Sunday, January 17, 2021
முகப்பு செய்தி இந்தியா இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !

இராஜஸ்தான் : ஊரக வேலை வாய்ப்பிலும் தீண்டாமை !

தீண்டாமை என்பது இராஜஸ்தானின் ஊரக வேலை வாய்ப்பு பணித்தளத்தின்  ஆதிக்க சாதிகளோடு மட்டும் நின்று விடுவதில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ளது !

-

ராஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள தானா கிராமத்தில் நடைபெற்று வரும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டப் (MGNREGA) பணித்தளத்தில் நடந்தேறும் தீண்டாமையையும் அதில் உள்ள அவல வேலை வசதிகளையும் அத்தளத்தில் வேலைப் பார்க்கும் சூப்பர் வைசர் சம்பா ராவத்  மற்றும் தொழிலாளி கீதா கட்டிக்  வாயிலாக பாரி (PARI) இணைய தளம், கட்டுரை ஒன்றை அக்டோபர் 25-ம் தேதியன்று வெளியிட்டிருந்தது.

அக்கட்டுரையில்  ஆதிக்க சாதிகள்  தீண்டாமையை கடைப்பிடிப்பது   MGNREGA வேலையிடங்களிலும் (work site)   வெளிப்படுவதாக கூறுகிறார்  சம்பா. இராஜஸ்தானில் ஓ.பி.சி என்று பட்டிலியடப்பட்டுள்ள  ராவத் எனும் சாதிப் பிரிவைச் சார்ந்தவரான அவர், தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் வேலைக்கு வரும் போது வீட்டில் இருந்து  தனியாக தண்ணீர் பாட்டில் கொண்டு வருவதாகவும், அவர்களுக்கு பணிதளத்தில் உள்ள மண்பானையை  தொடுவதற்கும் அதிலிருந்து  தண்ணீர் குடிப்பதற்கும் அனுமதியில்லை என்கிறார்.

சம்பா ராவத்.

குடிதண்ணீர் சப்ளை செய்யும் வேலை, ஆதிக்கச் சாதியை சார்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்குப்படுவதாகவும், அச்சாதியைச்  தவிர வேறு யாருக்கும் அவ்வேலை ஒதுக்கப்படுவதில்லை என்று தீண்டாமையின் அவலநிலையை விளக்குகிறார் சம்பா.

தினந்தோறும் அப்பணிதளத்தில்  உழைத்து களைத்துப் போகும்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கீதா, இங்குள்ள ஆதிக்க சாதியின் தொழிலாளர்கள்,  தாழ்த்தப்பட்டவர்களின் மீது  பாகுபாடு காட்டுவதாகவும் அவர்கள்,எங்களை குடிதண்ணீர் நிரப்பும் வேலையை செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்றும், நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருப்பதால், இதுவரை ஒரு நாளும் குடிதண்ணீர் வசதி செய்யும் வேலையை செய்ததே இல்லை என்கிறார்.

அப்பணிதளத்தில் உள்ள ஆணாதிக்கத்தை பற்றி குறிப்பிடும்போது, பெண் தொழிலாளர்கள் வேலை செய்யும் போது  குங்கட்டை (ghoonghat) (இராஜஸ்தானில் பெண்கள் தங்கள் தலையை மறைப்பதற்காக  போட்டுக் கொள்ளும் துணி)  போட்டுக் கொள்ளும் அவலத்தை குறிப்பிடுகிறார் சம்பா.

படிக்க:
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !

“ஆண்களுக்கு என்று வேறு MNREGA தளங்களை அரசு உருவாக்கவேண்டும். ஆண்கள் எங்களை சுற்றி இருக்கும் போது, நாங்கள் வேலைப் பார்க்கும் போது கூட எங்கள் குங்கட்டை விலக்குவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அதைப் போட்டிருக்கும் போது எங்களால் பேச முடியாது, எங்களால் சரிவர பார்க்க முடியாது. எங்கள் பணிதளங்களில் பெண்கள் மட்டுமே இருக்கும் போது, நாங்கள் விதிகளை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. நாங்கள் பேசவும், சிரிக்கவும், எங்கள் பிரச்சினையை புரிந்துக் கொள்ளவும் முடியும்” என்று சம்பா உரக்க கூறுகிறார்

கீதா கட்டிக்.

இந்த திட்டத்திற்காக கண்டிப்பாக  வழங்கப்பட வேண்டிய வசதிகள் பற்றியும் சம்பா பேசுகிறார். அவர்கள் கூடாரங்களையும், மருத்துவ வசதிகளையும் வழங்குவதாக  சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் இது நாள் வரை இதை பார்த்ததே இல்லை . தொழிலாளர்கள்  காயப்படும் போது, பெண்கள் தங்கள் துப்பட்டாவை கிழித்து அந்தக் காயத்தை சுற்றி  கட்டிவிடுகின்றனர்.  மருத்துவ பொருட்கள் , இஞ்ச் டேப், கால்குலேட்டர்  கொண்ட கிட்டை பலமுறை நான்  பஞ்சாயத்தை கேட்ட பிறகே,  இறுதியில் எனக்கு அவர்கள் கொடுத்தார்கள் என்கிறார்.

தீண்டாமைக் குற்றங்கள் ஏதோ வடநாட்டோடு முடிந்து விட்ட விசயமாக இன்றளவும் இல்லை. அவை இந்தியா முழுவதும் வியாபித்துள்ளன. நமது தமிழகத்திலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் தலித்துகளாக உள்ள பள்ளியில் தம்து பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியாது என ஆதிக்க சாதியினர் தகராறு செய்தது நினைவிருக்கலாம். எனினும் இங்கு பெரியார் உருவாக்கி வைத்த சமூகச் சூழல் இதற்கு எதிராக உடனடியாக சமூகம் முழுவதிலும் இருந்து எதிர்வினையை ஏற்படுத்தியது. இந்த சாதி மத நல்லிணக்க சமூகச் சூழலை ஒழித்துக் கட்டதான் பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறது !

வினவு செய்திப் பிரிவு
பரணிதரன்
செய்தி ஆதாரம் : ruralindiaonline

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க