privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாநிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !

நிலையான மதிப்பூதியம் கோரி ஆஷா தொழிலாளர்கள் பேரணி : குலுங்கிய பெங்களூரு !

"கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை.”

-

நிலையான மதிப்பூதியமாக மாதம் 12 ஆயிரம் ரூபாயை கொடுக்க வலியுறுத்தி கர்நாடக மாநிலம் முழுவதிலுமிருந்தும் குவிந்த ஆஷா (Accredited Social Health Activists) தொழிலாளர்கள் ஜனவரி, 3-ம் நாள் வெள்ளிக்கிழமை நடத்திய பேரணியால் பெங்களூரு மாநகரமே குலுங்கியிருக்கிறது. மாநகர தொடர்வண்டி நிலையத்திலிருந்து (City Railway Station) விடுதலை பூங்கா (Freedom Park)வரை நடந்த இந்த பேரணியில் சுமார் 10,000-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 15 மாதங்களாக தங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மாத ஊதியமான ரூ. 3500 வழங்கப்படவில்லை என்று தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்தினார்கள். சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை (Health and Family Welfare Department – HFW) அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பி.ஸ்ரீராமுலு ஆகியோருடனான சந்திப்புகள் பயனற்று போய் விட்டதாக அவர்கள் கூறினர். மத்திய அரசாங்கம் கொடுக்கும் 6,000 ரூபாயுடன் சேர்த்து மாநில அரசாங்கம் கொடுக்கும் ஊக்கத்தொகை 4,000 ஆயிரம் ரூபாயை ஆஷா தொழிலாளர்கள் தற்போது பெறுகிறார்கள்.

படிக்க :
♦ எது உங்களது புத்தாண்டுப் புரட்சி ?
♦ ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

“கர்நாடகாவில் 41,000 ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் 20% பேர் மட்டுமே தொடர்ந்து சம்பளத்தைப் பெறுகிறார்கள். மீதமுள்ளவர்கள் சம்பளம் பெறுவதுல்லை. எனினும், தமக்கு விரைவில் சம்பளம் வழங்கப்படும் என்ற நம்பிக்கையில்தான் அவர்கள் வேலையில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவு காலம் காத்திருக்க முடியும்? அரசாங்கம், அவர்களின் சம்பளத்தை  உடனடியாக கொடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று AIUTUC-யின் மாநிலக் குழு உறுப்பினர் ரமா கூறினார்.

“நான்கு முறை நாங்கள் சுகாதார அமைச்சரைச் சந்தித்தோம். ஆனால் வெறும் வாக்குறுதிகள் மட்டுமே எங்களுக்குக் கிடைத்து வருகின்றன. இதனால்தான் நாங்கள் வீதிகளில் இறங்கியுள்ளோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தை தொடருவோம்” என்று சாமியுக்தா ஆஷா தொழிலாளர்கள் (samyukta ASHA workers) அமைப்பின் கர்நாடக மாநிலச்செயலாளர் டி.நாகலட்சுமி கூறினார்.

ஆஷா தொழிலாளர்களது போராட்டம் ஒன்றும் புதிதல்ல. கடுமையான பணிச்சுமை மற்றும் குறைந்த ஊதியத்திற்கு எதிராக 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பீகாரில் இதே போன்றதொரு போராட்டத்தினை ஆஷா பணியாளர்கள் நடத்தினார்கள். ஆயினும் அவர்களது கோரிக்கை நிறைவேறவில்லை.

சுகாதாரத்திற்கான நிதியை மத்திய அரசு கடுமையாக குறைத்திருக்கின்ற இந்த நேரத்தில் கிராமபுற சுகாதாரத்தின் முதுகெலும்பாய் திகழும் இந்த ஆஷா தொழிலாளர்களை நாம் அறிந்துகொள்வதுடன் அவர்களது போராட்டத்திற்கு நாமும் துணை நிற்க வேண்டும்.


சுகுமார்
நன்றி : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க