Saturday, April 26, 2025
முகப்புகலைகவிதைவீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்

வீதிக்கு வாங்க ரஜினி | மனுஷ்ய புத்திரன்

நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும், கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும், தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும், ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன இன்னும் நீங்கள் அமைதியாக இருப்பது நல்லதல்ல...

-

வீதிக்கு வாங்க ரஜினி

வீதிக்கு வாங்க ரஜினி
முதல் ஆளாக இல்லாவிட்டாலும்
கடைசி ஆளாகவாவது.
நீங்கள் காணாமல் போய்விட்டீர்கள் என்றும்
கடத்தப்பட்டு விட்டீர்கள் என்றும்
தலைமறைவாகிவிட்டீர்கள் என்றும்
ஊடகங்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டன
இன்னும் நீங்கள்
அமைதியாக இருப்பது நல்லதல்ல

வீதிக்கு வாங்க ரஜினி
வெய்யில் குறைந்து
அந்தி சாய்ந்துவிட்டது
மாலை நடை மூப்புக்கு நல்லது
கடல் காற்று சுவாசத்திற்கு நல்லது
சாலையோர தேநீர் கடையில்
இஞ்சி டீ தலை சுற்றலுக்கு நல்லது

வீதிக்கு வாங்க ரஜினி
கதவைத்திற காற்றுவரட்டும்
என்றார் நித்தி
நீங்கள் ‘ கேட்’டைத்திறங்கள்
‘மைக்’குகள் ‘ கேட்’ டிற்கு வெளியே
உங்களுக்காக தவமிருக்கின்றன
இஸ்லாமியர்களுக்கு
நீங்கள் சொன்னபடி ஒன்றல்ல
நூறு அடிகள் விழுந்துவிட்டன
இன்னும் ஏன் தயங்குகிறீர்கள்?

வீதிக்கு வாங்க ரஜினி
போராட்டக்காரர்களிடையே
சமூகவிரோதிகள் புகுந்துவிட்டார்கள்
என்பதுதானே உங்கள் அடுத்த டயலாக்?
அதை எவ்வளவு நேரம் மனப்பாடம் செய்வீர்கள்?
ஆனால் அதை இந்த முறை
எப்படிச் சொல்வதெனக் குழம்புகிறீர்கள்
ஏனெனில் எந்தத் தீவிரவாதியும் புகமுடியாதபடி
போராடுகிறவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள்
குல்லாபோட்ட தீவிரவாதிகள்
முக்காடிட்ட தீவிரவாதிகள்

வீதிக்கு வாங்க ரஜினி
நீங்கள் துடிப்பாக நடந்துவருவதைக்காண
எங்களுக்கும் மிகவும் பிடிக்கும்
உங்கள் துருப்பிடித்த மூளையைப்போலவே
உங்கள் துடிப்பும்
இந்த வயதிலும் மாறாமல்
அப்படியேதான் இருக்கிறது
எதையாவது பேசுங்கள்
அரசரின் ரத்தக்கறை படிந்த பூட்ஸ்களை
இன்னொருமுறை கழுவுங்கள்
நீங்கள் உங்கள் ரசிகனின் மாமிசத்தை
விற்பவர் என்பதையும்
உங்களையே எந்தக் கூச்சமும் இல்லாமல்
விற்றுக்கொள்பவர் என்பதையும
இன்னொருமுறை உலகிற்கு காட்டுங்கள்

வீதிக்கு வாங்க ரஜினி
வீதியில்தான் மக்கள் இருக்கிறார்கள்
வீதியில்தான் நீதி இருக்கிறது
வீதியில்தான் அன்பு இருக்கிறது
வீதியில்தான் சத்தியம் இருக்கிறது

நன்றி: மனுஷ்ய புத்திரன்

disclaimer

  1. 2020ல் இறுதியில் அரசியல் கட்சி மற்றும் சின்னம் ஒன்றை சூப்பர் ஸ்டார் பதிவு செய்வார் பீசப்பி அரசு ஒரு சில நாட்களிலேயே அதை அங்கீகரித்து வழங்கிவிடும். மற்றவர்களுக்கு மட்டும் பரிசீலனை செய்ய சில பல மாதங்கள் தாமதமாகும்.
    கட்சியின் கொள்கை என்ற ஒன்றை அறிவிக்க வேண்டுமே? கொள்கையை முடிவு செய்ய வேண்டிய நேரத்தில் தலையே சுற்றி விடும். ஆன்மீகம்தான் என் கட்சியின் கொள்கை என்று ஒற்றை வரியில் அறிவித்து விட்டு, கையை நீட்டி ஆள் காட்டி சுண்டு விரலை நீட்டி மக்களை மடையர்கள் ஆக்கி விடுவார்.
    கட்சியின் துணை தலைவர்களாக இப்போது உள்ள ரசிகர் கூட்டத்திலிருந்தும் பழைய கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தலைவர்கள் சிலரையும் தேர்வு செய்யும் முன்பாக, அவர்கள் எவ்வளவு ஆன்மீகப் பற்று உள்ளவர்கள் என்பதை அறிய, அவர்கள் கைகளில் எத்தனை பக்திக் கயிறு கட்டி உள்ளார் அல்லது பூணூல் அணிந்தவரா என்பதை அறிந்து அதற்கேற்ப கட்சி பதவிகள் வழங்கப்படும்.
    ரஜினி போட்டியிடும் தொகுதியில் எதிர் கட்சி சார்பாக சினிமாத் துரையைச் சார்ந்த ஒரு இளம் தமிழ் சிங்கம் போட்டியிட்டு, வேறு சில ரசிகர் மன்றங்களும், அரசியல் கட்சிகளும், ஜாதி அரசியலும் ரஜனிக்கு எதிராய் சேர்ந்தால், சசிகலாவும் விடுதலை பெற்று வந்து ஜெயலலிதாவின் பெயரை சொல்லி தமிழக அரசியலை கலக்கினால், ரஜினியின் கதையே கந்தலாகிவிடும். ஆன்மிக அரசியலே காணாமல் போயிடும்.
    மற்ற சினிமா நடிகர்கள் போன்றே ரஜினியும் ஒரு நடிகர். இவர் தமிழகத்திற்கு பிழைப்புத் தேடி வந்தவர். இவர் கருப்பாய் இருந்தாலும் பார்ப்பண மனைவி கிடைத்ததாலும், உச்சிக் குடுமி பத்தரிகைகள் இவரை ஓகோ என்று புகழ்வதாலும், ஜெயலலிதா, கலைஞர் இல்லாததாலும், மத்தியில் பீசப்பி ஆட்ச்சி அமைந்ததாலும், இவர் புகழ் பாட அடிமைகள் பலர் இருப்பதாலும், இவருக்கு 2021ல் A V M உதவிட உள்ளதாலும், அடுத்த தமிழக முதலமைச்சர் ரஜினிதான் என்று சில பிரபலங்கள் நம்புவதாலும், சிங்கபூரில் பொருத்திய சிறுநீரகம் ஒத்துழைப்பு தருவதாலும், ரஜினி ரசிகர்கள் பதவிக்காக பால் அபிசேகம் செய்வதாலும், ரஜினியின் படத்திற்கு கள்ள மார்கட்டில் டிக்கட் விற்பதால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறுவதாலும், ஆன்மீக அரசு அமைந்தால் மக்களின் குறைகளுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டியதில்லை, ஆண்டவனே பொறுப்பேற்க வேண்டி வரும் என்பதாலும், ரஜினி ஆன்மீக அரசின் கீழ் தமிழகம் சொர்க்க பூமியாக மாறும் என நம்புவதாலும், 2021ம் தேர்தலில் தமிழகத்தில் நிச்சயம் ஒரு அதிசயம் நடந்தே ஆ வேண்டும்?

  2. வீதிக்கு வந்து விடாதீர்கள் ரசினி…உங்கள் வாயின் முன்னே மைக்கை நீட்டி முழக்கி நிற்கும் ஊடகவியலாளர்களின் ஊடே “சமூக விரோதிகள்”நுழைந்து விட நிறையவே வாய்ப்பிருக்கிறது..அவை அத்துனையும் துடிக்கும் கரங்கள்..

  3. மனுஷ்ய புத்திரன் அல்ல இஸ்லாமிய புத்திரன் அதுவும் பொய்களை வெறுப்பை பரப்பும் புத்திரன்.

    • ஹாஹா துப்பாக்கி ரிலீசப்போ தவுகீத் ஜமாத்து இவனை மிருக புத்திரன் அது இதுன்னு எப்படி எல்லாம் வசைபாடி போஸ்டர் ஒட்டியது என்பதை நாடறியும்!

  4. அப்படி பாேடு ….! தியானத்தில் இருக்கார் …பாபா கூட டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறமா கேட் வரைக்குமாவது வருவார் ….? வருகைக்காக நான்காவது தூண் தெருவாேர சாக்கடை அருகே காத்துக்கிடக்குது ….?

  5. சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டத்தில் சுட்லர் வீதிக்கு வந்தாரா?
    குறைமுருகன் வந்தாரா?
    மூணாம் சுட்லர் வந்தாரா?
    கிஷாந்த் பிஷர் வந்தாரா?
    அப்போ என்ன ***க்கு ரஜினி மட்டும் வரணும்?
    இதே கனுஷ்ய புத்திரன் 2006 ல திமுக ஒரு கார்பரேட் கம்பெனின்னு சொல்லிட்டு திரிஞ்சான்!நல்ல காமெடி!2021 ளையும் திமுக ஆட்சிக்கு வராது!மேல பிஜேபி என்ற பேரை தாங்கள் தினம் உண்ணும் வழியில் மாற்றி எழுதும் போராளிகள் வழக்கம் போல அடுத்த ஆறு வருடங்களுக்கு இப்படியே கத்திட்டு இருக்க வேண்டியதுதான்! :))) U are all a bunch of jokers!Period

  6. ஹலோ ருவி அவர்களே..மனுஸ்யபுத்திரனின் கவிதையின் அரசியல் புரிய மனிதமூளை வேண்டும்..கொஞ்சம் மனிதநேயமும் வேண்டும்..காரியக்கிறுக்கர் ரசினிக்கு அவை இருக்க வாய்ப்பில்லை..ஏனெனில் rss சொல்றான் ரசினி ஆடுறான்..மோடி என்ற பாசிசக்கோமாளியோடு போட்டி போடும் ஒரே தகுதி ரசினிக்குதான் உள்ளது…அடுத்து வேண்டுமாயின் நீங்கள் முயலலாம்…

    • இஸ்லாமிய மதவெறியின் அடிப்படையில் பொய்களை பரப்பும் இஸ்லாமிய புத்திரனின் கவிதைகளை புரிந்துகொள்ள சாதாரண அறிவு இருந்தாலே போதும்… உங்களை போன்ற கிறிஸ்துவ மதவாதிகள் யார் ஹிந்து அடையாளத்தோடு வந்தாலும் அவரை பற்றிய வெறுப்பையும் அவதூறுகளையும் பரப்புவீர்கள் உங்களின் கிறிஸ்துவ மதவாதம் தான் ரஜினி போன்ற நல்லவர்கள் மீது வெறுப்பை கக்க வைக்கிறது.

  7. மணி சார் சீனா வினவு கூட்டங்கள் பாகிஸ்தான் கம்யூனிஸ்ட்டுகள் இதையெல்லாம் போட மறந்து விட்டீர்கள்..தள்ளி நில்லுங்கள் ரசினி கக்கும் விஷம் உங்கள் மீது பட்டுத் தொலைக்கப்போகிறது ..அது சரி விஷத்தை விஷம் என்ன செய்துவிடும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க