முகப்புசெய்திஇந்தியாஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம்...

ஜாமியா பல்கலை மாணவர்கள் மீது இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கிச் சூடு ! ஒரு மாணவர் படுகாயம் !

பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது.

-

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாமியா மிலியா மாணவர்கள் அமைதியான முறையில் இன்று (30-01-2020)  நடத்திய போராட்டத்தின் மீது, ஒரு இந்துத்துவக் கிரிமினல் துப்பாக்கியால் சுட்டுள்ளான். அந்த துப்பாக்கிச் சூட்டில் ஜாமியா கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்துத்துவக் கிரிமினல் கோட்சேவால் காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளான இன்று, ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழக மாணவர்கள், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக டில்லியின் ஜாமியா பகுதியில் போராட்டம் நடத்தி வந்தனர். அங்கு கலவர தடுப்புப் போலீசும் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

போராட்டம் அமைதியாகச் சென்று கொண்டிருக்கையில், அங்கு வந்த கோபால் எனும் இந்துத்துவ கிரிமினல், “இதோ வாங்கிக்கொள்.. சுதந்திரம்” என்று கத்திக் கொண்டே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கிச் சுட்டான். மேலும் “ஹிந்துஸ்தான் வாழ்க, டில்லி போலீஸ் வாழ்க” என முழக்கமிட்டுக் கொண்டே சுட்டான்.

இதில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுல் ஒருவரான ஷதாப் நஜார் என்பவருக்கு கையில் குண்டு பாய்ந்தது. இந்த மாணவர் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்தவர் என்பதும், ஜாமியா கல்லூரியில் பெருந்திரள் தொடர்புத்துறையில் படித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

படிக்க:
♦ பகுத்தறிவாளர்களை சுட்டுக்கொல்ல சித்தாந்த பயிற்சியும் ஆயுத பயிற்சியும் அளித்தது சனாதன் சன்ஸ்தா !
♦ பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !

குண்டடி பட்ட மாணவரை அருகில் உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் போலீசு மற்றும் மீடியாக்களின் முன்னிலையில் நடந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்னர், டில்லியில் தேர்தல் பிரச்சாரப் பேரணியில் பேசிய பாஜக-வின் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், கூடியிருந்த சங்கிகளை நோக்கி, “தேசத் துரோகிகளை என்ன செய்ய ?” என்று மேடையில் ஊளையிட, சங்க பரிவாரக் கும்பல் “சுட்டுக் கொல்வோம்” என ஓலமிட்டது. இந்த வெறியூட்டும் சம்பவம் நடந்து சரியாக இரண்டாம் நாளில் அதே போல ஒரு துப்பாக்கிச் சூடு மாணவர்கள் மீது நடந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என போற்றப்படும் ஒரு நாட்டில், ஒரு மத்திய அமைச்சர், பிடிக்காதவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் எனப் பகிரங்கமாகப் பேசியுள்ளார். இந்த வெறியூட்டும் பேச்சில் வெறியேற்றப்பட்ட ஒரு இந்துத்துவ கிரிமினல், அமைதியாகப் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுடவும் செய்திருக்கிறான்.

இந்தியா போன்ற நாட்டில், ஒரு சாதாரண நபரால் ஒரு துப்பாக்கியை வாங்க முடியுமா? வாய்ப்பே இல்லை. அன்று காந்தியைக் கொன்ற கோட்சேவின் பின்னணியில் கோழை சாவர்க்கரின் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நின்றது போல, இன்று துப்பாக்கிச் சூடு நடத்திய கோபாலின் பின்னணியில் நிற்கும் கிரிமினல் கும்பல் எதுவாக இருக்க முடியும் ? – இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாதக் கும்பலான ஆர்.எஸ்.எஸ்.-ஐத் தவிர !


நந்தன்

செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ்

  1. ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர் கையில் சுடப்பட்டது அம்மாநிலத்தில் பல லக்ஷ கணக்கான இந்துக்களை இன படுகொலை செய்ததற்கும் மேலான ஒரு தீவிரவாத செயலாக கருதப் படுகிறது.

    பொதுவாகவே முசுலீம்களால் நடத்தப்படும் லக்ஷ கணக்கான மத வெறி கொலைகள், குண்டு வெடிப்பு சம்பவங்கள், கற்பழிப்புகளை எல்லாம் விட மோசமான முறையில் ஒரு இந்து, முசுலீமை கையில் சுட்டுள்ளார்.

    …. எவ்வளவு try பண்ணாலும் உங்க குரூப் ஐ மிஞ்ச முடியாது சார்!

    • மனசாட்சி உள்ள மனிதன் என்றால் இரண்டும் தவறு என்று சொல்லியிருப்பீர் , உங்களுக்கும் மனசுகுக்கும் தான் சம்பந்தமே இல்லையே

  2. இந்துத்துவா தீவிரவாதிகளை நீங்கள் கூடவா மென்மையாக கிரிமினல் என்று எழுதுவீர் , பிராமண தீவிரவாதிகள் , இந்துத்துவா பயங்கரவாதிகள் என்று எழுத ஏன் மனம் வரவில்லையா? தீவிரவாதிகள் , பயங்கர வாதிகள் என்ற சொல்லை முஸலீம்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற இந்திய ஊடக தர்மத்தில் நீங்களும் சங்கமித்து விட்டீரே!

  3. உன்னுடைய அரசின் புள்ளி விவரமே லட்சக்கணக்கான பேர் படுகொலை என்பதை ஏற்பதில்லை. வய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் எழுதுவது என கோயபல்ஸ் பாணியில் தொடர்கிறீர்கள். உண்மையில் அரசின் கொள்கைகளால்தான் நாடு முழுக்க லட்சக் கணக்கான விவசாயிகள் கொல்லப்படுகிறார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறுந் தொழில்கள், விவசாயம், வணிகம் என பல்லாயிரக்கணக்கானோர் வாழ்விழந்து அதுதான் இன்றைய பொருளாதார நெருக்கடியாக பூதாகரமானதாக நாட்டையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் செத்து மடிபவர்கள் எண்ணிக்கையை எந்தப் புள்ளி விவரம் கூறும்? இந்த அரசை விட மிகப் பெரும் பயங்கரவாதி யாரேனும் உள்ளார்களா? பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள் நாடு முழுக்க நடத்துகின்ற படுகொலைகளைப் பட்டியலிட்டால் அது நீங்கள் சொல்கிற பட்டியலை விட பலமடங்கு கூடுதலாகவே இருக்கும். முதுகெலும்பற்ற பத்திரிக்கைகள் இதை ொுொுொுொுொுொுொுொுொுொுொுொுொுொுொுொ எழுதப் போவதில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க