டந்த வாரம் புதிதாக பதவியேற்ற மத்திய அமைச்சர்களுல் ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஒடிசா மாநிலத்திலிருந்து தேர்வான பிரதாப் சாரங்கி. வெள்ளை ஜிப்பா, ஒடிசலான உருவத்தில் தாடியுடன் தோற்றமளித்த 64 வயதான சாரங்கியை ‘எளிமை’யின் சிகரமாக ஊடகங்கள் எழுதின.

ஒடிசாவின் பாலாசூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்ற சாரங்கி, குடிசையில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும், ஏழைகளுக்காக இப்படியொரு ‘தவ’ வாழ்வை வாழ்வதாகவும் தமிழ் ஊடகங்களும்கூட எழுதின. சமூக ஊடகங்களில் சாரங்கியின் ‘ஏழை பணக்காரனான’ கதை வைரலானது.

ஆனால், பிரதாப் சாரங்கி செய்த முன்வினை, அவரை அடுத்த நாளிலேயே கொடூர வில்லனாக்கிவிட்டது. பல இணைய ஊடகங்கள் அவரைப் பற்றிய பின்னணியை வெளியிட ஆரம்பித்தன. பிபிசி, “ஆஸ்திரேலிய கிறித்துவ மிஷனரி கிரஹாம் ஸ்டெயின்சும் அவருடைய இரண்டு மகன்களும் உயிரோடு எரித்து கொல்லப்பட காரணமாக இருந்து, இந்து கும்பலுக்கு தலைமையேற்று நடத்தியவர் பஜ்ரங் தளத்தின் தலைவர் சாரங்கி” என செய்தி வெளியிட்டது.

ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்றது சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்.  கிறித்துவ மிஷனரி குடும்பத்தின் படுகொலைக்கு பஜ்ரங் தளமும், தாரா சிங்கும்தான் காரணம் என வெளிப்படையாக தெரிந்த பின்பும் இந்தப் படுகொலைக்கு எந்தவித ஆதாரம் இல்லை என அதிகாரப்பூர்வ விசாரணை தெரிவித்தது.

நீண்ட கால வழக்கு விசாரணைக்குப் பிறகு தாரா சிங் உள்ளிட்ட 12 பேர் 2003-ம் ஆண்டு தண்டிக்கப்பட்டனர். ஆனால், ஒடிசா உயர்நீதிமன்றம் தாரா சிங்கிற்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை குறைத்து தீர்ப்பு எழுதியது.  ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மற்ற 11 பேரை, போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலையும் செய்தது.

ஸ்டெயின்சையும் அவருடைய இரண்டு மகன்களையும் ஜீப்பில் வைத்து உயிரோடு எரித்து கொன்ற சாரங்கியின் நெருங்கிய கூட்டாளி தாரா சிங்(வலது).

“சாரங்கி அளித்த பல நேர்காணல்களில், கிறித்தவ மிஷனரிகளின்  ‘தீய நோக்கங்கள்’ குறித்து கடுமையாக பேசியிருக்கிறார். கிறித்தவ மிஷனரிகள் இந்தியா முழுவதையும் மதம் மாற்றிவிட வளைந்துகொடுப்பார்கள்” என ஒடிசாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சந்தீப் சாகு தெரிவிக்கிறார்.

இத்தகைய பின்னணி கொண்ட சாரங்கி மோடியின் இரண்டாவது ஆட்சியில் மத்திய இணை அமைச்சர் ஆக்கப்பட்டுள்ளார்.  2002-ஆம் ஆண்டில் பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் ஒடிசா சட்டப்பேரவையின் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலை முன் நின்று நடத்தியது, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சாரங்கி அப்போது கைது செய்யப்பட்டார்.

இந்த கொலைகார பின்னணி குறித்த எந்தவித குறிப்பும் இல்லாமல் வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்ட நிலையில், சமூக ஊடகங்கள் பிரதாப் சாரங்கியை ‘ஒடிசாவின் மோடி’ என கொண்டாடின.  “அவர் குடிசையில் வாழ்கிறார், சைக்கிள் மட்டுமே வைத்திருக்கிறார்… பழங்குடி குழந்தைகளுக்காக 100 பள்ளிகள் திறக்க காரணமாக இருந்ததாகவும், சாராயத்துக்கு எதிராகவும், லஞ்சத்துக்கு எதிராக அயராது பாடுபடுவதாகவும்” இந்தப் பதிவு சாரங்கியின் புகழ் பாடுகிறது.

ஜனாதிபதி மாளிகையில் பதவி பிரமாணம் செய்துகொள்ளும் சாரங்கியின் படத்தைப்  போட்டு ‘குடிசையில் வாழும் எளிய மனிதர். உங்களுக்கு மரியாதை ஐயா’ என கொண்டாடியது மற்றொரு பதிவு.

“தன்னுடைய தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு சைக்கிளில் செல்வது அவருடைய வழக்கம். சட்டப்பேரவையில் கலந்துகொள்ளுபோதுகூட சைக்கிளில்தான் வருவார், ரோட்டோர கடைகளில் உணவு உண்பார்” என்கிறார் பத்திரிகையாளர் சாகு.

படிக்க:
ஸ்டெயின்ஸ் பாதிரியார் படுகொலை : சங் பரிவாரை ரட்சிக்கும் திரைப்படம் !
♦ ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்குத் தீர்ப்பு : நீதிமன்றமா? காவிமன்றமா?

நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் தன்னைவிட பண பலம் மிக்க சக்தி வாய்ந்த எதிர்க்கட்சி வேட்பாளரை எதிர்த்து களம் கண்டார் சாராங்கி. டேவிட்டும் கோலியத்தும் மோதிக் கொள்வதுபோல என இந்த மோதல் வர்ணிக்கப்பட்டது.

மாண்புமிகு நரேந்திர மோடியின் ’குஜராத் வளர்ச்சியை’ கருத்தில் கொண்டு, சாரங்கியை ‘ஒடிசாவின் மோடி’ என அவருடைய அடிபொடிகள் வர்ணிக்கிறார்கள்.

உண்மையிலேயே குஜராத்தில் 2000 பேர் கொல்லப்படுவதற்குப் பின்னணியில் நின்றது குஜராத்தின் நரேந்திர மோடி என்றால், ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை மட்டுமல்லாமல் ஒடிசாவில் நடந்த பல்வேறு இந்துத்துவ வன்முறை வெறியாட்டத்திற்குக் காரணமான சாரங்கியை, ’ஒடிசாவின் நரேந்திர மோடி’ என்று அழைப்பதில் மிகை ஏதும் இல்லை.


அனிதா

நன்றி: கேரவன் டெய்லி

6 மறுமொழிகள்

 1. தமிழ் இந்து இந்த பஜ்ரங்கி சாரங்கியை ‘ஒடீசாவின் மோடி’ என்று புகழாரம் சூட்டியது.உண்மைதான் மோடி குஜராத்தில் செய்த இஸ்லாமிய இனப்படுகொலையின் தளகர்த்தர் இந்த சாரங்கி ஸ்டேன்ஸ் பாதிரியாரை அவரது பிஞ்சு குழந்தைகளுடன் எரித்து படுகொலை செய்ததின் தளகர்த்தர் என்றே பொருத்தம்?!

 2. எனக்கு ஓரிரு விஷயங்கள் மட்டும் புரியவே மாட்டேங்கிறது? யாரவது விளக்குவார்களா?

  1) உலகத்தில் உள்ள இதர மதங்களான கிறித்தவம், இஸ்லாம் ஏன் நம் இந்தியாவில் பிறந்த புத்த மத பற்றாளர்கள் போன்றவர்கள் தங்களின் மத சிறப்பம்சங்களை எடுத்து கூறி உலகின் அனைத்து நாட்டு மக்களிடம் எடுத்து செல்ல முயற்சிக்கிறார்கள். ஏன் இந்த இந்து மத பற்றாளர்களான RSS மற்றும் பஜ்ரங்தள் போன்ற இந்து வெறி கும்பல் அப்படி எதுவும் செய்யாமல், இந்திய நாட்டில் மட்டும், யாரும் அவனுக்கு பிடித்த மதத்தில் சேரக்கூடாது, சென்றவன் திரும்பி வா, வேறு எந்த மத பிரசாரமும் செய்யக்கூடாது என்று கொதிக்கிறார்கள்?

  2) இதற்கும் மேலே இன்னொன்று, இந்த இந்து மத பற்றாளர்கள், இன்னும் நேரிடையாக சொல்வதென்றால், குறிப்பாக RSS பிராமணர்கள், இவர்கள் உலகில் உள்ள அனைத்து கிறித்தவ மற்றும் இஸ்லாமிய நாடுகளில் சுக வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு, RSS-க்கு தேவையான நிதி உதவிகளை நேரிடையாகவும், மறைமுகமாகவும் செய்கிறார்கள். ஆனால், தங்கள் இந்து மதத்தை நேரிடையாக பிரசாரம் செய்யாமல், இவர்களின் சில சாமியார்களை அங்கு வரவழைத்து, ஒருத்தர் யோகா சொல்லிக்கொடுக்கிறாராம், ஒருத்தர் “வாழும் கலை” சொல்லிக்கொடுக்கிறாராம், இன்னோருத்தர் “ஈஷா” என்று எதையோ சொல்லிக்கொடுத்து நடனம் ஆட கற்றுக்கொடுக்கிறாராம்??? . ஏன் நேரிடையாக இந்து மதத்தை பரப்ப முயல்வதில்லை? அப்படி பரப்புகிறார்கள் என்றால், எந்த இந்து ஜாதியில் சேர்த்துக்கொள்கிறார்கள்?

  இதற்கு தெளிவு கொடுக்க இயலுமா?

  • நீங்கள் இஸ்லாம் கிறிஸ்துவம் செய்வதை RSS செய்வதாக சொல்லி கொண்டு இருக்கிறீர்கள். கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் ஹிந்து கடவுளை அவமதித்து இழிவுபடுத்தி பல பேச்சுக்கள் உள்ளது சமீபத்திய உதாரணம் மோகன் லாசரஸ் அதேபோல் இஸ்லாமிய ஆட்சியில் (ஆயிரக்கணக்கான) ஹிந்து கோவில்கள் மற்றும் கடவுள் சிலைகளை எப்படி உடைக்கப்பட்டது என்பது பற்றி எல்லாம் இஸ்லாமிய மத குருக்களே எழுதி இருக்கிறார்கள். காஷ்மீரை சைவ மதத்தின் தொட்டில் என்று சொல்வார்கள், இஸ்லாமிய மன்னன்(Sikandar Shah Miri) ஒரே வருடத்தில் காஷ்மீரில் இருந்த அனைத்து ஹிந்து கோவில்களையும் இடித்து, மதம் மாறாத பல ஆயிரம் ஹிந்துக்களை கொன்று அழித்தான் (இது பற்றி பல வரலாற்று நூல்கள் உள்ளது)… உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்பட்ட காஷ்மீர் மார்த்தாண்ட கோவில் இடிக்கப்பட்டது பற்றி பெரிய வரலாறே உண்டு.

   இஸ்லாமிய கிறிஸ்துவ இயக்கங்களுக்கு முன்னால் RSS எல்லாம் ஒன்றுமே கிடையாது. உலகம் முழுவதும் இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் நிகழ்த்திய அழிவை போல் ஹிட்லர், கம்யூனிஸ்ட்கள் கூட செய்து இருக்க முடியாது, அந்தளவுக்கு நம்பிக்கையற்றவர்கள் என்று சொல்லி பெரும் அழிவை இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் செய்து இருக்கிறது.

   உலகத்திலேயே (இஸ்லாமிய கிறிஸ்துவர்களால்) மிக பெரிய அளவில் அழிவை சந்தித்த ஒரே இனம் ஹிந்துக்கள் மட்டுமே.

   முதலில் வரலாற்றை படித்து விட்டு பிறகு பேச வாருங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க