Sunday, October 13, 2024
முகப்புசெய்திஇந்தியாராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !

இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது.

-

நாடே பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் சூழலில், அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு பங்களிக்கும் நன்கொடையாளர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது.

மே 8- ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்டி எழுப்பப்பட உள்ள, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், புகழ்பெற்ற பொது வழிபாட்டுக்கான இடமாகவும் உள்ளதாக குறிப்பிட்டு, மத்திய நேரடி வரி வாரியம் வகைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி இன் துணைப்பிரிவு (2)ன் படி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2020-21 நிதியாண்டில் இருந்து அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 50% அளவிற்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும்.

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி குறிப்பிட்ட நிவாரண நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை, வரிவிதிப்பு வருமானத்திற்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்களின் மொத்த வருமானத்திலிருந்து விலக்குகளாகக் கருத அனுமதிக்கிறது.

சட்டத்தின் 80 ஜி பிரிவின் துணைப்பிரிவு (2) இன் பிரிவு (பி) இதில் விலக்கு இருக்கலாம் என கூறுகிறது. அதாவது, “முந்தைய ஆண்டில் மதிப்பீட்டாளர் செலுத்திய எந்தவொரு தொகையும், அத்தகைய கோயில், மசூதி, புதுப்பித்தல் அல்லது பழுதுபார்ப்புக்கான நன்கொடைகளாக வரி விலக்கு அளிக்கப்படலாம். குருத்வாரா, தேவாலயம் அல்லது பிற இடங்கள் வரலாற்று, தொல்பொருள் அல்லது கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் அல்லது எந்தவொரு மாநிலத்திலும் அல்லது மாநிலங்களிலும் புகழ்பெற்ற பொது வழிபாட்டுத் தலமாக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அரசிதழில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் ”

பிரிவு 80 ஜி இன் கீழ் விலக்கு அனைத்து மத அறக்கட்டளைகளுக்கும் கிடைக்கவில்லை. பிரிவு 11 மற்றும் 12 ன் கீழ் வருமான வரி விலக்கு பதிவு செய்ய ஒரு தொண்டு அல்லது மத அறக்கட்டளை முதலில் விண்ணப்பிக்க வேண்டும், அதைத் தொடர்ந்தே 80 ஜி பிரிவின் கீழ் விலக்கு நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படுகிறது, என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற மூன்று மத வழிபாட்டுத் தலங்களான கபாலீஸ்வரர் கோயில் மற்றும் சென்னையில் உள்ள அரியகுடி சீனிவாச பெருமாள் கோயில் மற்றும் மகாராஷ்டிராவின் சஜ்ஜங்காட்டில் உள்ள ஸ்ரீ ராம் மற்றும் ராம்தாஸ் சுவாமி மடம் போன்றவற்றுக்கு இதேபோன்ற அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டது.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

அயோத்தியில் பாபர் மசூதி நின்ற இடத்தில் ராமர்கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் அறக்கட்டளை 15 உறுப்பினர்களுடன் பிப்ரவரி 5 ஆம் தேதி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. உத்தரபிரதேச சன்னி வக்ஃப் வாரியத்திற்கு மற்றொரு பகுதியில் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மே 6 ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு கூட்டத்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது பொதுச் செயலாளரும் விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான சம்பத் ராய், “ஊரடங்கு விதிகளை தளர்த்தியபின், தளத்தில் பணிகள் மீண்டும் தொடங்கும் என்றும் உறுப்பினர்கள் மீண்டும் கூடி பூமி பூஜை போடும் தேதியை தீர்மானித்து, கோயில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட அடுத்த நாளே உத்தர பிரதேச முதலமைச்சர் சமூக இடைவெளியையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, அயோத்தி ராமருக்கான சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இப்போது, கோடிக்கணக்கான மக்கள் பணியிழந்து, வாழ்வாதாரம் இழந்துள்ள சூழலில், இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது. அதற்குத் தோதாக நன்கொடை விதிகளை எதேச்சதிகாரத்துடன் மாற்றிக்கொண்டிருக்கிறது.


– அனிதா

நன்றி : த வயர் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க