privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

ஜே.என்.யூ : ஏ.பி.வி.பி. குண்டர்கள் வெறியாட்டம் ! கொலைவெறி தாக்குதல்கள் !

காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

-

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகர் முசுலீம் பல்கலைக்கழகத்தில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் போலீசுக்கும் மாணவர்களுக்குமான தாக்குதலாக பெரும்பாலான சமூகம் நம்பியது. போராட்டத்தை வீரியத்தோடு முன்னெடுக்கும் மாணவர்களை ஒடுக்க அரசு ஏவிவிட்டுள்ள குண்டர்படையே முதன்மையான காரணம் என ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர கொலைவெறி தாக்குதல்கள் நிரூபித்துள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மாலை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விடுதிக்குள் முகமூடி அணிந்து கைகளில் ஆயுதங்களை வைத்திருந்த குண்டர்படை நுழைந்து அங்கிருந்த மாணவர்கள், பேராசிரியர்களை சரமாரியாக தாக்கத் தொடங்கியது.

இதில் மாணவர் சங்க தலைவர் ஐசே கோஷ், பேராசிரியர் சுசரிதா சென் ஆகியோர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 23 பேர் படுகாயங்களுடன் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர் சங்கம், இந்தத் தாக்குதலுக்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி-யே காரணம் என குற்றம்சாட்டியுள்ளது.  அந்த அமைப்பைச் சேர்ந்த குண்டர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் விடுதிக்குள் நுழைந்து சரமாரியாக தாக்கியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்கப்பட்ட மாணவர் சங்கத்தின் தலைவி ஐஷ்சே கோஷ் !

விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் பேரணியாகச் சென்றபோது, ஏபிவிபி குண்டர்கள் கற்களை வீசத்தொடங்கியதாக மாணவர்கள் கூறுகின்றனர்.  இந்தத் தாக்குதல்களை வளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் தடுக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

நூறுக்கும் மேற்பட்ட முகமூடி அணிந்த குண்டர்படை ‘பாரத் மாதா கி ஜெய்’ என கத்திக்கொண்டே ஜேஎன்யூ முதன்மை நுழைவாயில் அருகே கூடியதாகவும் திட்டமிட்டே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

’ஆர்.எஸ்.எஸ்.-ன் நண்பர்கள்’ என்கிற வாட்சப் குழுமத்தில் ஜேஎன்யூவில்  ‘இடது தீவிரவாத’த்தை எதிர்கொள்வது எப்படி என விவாதிக்கப்பட்டுள்ளதும் அதில் இடதுசாரி மாணவர்களை அடித்து நொறுக்குவதே அவர்களுக்கு தரப்படும் ஒரே மருந்து என காவிகள் பேசியுள்ளனர்.  வன்முறையை அரங்கேற்றும் முன் வாட்சபில் எழுதப்பட்டவை சமூக ஊடகங்களில் வெளியாகி, ஏபிவிபி-ன் திட்டத்தை அம்பலப்படுத்தின.

 

மாணவர்கள் மட்டுமல்லாது, ஜேஎன்யூ பொருளாதார துறை பேராசிரியர் ஜெயதி கோஷ் போன்றோர் வெளி ஆட்கள் ஆயுதங்களுடன் வளாகத்துக்கு வெளியே கட்டளைக்காக காத்திருந்ததாக தெரிவிக்கின்றனர்.

ஜேஎன்யூ பேராசிரியர் அதுல், மாணவர்களும் பேராசிரியர்களும் கற்களால் தாக்கப்பட்டதாக கூறுகிறார். “சிறிய கற்கள் அல்ல, ஒரே தாக்குதலில் மண்டை பிளக்கும் பெரிய கற்களால் எங்களை தாக்கினார்கள். தப்பித்து வெளியே வந்தபோது, என்னுடைய கார் உள்பட கார்கள் அனைத்தும் நொறுக்கப்பட்டிருந்தன” என்கிறார்.

கட்டளையை ஏற்று வளாகத்துக்குள் நுழைந்த குண்டர்படை, எதிரே வந்த மாணவர்கள், உணவருந்திக்கொண்டிருந்த மாணவர்கள், கண் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், வாகனங்கள் என அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளது. இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அடிபட்ட மாணவர்களுக்கு சிகிச்சையளிக்கச் சென்ற மருத்துவ குழுவினரின் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி, நொறுக்கியுள்ளது.

ஜாமியா, அலிகர் பல்கலைக்கழகங்களில் எதுவுமே செய்யாத மாணவர்களை அடித்து நொறுக்கிய போலீசு, ஜேஎன்யூவில் நடந்த தாக்குதலை கைகட்டி நின்று வேடிக்கைப் பார்த்துள்ளது.

காவி குண்டர்களின் அட்டூழியங்கள் வீடியோ ஆதாரங்களாக சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய பிறகு, வெளி சமூகம் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்திய பிறகு போலீசார் இப்போது குண்டர்களின் பாதுகாப்புக்காக நிற்கின்றனர்.

உலக அளவில் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழக வளாகத்துக்குள் பயங்கரவாதிகளைப்போல நுழைந்து கொடூரமாக தாக்கும் துணிச்சல் ஆட்சி அதிகாரத்தின் ஆசிபெற்ற கும்பலாலேயே முடியும்.  மக்கள் போராட்டங்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத பாசிஸ்டுகள் இப்போது தங்களது காவி குண்டர்களை களமிறக்கி இருக்கிறார்கள்.


கலைமதி

நன்றி :
ஸ்க்ரால், ஹஃபிங்டன் போஸ்ட்

 1. கல்லூரிகளில் அரசியல் (குறிப்பாக கம்யூனிஸ்ட்கள்) நுழைந்தால் என்ன ஆகும் என்பதற்கு JNU ஒரு எடுத்துக்காட்டு… கம்யூனிஸ்ட்கள் நாட்டையும் முன்னேற விட மாட்டார்கள் மாணவர்களையும் நிம்மதியாக படிக்க விட மாட்டார்கள்.

  ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்கள் ஏ.பி.வி.பி. வெறியாட்டம் என்று சொல்கிறார்கள் இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்கள் வெறியாட்டம் என்று ஏ.பி.வி.பி. சொல்கிறது, இவர்கள் இருவருமே உண்மையை பேசுகிறார்களா என்று யாருக்கும் தெரியாது.

  மாணவர்களின் நலனுக்காக அரசியல் அமைப்பினர் அனைவரும் கல்லூரிகளை விட்டு விலக வேண்டும், மாணவர்களின் முதல் கடமை படிப்பு மட்டும், அவர்களின் கல்லூரி செலவுகளை அவர்களின் பெற்றோர்கள் தான் செய்கிறார்கள், பெற்றோர்கள் மாணவர்களை படிக்க மட்டுமே அனுப்புகிறார்கள், போராட்டங்கள் நடத்த அல்ல.

  ஏ.பி.வி.பி., காங்கிரஸ் மாணவர் அமைப்பு, மிக மிக முக்கியமாக அயோக்கிய கம்யூனிச அமைப்புகள் என்று அனைத்து அமைப்புகளும் கல்லூரியில் தடை செய்ய வேண்டும், இன்னும் சொல்ல போனால் கல்லூரி தேர்தல் கூட தேவையில்லை இதை காரணமாக வைத்து தான் அரசியல் கட்சிகள் உள்ளே வருகின்றன…

 2. ////// கல்லூரிகளில் அரசியல் (குறிப்பாக கம்யூனிஸ்ட்கள்) நுழைந்தால் என்ன ஆகும் என்பதற்கு JNU ஒரு எடுத்துக்காட்டு… கம்யூனிஸ்ட்கள் நாட்டையும் முன்னேற விட மாட்டார்கள் மாணவர்களையும் நிம்மதியாக படிக்க விட மாட்டார்கள். ////

  பொதுவாகவே பொட்டுகட்டி தேவரடியார்களாக நேர்ந்துவிடப்பட்ட அபலைகளுக்கு தனது தலையெழுத்து அது என்றோ அல்லது அதுதான் கடவுளால் தனக்கு அருளப்பட்ட வரம் என்பதுதான் சிந்தனையில் ஊறிப் போயிருக்கும். அவர்களைப் பொருத்தவரையில் புருசன்மாரின் ஒடுக்குமுறைக்கு கட்டுப்பட மறுக்கும் பெண்கள் பெரும்பாவம் செய்தவர்களாகவும், அவர்களது முகத்தில் முழித்தால் பொழுது நாசமாகிப் போய்விடும் என்று தேவரடியார்கள் கருதுவராம்..

  அது போல ஜனநாயகம் பற்றி தெரியாத நவீனகால தேவரடியார்களுக்கு ஜனநாயகத்தை கற்றுக் கொடுக்கும் ஜே.என்.யூ வின் இடது சாரி பிரிவினர் ஒவ்வாதவர்களாகத்தான் தெரிவார்கள்…

  ///// ஒரு பக்கம் கம்யூனிஸ்ட்கள் ஏ.பி.வி.பி. வெறியாட்டம் என்று சொல்கிறார்கள் இன்னொரு பக்கம் கம்யூனிஸ்ட்கள் வெறியாட்டம் என்று ஏ.பி.வி.பி. சொல்கிறது, இவர்கள் இருவருமே உண்மையை பேசுகிறார்களா என்று யாருக்கும் தெரியாது. ////

  ஆமாம், அடிபட்டவர்கள் அனைவரும் மாணவர்களின் உரிமைக்காக போராடிய இடதுசாரி மாணவர்கள்,. மரணம் அடையக் கூடிய தருவாயில் 2 மாணவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் மணி மாமாவுக்கு யார் உண்மையைப் பேசுகிறார்கள் என்று தெரியாதாம். கண் பொட்டையாகிவிட்டது அல்லவா.. அதனால் மாமாவுக்குத் தெரியாது தான்..

  /////// மாணவர்களின் நலனுக்காக அரசியல் அமைப்பினர் அனைவரும் கல்லூரிகளை விட்டு விலக வேண்டும், மாணவர்களின் முதல் கடமை படிப்பு மட்டும், அவர்களின் கல்லூரி செலவுகளை அவர்களின் பெற்றோர்கள் தான் செய்கிறார்கள், பெற்றோர்கள் மாணவர்களை படிக்க மட்டுமே அனுப்புகிறார்கள், போராட்டங்கள் நடத்த அல்ல. ஏ.பி.வி.பி., காங்கிரஸ் மாணவர் அமைப்பு, மிக மிக முக்கியமாக அயோக்கிய கம்யூனிச அமைப்புகள் என்று அனைத்து அமைப்புகளும் கல்லூரியில் தடை செய்ய வேண்டும், இன்னும் சொல்ல போனால் கல்லூரி தேர்தல் கூட தேவையில்லை இதை காரணமாக வைத்து தான் அரசியல் கட்சிகள் உள்ளே வருகின்றன… ////

  ஆமாம், அப்போதுதானே கல்விக்கட்டண உயர்வு வரும் போதும், மானியத்தை அரசுக் குறைக்க முயலும் போதும், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மொத்தமாக ஆட்டையைப் போட முடியும்.. சரிதானே மணிமாமா… என்ன இருந்தாலும் பாப்பார புத்திக்கு நிகர் பாப்பார புத்திதான். அடிச்சிக்க ஆளே இல்லை போங்கோ…..

  லோல் லோக்க்குறதுன்னு முடிவு பண்ணிட்ட … அப்புறம் என்னத்துக்கு முக்காடு மாமா.. அவுத்துப் போட்டு போக வேண்டியதுதானே…

  • பெற்றோர்கள் மாணவர்களை படிக்க மட்டுமே அனுப்புகிறார்கள், அவர்களை போராட்டம் செய்ய, மற்றவர்களை அடிக்கவோ அல்லது அடிவங்கவோ அல்லது கல்லெறியவோ அனுப்பவில்லை, அவர்களை போராட்டங்களில் இழுத்து விட உங்களை போன்ற கம்யூனிஸ்ட் அயோக்கியர்களுக்கு உரிமையும் கிடையாது.

   ஏண்டா M Tech படிப்பிற்கு course fees 240 ரூபாய் இந்தளவு குறைந்த கட்டணத்தில் உலகில் வேறு எந்த நாட்டிலாவுது சொல்லி கொடுக்கிறார்களா ? இதில் பீஸை ஏற்றி விட்டார்கள் என்று போராட்டத்தை தூண்டி விட்டு இருக்கிறீர்கள் அதற்கு பொது சொத்துக்களை சேதமும் படுத்தி இருக்கிறீர்கள்.

   //ஆமாம், அப்போதுதானே கல்விக்கட்டண உயர்வு வரும் போதும், மானியத்தை அரசுக் குறைக்க முயலும் போதும், எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் மொத்தமாக ஆட்டையைப் போட முடியும்.///

   இப்படி பேச உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தலோ அல்லது வெட்கமோ கிடையாதா ? ச்சீ

   • கலவரத்தை நடத்தியது ஏபிவிபி என்று ஆதாரங்கள் வெளிவந்த பிறகு ஓநாய் ஏன் ஆட்டுக்குட்டி வேசம் போடுகிறது…

    அவிழ்த்துவிட்டு ஆடவும் ஓநாய்களே !! நேர்மைகெட்ட திருட்டுக் கூட்டமே … நவ துவாரத்தையும் மூடிட்டு போய் உட்காரவும்

    • காவல்துறை உங்கள் தலைவி ஆஷிஜோஷ் மீது வழக்கு பதிவு செய்து இருக்கிறது. மாணவர்கள் அடுத்த செமெஸ்டருக்கு பதிவு செய்ய விடாமல் தடுக்க வன்முறையில் ஈடுபட்டார்கள் சர்வர் ரூமை அடித்து நொறுக்கினார்கள் என்பது அவர்கள் மீதான குற்றசாட்டு.

     மாணவர்களை படிக்க விடாமல் தடுக்க இவர்கள் யார் ? கல்லூரிக்கு படிக்க வருகிறார்களா இல்லை வன்முறையில் ஈடுபட வருகிறார்களா ?

     கம்யூனிஸ்ட்கள் எந்தளவுக்கு மக்கள் விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு JNUவில் இவர்கள் நடத்தி கொண்டு இருக்கும் வெறியாட்டம் சாட்சி.

 3. பெருகிவரும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களை திசை திருப்ப காவி ஓநாய்கள் திட்டமிட்டு நடத்திய இரத்தக் கலவரம் இது.. இந்த கயவர் கூட்டத்தைத் தான் பாரதமாதா நித்தம் பிரசவிக்கிறாள் என்றால் “கருக்கலைப்புகள்” நிச்சயம் தேசவிரோதமல்ல….

  • கம்யூனிசம் பேசும் ஒருவனுக்கும் கல்லூரிக்குள் இடம் கொடுக்க கூடாது, அவர்களின் நோக்கம் நாட்டை நாசம் செய்வது மட்டுமே அதற்கு தான் மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்கிறார்கள் இந்த அயோக்கியர்கள்.

   கம்யூனிஸ்ட்கள் ஒழிக கம்யூனிசம் ஒழிக

 4. //ஏண்டா M Tech படிப்பிற்கு course fees 240 ரூபாய் இந்தளவு குறைந்த கட்டணத்தில் //
  ஏன்டா முட்டாப்பயலே..
  மோடி என்னமோ பிச்சை போடுற மாதிரி பேசுற..
  இந்நாட்டு குடிமக்களின் வரிப்பணத்தில் நடக்குதுடா அரசாங்க நிறுவனங்கள். உழைக்கும் மக்கள் அவங்க பணத்துல (வரி மற்றும் உழைப்பு சுரண்டல்) அவங்க பிள்ளைங்களை படிக்க வக்கிறாங்க… இடையில நீங்க யாருடா பூசாரி வேலை செய்யிறதுக்கு..?
  சங்கிகளின் மூளையை உறிஞ்சி எடுத்துவிட்டு மாட்டு சாணியையும் மனித மலத்தையும் வச்சு அனுப்பிருவானுங்க போலிருக்கு..

  • சரி மக்களின் வரி பணம் எதற்கு செலவு செய்ய படுகிறது ? மாணவர்களின் படிப்பிற்கா இல்லை இந்த மாதிரி போராட்டங்களை நடத்துவதற்கா ? பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் இந்த கல்லூரிக்கு சென்றால் நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்று அனுப்புகிறார்கள்.

   ஆனால் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் மாணவர்களை போராட சொல்லி தூண்டி விடுகிறார்கள் ? இது எந்த விதத்தில் நியாயம் ? அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் இதற்கு பதில் சொல்ல முடியுமா ?

   சும்மா ஒரு பேச்சுக்கிற்கே வந்தது கொள்வோம், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இவர்கள் எதற்கு போராட வேண்டும் ? அதற்கு தான் உங்களை போன்ற மக்கள் விரோத தேசவிரோத அமைப்புகள் இருக்கிறதே, இந்த போராட்டங்களில் JNU மாணவர்களுக்கு என்ன வேலை ?

   • படிக்கிற பிள்ளைகளுக்கு நாளை நமது குடியுரிமை பறிபோனால் என்னாகும்ங்கிற பயம் வத்திருக்கலாம்…
    மேலும் இம்மாதிரியான கொடுமையான நிலைமை இந்நாட்டில் யாருக்கும் வரக்கூடாது என்கிற கருணையும் அன்பினாலும் கூட இருக்கலாம்…
    இம்மாதிரியான மனித விரோத சட்டங்களை இயற்றி மாணவர்களை போராட்டத்திற்கு தூண்டியது மோடிதான்ங்கிற விசயம் மாட்டுமூளைக்கு புரியிறது கொஞ்சம் கஷ்டம்தான் மணிகண்டா…

    • உங்களை போன்ற பாக்கிஸ்தான் பங்களாதேஷ் சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபடும் ஸ்லீப்பர் செல்களுக்கு தானே குடியுரிமை பற்றிய பயம் வர வேண்டும்..

     அப்படி உண்மையிலேயே குடியுரிமை சட்டத்தை பற்றிய பயம் இருந்தால் அணுக வேண்டியது நீதிமன்றத்திடம்… இந்த சட்டம் வேண்டும் என்று சொன்னவர்கள் நீதிமன்றம், கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் என்று பலரும் கேட்டார்கள்.

     இப்போது போலித்தனமாக என்னமோ இஸ்லாமியர் மீது அக்கறை இருப்பது போல் நடிக்கிறீர்கள்.

     Karat had sought to remind Singh of his 2003 speech in the letter written in 2012: “At that time you had stated: ”With regard to the treatment of refugees after the Partition of our country, the minorities in countries like Bangladesh have faced persecution, and it is our moral obligation that our approach to granting citizenship to these unfortunate persons should be more liberal. I sincerely hope that the Hon”ble Deputy Prime Minister bears this in mind in charting out the future course of action,”

     பங்களாதேஷ் பாக்கிஸ்தான் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கம்யூனிஸ்ட்கள் அயோக்கியர்கள்….

     இன்று இதே அயோக்கியர்கள் பேச்சினை மாற்றி குடியுரிமை சட்டத்தை பொய்களை சொல்லி எதிர்க்கிறார்கள்.

     கம்யூனிஸ்ட்கள் எவ்வுளவு பெரிய அயோக்கியர்கள் துரோகிகள்.

 5. மக்களின் வரி பணத்தில் படிப்பதால் மாணவர்களின் முதல் கடமை படிப்பு மட்டும் தான்… தேசவிரோத அமைப்புகளின் பேச்சுக்களை கேட்டு போராட்டங்களை நடத்த மக்கள் வரி செலுத்தவில்லை, அப்படி போராட்டம் நடத்தி தான் ஆக வேண்டும் என்றால் மாணவர்கள் கல்லூரியில் இருந்து விலகி அந்த அமைப்புகளில் சேர்ந்து போராட்டங்களில் ஈடுபடலாம். ஆனால் கல்லூரிக்குள் இருந்து கொண்டு படிக்கிறோம் என்று சொல்லி மக்களை ஏமாற்ற கூடாது…

  மக்களின் வரி பணத்தை வீண் அடிக்க மாணவர்கள் உட்பட யாருக்குமே உரிமையில்லை.

  மாணவர்களை போராட்டங்களுக்கு தூண்டி விடும் கம்யூனிஸ்ட் அமைப்புகள் அனைத்தையும் அரசு தடை செய்ய வேண்டும், கம்யூனிஸ்ட்கள் மாணவர்களுக்கும் தேச மக்களுக்கும் மிக பெரிய விரோதிகள், துரோகிகள்.

  • //சட்டம் வேண்டும் என்று சொன்னவர்கள் நீதிமன்றம், கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் என்று பலரும் கேட்டார்கள்.//
   //பங்களாதேஷ் பாக்கிஸ்தான் சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று சொன்னவர்கள் கம்யூனிஸ்ட்கள் //
   மோடி மாதிரியே ரெண்டு கையாலும் திங்கிறியே மணிகண்டா…
   //மக்களின் வரி பணத்தை வீண் அடிக்க மாணவர்கள் உட்பட யாருக்குமே உரிமையில்லை.//
   மக்கள் வேறு.. மாணவர்கள் வேறா.. பூவும் புஷ்பமும் ரெண்டும் வேறவேறயா..?
   //யாருக்குமே உரிமையில்லை.//ன்னு சொல்றதுக்கு யாரு உரிமை கொடுத்தாங்கப்பா..?
   சங்கிகளோட மூளையை உறிஞ்சி எடுத்துட்டு மாட்டு சாணியையும் மனித மலத்தையும் கலந்துவச்சு அனுப்பிருவானுங்க போலிருக்கு..

 6. மணிமோடிகண்டன் அவர்களே உழைப்பைக் கொட்டி வினவு வெளியிடும் எந்தப்பதிவுகளையும் நீங்கள் படிப்பதும் இல்லை… அப்படியே கொஞ்சம் படித்தாலும் அவை பற்றி பரிசீலிப்பதும் இல்லை…சீனா பாகிஸ்தான் கம்யூனிஸ்ட்டுகள் இதை தாண்டி ஏதும் சொல்வது மில்லை…விடுதிக்குள் இருந்தவர்களை அத்துமீறி நுழைந்து தாக்கிய காவி பயங்கரவாதிகளை கண்டிக்க உங்களுக்கு நேர்மையும் இல்லை…அதே காவியின் கைத்தடிகள் உங்கள் மண்டையையே பிளக்கும் நாள் வெகு தொலைவிலுமில்லை…

  • உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களுக்கு யார் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை அதனால் தான் உங்களால் இப்படி எல்லாம் எழுத முடிகிறது. மாணவர்களின் முதல் கடமை படிப்பு அதற்காக தான் மக்களின் வரி பணமும் செலவு செய்யப்படுகிறது…

   மாணவர்களை படிக்கவிடாமல் போராட்டங்கள் மற்றும் வன்முறையில் இழுத்து விடுவது எந்த வகையில் நியாயம்… இந்த கேள்வியில் இருக்கும் நியாயத்தை வேதனையை உங்களை போன்ற கம்யூனிஸ்ட்களால் என்றுமே புரிந்துகொள்ள முடியாது

   ஹாஸ்டல் பீஸ் மதம் 300 ரூபாய் (ஒரு நாளைக்கு 10 ரூபாய்)
   ஒரு வருட படிப்பு செலவு 120 ரூபாய்

   எந்த வேலைக்கும் போகாமல் தேசவிரோத செயல்களை செய்வதற்கு என்றே ஒரு கூட்டம் 35 வயதிற்கு மேலேயும் நாங்கள் மாணவர்கள் என்று சொல்லி கொண்டு கல்லூரி ஹாஸ்டலில் தங்கி இருப்பது எந்த வகையில் நியாயம் என்று சொல்ல முடியுமா ? மக்களின் வரி பணம் ஏன் இந்த கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களுக்காக வீண் அடிக்க பட வேண்டும் ?

   UGC ஹாஸ்டல் பீஸை திரும்ப பெற்ற பிறகும் ஏன் கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் போராட்டங்களை நடத்தினார்கள் ?

   கம்யூனிஸ்ட் அயோக்கியர்கள் ஏன் மாணவர்களை அடுத்த செமெஸ்டருக்கு பதிவு செய்ய விடாமல் வன்முறை மூலம் தடுத்தார்கள் ?

   உண்மையில் கம்யூனிஸ்ட்கள் மிக மோசமான பாசிஸ்ட் வன்முறையாளர்களாக மக்கள் விரோதிகளாக இருக்கிறார்கள் என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

   மறுக்க முடியுமா உங்களால் ?

  • நான் இங்கே கருத்தை பதிவு செய்து கொண்டு இருப்பதற்கு காரணம் யாராவுது இந்த தேசத்தை கம்யூனிஸ்ட் துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற மாட்டார்களா என்ற ஆதங்கத்தால் தான்…

   மாணவர்களின் வாழ்க்கையை நாசம் செய்யும் அளவிற்கு வக்கிரம் கொண்டவர்களாக கம்யூனிஸ்ட்கள் இருக்கிறார்கள்… இதை பார்க்க மிகவும் வேதனையாக இருக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க