Tuesday, June 25, 2024
முகப்புசெய்திஉலகம்குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம் !

இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்திய தூதரகத்திற்கு வெளியே ஒன்று கூடி, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து போராடினர்.

-

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக மொழி, இனம், மதம் கடந்து உயிரிழப்புகளுக்கு அஞ்சாமல் நாடு முழுவதும் மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டத்திருத்ததை எதிர்த்து போராடுவதற்காக இங்கிலாந்தில் உள்ள பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மக்கள் இந்திய தூதரகத்திற்கு வெளியே கடந்த 21-ம் தேதி சனிக்கிழமை ஒன்று கூடினார்கள். மோடி அரசாங்கத்தின் “தோல்விகள்” தான் குடியுரிமை சட்டத்திருத்தம் என்று அவர்கள் அங்கே முழங்கினார்கள்.

லண்டன் நகரில் உள்ள காந்தி சிலைக்கு அருகில் கூடிய போராட்டக்காரர்கள். (படம் – நன்றி : இந்தியா டுடே)

பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு போராட்டத்தில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பிரிட்டிஷ் அசாமி சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்குழுவினர், “மக்களாட்சியை காப்பாற்றுங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறுத்துங்கள்” என்று அஸ்ஸாமியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பதாகைகளை காட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த வார தொடக்கத்தில் மோடி அரசினால் குடியுரிமை சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு (CAB) எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அஸ்ஸாம் ஒன்றுபட்டுள்ளது, CAB தான் பிரிவினை செய்கிறது. பிரிவினையை எதிர்ப்போம், ஒற்றுமையை ஆதரிப்போம் என்று போராட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறினார்.

இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக புதுடெல்லி மற்றும் உலகெங்கும் நடைபெற்ற போராட்டங்களுடன் சேர்ந்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களது காங்கிரஸ் (Indian Overseas Congress – IOC) “இந்தியாவை காப்பாற்றுங்கள்” என்ற பெயரில் இந்த ஆர்பாட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்தது.

பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, உழவர் நெருக்கடி மற்றும் பிரிவினைவாத அரசியல் உள்ளிட்ட மோடி அரசாங்கத்தின் தொடர் தோல்விகளுக்கு எதிராக இந்த பேரணி நடத்தப்பட்டதாக இங்கிலாந்துக்கான IOC செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“பாஜகவை எதிர்க்கும் பெண்கள், பாஜகவை எதிர்க்கும் விவசாயிகள்” என்ற கருத்துக்கள் தாங்கிய பதாகைகளை எதிர்ப்பாளர்கள் வைத்திருந்தார்கள்.

மோடி அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் நமது சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களும் இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்துக்கான IOC தலைவர் கமல் தலிவால் கூறினார்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தேவை, பெண்களுக்கு பாதுகாப்பு தேவை, விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு நியாயமான விலை தேவை. தேர்தலின் போது மோடி ஜி அளித்த இந்த வாக்குறுதிகள் ஒன்றும் நிறைவேறவில்லை என்று அவர் குற்றஞ்சுமத்தினார்.

படிக்க:
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் : தமிழகமெங்கும் மாணவர்கள் போராட்டம் !
♦ தயாராகிவிட்டது ‘சட்டவிரோத’ குடியேறிகளுக்கான தடுப்பு மையம் !

CAB அரசியலமைப்பிற்கு விரோதமானது மேலும் இது வடகிழக்கு மாநிலங்களில் நெருப்பை பற்ற வைத்துள்ளதாக குடியுரிமை திருத்த மசோதாவைப் பற்றி IOC இங்கிலாந்து செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்திற்கான இந்த திருத்தம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் என்ற மூன்று அண்டை நாடுகளை மட்டும் சேர்ந்த 6 மத சிறுபான்மையினர்கள் (முஸ்லிம்கள் நீங்கலாக) இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கான உரிமையை வழங்குகிறது.

மதச்சார்பற்றத்தன்மைக்கு எதிரானது என்று கடுமையாக விமர்சிக்கப்படும் இந்த சட்டத்திருத்தம், இந்திய வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாமல் நாடு முழுவதுமே பரவலான போராட்டங்களைத் தூண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனம், மொழி, மதம் கடந்து “வேற்றுமையில் ஒற்றுமை” காண்பதுதான் இந்தியாவின் சிறப்பியல்பு என்று இதுவரை பேச்சுக்காவது சொல்லிக்கொண்டோம். ஆனால் “ஒற்றுமையில் வேற்றுமை” கொண்டு வரத்துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை நாட்டிலிருந்து துரத்தாமல் நம்மால் இனி அப்படி பேச கூட இயலாது.


தமிழாக்கம்  : சுகுமார்
செய்தி : Business Standard. 

  1. சரி பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் சட்டவிரோத குடியேறிகளுக்கு பைபிள் டெஸ்ட் வைக்கிறார்கள் அது போல் இந்தியாவிலும் பகவத் கீதை டெஸ்ட் வைக்கலாமா ?

    மிக மிக கேவலமாக இருக்கிறது இவர்களின் போராட்டம்.

    வெளிநாட்டினருக்கு குடியுரிமை கொடுங்கள் என்று போராடும் ஒரே பைத்தியக்கார தேசம் உலகிலேயே இந்தியாவாக தான் இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க