பாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி !

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்குச் சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுத பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

0

ந்துத்துவ அமைப்புகள் ஆயுதங்களை தூக்கிக்கொண்டு ஊர்வலம் செல்வதும், ‘பசுப் பாதுகாப்புப் படை’ என்ற பெயரில் சிறுபான்மையினரை, ஒடுக்கப்பட்ட மக்களை அடித்து கொல்வதும் கடந்த ஐந்தாண்டு மோடி ஆட்சிக் காலத்தில் ஊடகங்களில் தினசரி வந்த ’வழக்கமான’ செய்தி. மோடியின் இரண்டாவது ஆரவார வருகைக்குப் பிறகு, இந்துத்துவ குண்டர் படை வெளிப்படையாகவே ஆயுதப் பயிற்சிகளில் இறங்கியுள்ளது என்பதுதான் இப்போதைய ’புதிய’ செய்தி.

மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா. இவருக்கு சொந்தமான ‘செவன் லெவன் அகாடமி’ என்ற பயிற்சிப் பள்ளியில் மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்ட ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகளை பஜ்ரங் தளம் நடத்தியுள்ளது.

மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சீருடைகள் அணிந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகளை வைத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு என்ற தன்னார்வ அமைப்பு.

பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா பள்ளியில் வழங்கப்பட்ட ஆயுத பயிற்சி

மேற்கண்ட படத்தை பிரகாஷ் குப்தா என்பவர், ”மே 25 முதல் ஜூன் 1 வரை பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவின் அகாடமியில் ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டன” என்ற குறிப்புடன் தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.

“சில குழந்தைகள் மிகவும் ஆபத்தான துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். நாடு முழுவதிலும் வன்முறையைத் தூண்டுவதில் முக்கியப் பங்காற்றும் பஜ்ரங் தளம் என்ற இந்துத்துவ அமைப்பே இந்தப் பயிற்சிகளை அளித்துக்கொண்டிருக்கிறது” என்கிறார் இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் செயலாளர் சஞ்சய் பாண்டே.

“குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் இந்தப் பயிற்சி பள்ளி மீதும் பஜ்ரங் தளத்தின் மீதும் நடவடிக்கை எடுக்குப்படி போலீசில் புகார் அளித்துள்ளோம். முதலில் போலீசு எங்களுடைய புகாரை ஏற்க மறுத்தது. அதன்பின், மேலதிகாரியை சந்தித்துப் பேசினோம். அவர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்” என்கிறார் சஞ்சய் பாண்டே.

படிக்க:
தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரை : ஒரே காவிக் கும்பல் – ஒரே துப்பாக்கி !
♦ ‘எளிமை’யான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் ‘கொலைகார’ பின்னணி !

போலீசு அதிகாரி குல்கர்னி, “பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தவர்களை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர்கள் துப்பாக்கிகளை வைத்து பயிற்சி எடுக்க அனுமதி வாங்கியிருப்பதாக தெரிவித்தார்கள். நாங்கள் அனுமதிக்கான ஆதாரங்களை சமர்பிக்கும்படி கேட்டிருக்கிறோம். அதைப் பார்த்துவிட்டுத்தான் அடுத்து என்ன செய்வது என முடிவு செய்வோம்” என்கிறார். நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டோம் என்பதைத்தான் அந்த போலீசு அதிகாரி இத்தனை மழுப்பலாக சொல்கிறார்.

இந்துத்துவ அரசை விமர்சித்து கார்ட்டூன் போட்டால் கைது, விமர்சித்து எழுதினால் தேச துரோக வழக்கு… இந்துத்துவ குண்டர் படை வெளிப்படையாக ஆயுதப் பயிற்சி எடுத்தால் குறைந்தபட்சம் அது ஒரு புகாராகக்கூட பதியப்படாது. இதுதான் இந்துத்துவ ஆட்சி! இதுதான் இந்து ராஷ்டிரம் !!


கலைமதி
நன்றி: தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க