முகப்புசெய்திஇந்தியாஅயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !

அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !

இந்த நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் சட்ட மீறலை நிறுவியுள்ளது, இப்போது இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இந்த முரண்பாடு வரும் காலங்களில் விவாதிக்கப்படும்.

-

யோத்தி தீர்ப்பு சட்டத்தின் ஆட்சிக்கு , அரசியலமைப்புக்கு விழுந்த மிகப்பெரிய அடி :
மூத்த வழக்கறிஞர் காளீஸ்வரம் ராஜ்

“அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சமரச அணுகுமுறை நாட்டை ஒரு பெரும்பான்மை தீவிர வலதுசாரி அரசியலை நோக்கி தள்ளியிருக்கிறது. எனவே இது அரசியலமைப்பின் கொள்கைகளுக்கு நீதி வழங்கவில்லை” என உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் காளிஸ்வரம் ராஜ்  தெரிவித்துள்ளார்.

“அரசியலமைப்பு கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பெரும்பான்மை தீவிர வலதுசாரி அரசியலாக நாம் வளர்ந்திருக்கிறோம். எனவே, இப்போதைய தீர்ப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் மதச்சார்பின்மை உள்ளிட்ட அரசியலமைப்பு கொள்கைகளுக்கு விழுந்த மிகப் பெரிய அடி” என அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அவர்.

உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் காளிஸ்வரம் ராஜ்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது என்பதும், அனைவரும் அதை ஏற்க வேண்டும் என எச்சரிக்கை உணர்வோடு கருத்து தெரிவித்துள்ள அவர், அமைதியை குலைக்க யாரும் எதுவும் செய்யக்கூடாது என்கிறார். ஆனால், ஒரு முக்கியமான விசயத்தைக் கையாண்ட இந்தத் தீர்ப்பு, நீண்ட காலத்துக்கு விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ், கேரள மாநிலத்தில் எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் பெற்றுத்தந்த வழக்கு உள்ளிட்ட பல முக்கியமான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் வழக்காடியவர்.

“அடிப்படை முரண்பாடாக, சட்ட விரோதமானது, முறைகேடானது என கண்டறிந்த ஒரு செயலை நீதிமன்ற தீர்ப்பு அங்கீகரிக்கிறது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பாபர் மசூதி இடிப்பை சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம்சாட்டியிருந்தபோதும், கோயில் கட்ட நிலத்தை வழங்கியிருக்கிறது” என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் அவர்.

“செயல்பாட்டில் உள்ள ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான சட்டத்தின் ஆட்சியில் கும்பல் வன்முறை அல்லது எந்தவிதமான ரவுடித்தனமும் பிரிவினையால் கிடைக்கும் பலன்களை அறுவடை செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்துக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு சாராம்சத்தில் அரசியலமைப்புவாதத்தின் கருத்துக்கு முரணானதாகும்.

இந்த நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் சட்ட மீறலை நிறுவியுள்ளது, இப்போது இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட தீர்வைக் கொண்டுவந்துள்ளது. இந்த முரண்பாடு வரும் காலங்களில் விவாதிக்கப்படும்”. என அவர் மேலும் பேசியுள்ளார்.

ராம் லல்லா
ராம் லல்லா

ஜனதா கட்சியின் முன்னாள் முதலமைச்சர் 1989-ம் ஆண்டு நீக்கப்பட்ட வழக்கில் (எஸ். ஆர். பொம்மை வழக்கில்) வழங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த 1994 -ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்புக்கு முரணானதாக அயோத்தி வழக்கு உள்ளது.

பொம்மை வழக்கை பிரிவு 356 -ஐ பயன்படுத்தலாமா கூடாதா என்பது பற்றியதாகத்தான் பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒட்டி ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஆறு அரசாங்கங்கள் கலைக்கப்பட்டதை உள்ளடக்கியதே.

“பொம்மை வழக்கில் ராஜஸ்தான், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசாங்கங்கள், பாபர் மசூதியை வீழ்த்திய கரசேவர்களை தீவிரமாக ஆதரித்ததன் காரணமாக கலைக்கப்பட்டன என அதை நியாயப்படுத்தியது உச்சநீதிமன்றம்” என அந்தத் தீர்ப்பை நினைவுபடுத்திய ராஜ்,

“ஒன்பது பேர் கொண்ட அமர்வு அளித்த அந்தத் தீர்ப்பில், மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் அடிப்படை அம்சம் என தெளிவாகக் கூறப்பட்டிருந்து. அயோத்தி தீர்ப்பு, பொம்மை தீர்ப்பை அடியோடு மாற்றிவிட்டது. அயோத்தி தீர்ப்பில் மதச்சார்ப்பின்மையின் உள்ளொளி தீவிர சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.

சமூகம் இந்தத் தீர்ப்பை எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், நிச்சயம் இந்தக் காலக்கட்டத்தின் பின்னணியில் உள்ள அரசியலை முன்வைத்துத்தான் தீர்ப்பை சமூகம் விவாதிக்கும் என தெரிவித்தார்.

செயல்பாட்டில் உள்ள ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான சட்டத்தின் ஆட்சியில் கும்பல் வன்முறை அல்லது எந்தவிதமான ரவுடித்தனமும் பிரிவினையால் கிடைக்கும் பலன்களை அறுவடை செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. சட்டத்தின் ஆட்சி என்ற கருத்தாக்கத்துக்கு இது மிகப்பெரிய இழப்பாகும். அந்த வகையில் இந்தத் தீர்ப்பு சாராம்சத்தில் அரசியலமைப்புவாதத்தின் கருத்துக்கு முரணானதாகும்.

“அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் மட்டுமே அயோத்தி தீர்ப்பு பார்க்கப்படும். தற்போதைய சூழலில் இந்தத் தீர்ப்பை வாசிக்கும்பொழுது, உச்சநீதிமன்றம் சுதந்திரத்தை நிலைநிறுத்தத் தவறிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும்” எனவும் அவர் விவரித்தார்.

“இவை அனைத்திலிருந்தும் பெறப்படும் பாடம் என்னவென்றால், தற்போதைய உச்சநீதிமன்றம் ஒரு குறுகிய மனப்பான்மையுடைய அரசின் அங்கம் என்பதே இவை அனைத்திருந்தும் பெறப்படும் பாடமாகும். ஜனநாயகத்திற்கு இது மிகவும் ஆபத்தானதாகும்.

அனைத்து கொள்கை முடிவுகளும் இந்தியாவில் சட்டரீதியானவை என்பதால் நமது உச்சநீதிமன்றம் உலகில் சக்திவாய்ந்தது. எனவே, அனைத்து அரசியல் மற்றும் கொள்கை தொடர்பான விசயங்கள் உச்சநீதிமன்றத்தின் மறுஆய்வுக்காக செல்லும்.

அதுபோன்றதொரு சூழலில், முழுமையாக அரசியலமைப்பு கொள்கைகளின் அடிப்படையில் தன்னுடைய செயல்பாட்டை நீதிமன்றம் செய்யவில்லை  எனில், நீதித்துறைக்கும் நிர்வாகத்துக்குமான வேறுபாடு மங்கலாகிவிடும் வாய்ப்பு உள்ளது” எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

படிக்க:
ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் !
அயோத்தியோடு நிற்காது – காசி மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு | தீஸ்தா செதல்வாட்

இந்தத் தீர்ப்பு சமூகத்தின் பல பிரிவுகளில் பதட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்கிற மூத்த வழக்கறிஞர் காளிஸ்வரம் ராஜ் , “பதட்டமடைவதற்கும் பயம்கொள்வதற்கும் போதுமான காரணங்கள் உள்ளன.  பிரச்சினை என்னவென்றால், நீதித்துறை என்பது நடைமுறை பொருளில், அரசின் ஒரு பகுதியாகும்” என்கிறார்.


கலைமதி
நன்றி : டெலிகிராப் இந்தியா

  1. இது நீதியல்ல என்பது அனைவருக்கும் தெரியும் இனியும் பிரச்சனை வேண்டாமென்றே முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஒரு கோவிலை இடித்து முஸ்லிம்கள் இந்த மசூதியை கட்டினார்கள் என்பது பொய்யென்று நிரூபிக்கப்பட்டுள்ளது ஆனால் ஒரு மசூதியை இடித்துதான் ஹிந்துக்கள் இந்தக்கோவிலை கட்டினார்கள் என்று வரலாற்றில் எழுதப்படும்.

    • அப்ப பாபர் மசூதிக்கு கீழே இருந்த கோவில் என்னவாம் ? அது தானே முக்கிய ஆதாரம்

      வரலாற்று உண்மைகளை நேர்மையாக எதிர் கொண்டு இனியும் இது போன்ற தவறுகளை நடக்காமல் பார்த்துக்கொள்வது தான் சரியாக இருக்கும்.

      பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நான் ஏற்கவில்லை அதே சமயம் ஹிந்து கோவிலை இடித்து அதன் மீது பாபர் மசூதி கட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் மறக்க வேண்டாம்.

      இதே போன்ற செயலை நம் வாழ்நாளில் ஆப்கான் பாமியன் புத்தர் சிலையை தலிபான்கள் குண்டு வைத்து உடைத்ததை நாம் பார்த்து இருக்கிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க