PP Letter headபத்திரிகைச் செய்தி

25.02.2021

ரக்கு மற்றும் சேவை வரி (GST) யை கண்டித்தும் மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருட்கள் எடுத்து செல்லும் போது மின்னணு முறையில் செலுத்தவேண்டிய இ-வே பில்லை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும் நாளை பிப்ரவரி 26 தேதியன்று (26.2.2021) அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பாக. ஏறத்தாழ 40,000 வர்த்தக அமைப்புக்களும் எட்டு கோடி வர்த்தகர்களும் பங்கேற்க உள்ள அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.

தொடர்ச்சியாக பெட்ரோல்- டீசல் – சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.25 விலை உயர்ந்து ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வால் போக்குவரத்திற்கான செலவு அதிகளவில் அதிகரித்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வயிற்றைச் சுருக்கி வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரூ. 30-க்கும் குறைவாக அடக்கவிலை உள்ள பெட்ரோல் கிட்டத்தட்ட நூறு ரூபாய் வரை விற்கப்படுவது அம்பானிக்காக பொதுமக்கள் மீது மோடி அரசு நடத்தும் போர். கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடி வரி சலுகைகளை வாரி வழங்கும் மோடி-அமித்ஷா கும்பல் மக்களின் மீது வரி சுமையை மட்டுமே ஏற்றுகிறது.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ மோடியின் நா தழுதழுத்தது ஏன் ? || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” !

விவசாயிகளின் வேளாண் சட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக தீஷா ரவி என்ற இளம் பெண் கைது செய்யப்படுகிறார். மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் ஊபா போன்ற தடுப்பு சட்டங்களால் கைது செய்யப்படுகிறார்கள் . மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி கைது, சிறை என அடக்குமுறையை ஏவி விடுகிறது மோடி, எடப்பாடி கும்பல்.

கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக மக்களை வாழ விடாமல் செய்யும் இந்த அரசு மக்களுக்காக போராடுகின்றவர்களை கருப்பு சட்டங்களால் வதைக்கிறது. இந்த அநியாய, அக்கிரமத்துக்கு முடிவு கட்டியாக வேண்டும் எனில் மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு வணிகர்களையும் பொதுமக்களையும் ஒழித்துக்கட்டும் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வர்த்தக சங்கங்கள் ஒருங்கிணைக்கக் கூடிய இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் அனைத்து பிரிவு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க