10.08.2026

தமிழ்த்தாய் வாழ்த்து: சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்!
ம.அ.கழகம் வரவேற்கிறது!

‎அதனை சிறப்புச் சட்டமாக இயற்ற கோரிக்கை!

பத்திரிகைச் செய்தி

ரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தனித் தீர்மானத்தை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பதுடன் அதைச் சிறப்புச் சட்டமாக இயற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

‎1891-இல் மனோன்மணியம் சுந்தரனார் அவர்களால் ஏற்றப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலானது 1970 நவம்பர் 23 முதல் அரசு விழாக்களில் முதலில் பாட வேண்டும் என அரசாணை வெளியிட்டதன் மூலம் நடைமுறைக்கு வந்தது. அதன்பின்னர் 2021 டிசம்பர் 17 முதல் மாநில பாடலாக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அனைத்து தொழில், பொது நிறுவனங்களின் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை உள்ளது.

‎ஆனால் அண்மையில் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, வந்தே மாதரம் என்ற இஸ்லாமிய விரோத பாடல் கண்டிப்பாகப் பாட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது. தமிழ்த்தாய் வாழ்த்தை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது.

‎இதற்கு எதிராக தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனினும் தொடர்ந்த எதிர்ப்புகளின் காரணமாக தற்பொழுது இந்த தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது.‎

‎ஒன்றிய அரசின் தமிழர் விரோத நடவடிக்கைகள் கோலோச்சிக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் தீர்மானம் மட்டும் போதுமானதாக இருக்காது. இந்த தீர்மானத்தை சிறப்புச் சட்டமாக இயற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

‎மேலும் பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசு நிறுவனங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது அவமதிக்கப்பட்டாலோ அதற்கு எதிராக தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் போராட வேண்டும் என்றும் அவ்வாறு போராடுகின்ற மக்கள் மீது தமிழக வெற்றிக் கழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் கழகம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க