டந்த செப்டம்பர் 27-ம் நாள் பெரியார் குறித்த இணையவழிக் கருத்தரங்கில் உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள், மனுநீதி நூலில் வர்ண வேறுபாடின்றிப் பெண்கள் அனைவரையும் பிறப்பு அடிப்படையில் இழிவுபடுத்திய ஒரு பகுதியை அந்நூலில் இருந்து படித்துக் காட்டியதை ஒட்டி, அவர் பெண்களை இழிவுபடுத்திவிட்டதாக சங்க பரிவாரக் கும்பல் கூச்சலிடத் தொடங்கியது.

திருமாவளவனைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என எச். ராஜா உள்ளிட்ட இந்துத்துவ சங்கிகள் கூறியதைத் தொடர்ந்து சைபர் கிரைம் போலீசு, தொல். திருமாவளவன் மீது, பிரிவு 153, 153A, 298, 295A, 505(1), 505(2) ஆகிய ஆறு பிரிவுகளிலும் வழக்கு பதிவு செய்திருக்கிறது.

இதனைக் கண்டித்தும், மனுநீதியை தடை செய்ய வலியுறுத்தியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடந்த சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் மனுநீதியை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை, கோவை, திருவாரூர், காஞ்சிபுரம், தருமபுரி, நெல்லை ஆகிய நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

நெல்லை :

கோவை :

சென்னை :

காஞ்சிபுரம் :

தருமபுரி : 

திருவாரூர் :

 

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க