அறிவுரைகள் கொடுக்கும் நிறுவனம்) கூறியிருக்கிறது.


சுகுமார்
நன்றி : தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க