Tuesday, June 25, 2024
முகப்புசெய்திஇந்தியாகுஜராத் :  சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் !

குஜராத் :  சூட் அணிந்த தலித் மீது ஆதிக்கசாதி முசுலீம்கள் தாக்குதல் !

மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்கிய பார்ப்பன சாதியம் என்கிற விசம் மதங்களைக் கடந்து பெரும்பான்மையான மக்களிடம் புகுந்துள்ளதற்கு சமீபத்திய உதாரணம் இந்தச் சம்பவம்.

-

குஜராத்தில் ‘பதானி சூட்’  அணிந்ததற்காக 27 வயதான டிரக் ஓட்டுநரை அடித்து உதைத்திருக்கிறது பதானி என்ற ஆதிக்கசாதி முசுலீம் கும்பல். நவம்பர் 26-ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், சாதிய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டபோதும், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தலித் இளைஞர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு பைக்கில் வந்த அம்ஜத் பதான் மற்றும் அஸ்கர் பதான் ஆகியோர் அவரிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கியுள்ளனர். ‘நீ ஏன் ‘பதானி சூட்’ அணிந்திருக்கிறாய்?’ எனக் கேட்ட அவர்கள், பின்னர் அவர் அணிந்திருந்த ஆடையிலேயே முகத்தை மூடி வன்மத்துடன் அடித்திருக்கிறார்கள்.

இருவரும் சாதிவெறியுடன், “நீங்கள் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், பதானி அணியக்கூடாது” என்று கூறியிருக்கிறார்கள். அவர் மீண்டும் இப்படி பதானி உடையை அணிந்தால் அவரைக் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், தாக்குதலில் ஈடுபட்டவர் மீது ஆதிக்கசாதியினர் எஸ்.சி / எஸ்.டி (அட்டூழியங்கள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றுக்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

முஸ்லீம்கள், தலித்துகளுக்கு எதிராக சாதி பாகுபாட்டைக் கடைப்பிடிப்பது முற்றிலும் அதிர்ச்சியளிக்கவில்லை. இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இஸ்லாத்தைப் பின்பற்றுபவர்கள் தங்களது சொந்த சாதி வரிசைமுறையைக் கொண்டுள்ளனர். அதில் ‘சையத்’ மற்றும் பதான்கள் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று கருதுகின்றனர், குறிப்பாக பாஸ்மாண்டா அல்லது ‘பின்தங்கிய’ முஸ்லீம்களைவிட இவர்களை தங்களை உயர்வாகக் கருதுகின்றனர். மதங்களைக் கடந்து, தலித்துகளை ‘உயர்சாதியினர்’ எனக் கூறிக்கொள்வோர் தாக்குவது தொடர்ந்து நிகழ்கிறது.

மே 2019 இல், ஒரு திருமணத்தில் “உயர் சாதி” மக்களுடன் சேர்ந்து சாப்பிட்டதற்காக உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு தலித்  தாக்கப்பட்டு இறந்தார்.

செப்டம்பர் 2019 இல், உத்தரபிரதேசத்தில் “உயர் சாதி” பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறி தலித் ஒருவர் அடிக்கப்பட்டார், பின்னர் அவரை ஆதிக்கசாதி கும்பல் தீ வைத்து எரித்தது.

அதே மாதத்தில், ராஜஸ்தானில் தண்ணீர் குழாய் திருடியதாகக் கூறி மற்றொரு தலித் அடித்து கொல்லப்பட்டார்.

படிக்க :
தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !

நவம்பர் 2019-ல், பஞ்சாபில் ஒரு தலித் தாக்கப்பட்டு, மாட்டு மூத்திரத்தைக் குடிக்க வைக்கப்பட்டதால் இறந்தார்.

மனிதர்களுக்கிடையே பாகுபாடுகளை உருவாக்கிய பார்ப்பன சாதியம் என்கிற விசம் மதங்களைக் கடந்து பெரும்பான்மையான மக்களிடம் புகுந்துள்ளதற்கு சமீபத்திய உதாரணம் இந்தச் சம்பவம். சாதி ஒழிப்புக்கு மதம் மாறுவது மட்டுமே தீர்வாகாது என்பதையும் இது சுட்டுகிறது.


கலைமதி
நன்றி : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க