Tuesday, September 27, 2022
முகப்பு செய்தி தமிழ்நாடு ஜனவரி 8 - பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

மத்திய அரசின் தொழிலாளர் விரோத - மக்கள் விரோத - தேசவிரோத கொள்கைகளை கண்டித்து, நாளை (08.01.2020) நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம்.

-

தொழிலாளிகளுக்கு எதிரான கொள்கைகளை அமல்படுத்தி வரும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து நாளை ஜனவரி 8 புதன் கிழமை இந்திய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் செய்வதாக பல்வேறு தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் 25 கோடிப் பேர் பங்கேற்பதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தங்களது 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் மத்திய இணை அமைச்சர்  கங்வாரை தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த 14 அம்சங்களில் ஒன்றைக்கூட தீர்ப்போம் என அமைச்சர் உறுதி மொழி அளிக்கவில்லை, பொதுவில் ஆகட்டும் பார்க்கலாம் என திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இது தொடர்பாக சி.ஐ.டி.யூ., தொ.மு.ச., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி ஆகியவற்றை உள்ளிட்டு பத்து தொழிற்சங்கங்கள் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டன.

அதில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உறுதி மொழி அளிக்காத மத்திய தொழிலாளர் அமைச்சகத்தை கண்டித்திருக்கிறார்கள். தொழிலாளர் மாநாடு நடைபெற்று நான்கு ஆண்டுகள் ஆகிறது. இறுதியாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற மாநாட்டில் பல பாஜக மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் 2015 ஆகஸ்டு மாதத்தில் தொழிலாளர்களின் 12 அம்சக் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்காக மோடி அரசு சார்பில் மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டாலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தொழிலாளர் சட்டங்களை சிதைப்பதோடு, தொழிற்சங்கங்களின் ஆலோசனைகளை மோடி அரசு அவமதித்து வருகிறது. பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் தோல்வி அடைந்திருக்கும் மத்திய அரசு தேச நலனக்கு விரோதமாக பொதுத்துறை நிறுவனங்கள், இயற்கை வளங்களை தனியார் மயமாக்குவதிலும், விற்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. 12 விமான நிலையங்கள் ஏற்கெனவே தனியாருக்கு விற்கப்பட்டதுவிட்டது. ஏர் இந்தியாவை 100 சதவீதம் விற்பதாகவும் முடிவு செய்யப்பட்டுவிட்டது.

பி.எஸ்.என்.எல் – எம்.டி.என்.எல் இணைப்பின் மூலம் 93 ஆயிரம் ஊழியர்கள் விருப்ப ஓய்வு என்ற பெயரில் வேலை இழந்துள்ளனர். தற்போது ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. 150 தனியார் ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

படிக்க:
♦ ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !
♦ ஜே.என்.யூ : ஒரு ஏபிவிபி ரவுடி கூட இன்னும் கைது செய்யப்படவில்லை !

பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி வங்கிகள் இணைக்கப்பட்டன. நிலக்கரி துறையில் 100 % அன்னிய நேரடிமுதலீடுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மின்சாரம், சாலை போக்குவரத்து, இன்சூரன்ஸ் போன்றவைகளும் தனியார்மயமாக்கப்படுகிறது.

எனவே மத்திய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, தேசவிரோத கொள்கைகளை கண்டித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழகத்தில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியும் கலந்து கொள்கிறது.

பன்னாட்டு, தரகு முதலாளிகளுக்கு ஆதரவாக நாட்டை விற்பதோடு, தொழிலாளர் உரிமையை பறிப்பதில் மோடி அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. அதை நாடு முழுவதும் தொழிலாளர்கள் இணைந்து எதிர்க்கும் இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டியது நம்முடைய கடமையாயகும்.


மதன்

  1. திருப்பூரில் பொது வேலை நிறுத்தம் பற்றி சிறு, குறு தொழில்துறையினர்களிடம் பேசும் போது இந்த சட்டம் பற்றிய ஒரு தகவலும் இல்லை.

    மேலும் வேலையே இல்லாமல் இருக்கும் போது வேலை நிறுத்தம் எப்படி செய்வது என்கிறார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க