ன்புக்குரிய தோழர்களே! ஆதரவாளர்களே!

வணக்கம் !

நக்சல்பாரி கலாச்சாரம் பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கின்ற, கம்யூனிச கொள்கைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்து புதிய ஜனநாயகப் புரட்சிக்கு மக்களைத் திரட்டும் வகையில், புதிய கலாச்சாரத்தை தன்னளவில் கடைப்பிடித்து மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்ற, பார்ப்பன பாசிசத்திற்கு எதிராகவும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்க சீர்குலைவு கலாச்சாரத்திற்கு எதிராகவும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் பாடல்கள், இசைச் சித்திரங்கள், நாடகங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் – போன்ற பல்வேறு வடிவங்களில் புதிய கலாசாரத்தை முன் நிறுத்துகின்ற, இந்தியாவில் தனிப்பெரும் அடையாளங்களாக திகழ்கிற புரட்சிகர ஜனநாயக சக்திகளின் மத்தியில், ஒரு முத்திரை பதித்துள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில முன்னணியாளர்கள் கூட்டம் ஏப்ரல் 1, 2021 தேதியில் மதுரையில் நடைபெற்றது.

இதில் கோவை, மதுரை கிளையைச் சேர்ந்த ம...க உறுப்பினர்கள் நேரில் கலந்து கொண்டனர். சென்னையில் உள்ள உறுப்பினர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். ...க-வின் முதல் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான மூத்த தோழர் கதிரவன் உடல் நிலை காரணமாக நேரில் கலந்துக் கொள்ள முடியாத தனது சூழலை தெரிவித்து, இக்கூட்டத்திற்கு தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

கடைசியாக 2014-ல் மாநில மாநாடு கூட்டப்பட்டது. அதன்பிறகு மாநில மாநாடு கூட்ட வேண்டும் என பலமுறை தோழர்கள் நேரில் சென்று சொல்லியும், அறிக்கை மூலமாக வலியுறுத்தியும் கூட மாநில மாநாட்டை கூட்டவில்லை. இது உறுப்பினர்களின் ஜனநாயக உரிமையை பறிக்கின்ற ஜனநாயக விரோத போக்காகும்.

படிக்க :
♦ உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
♦ தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 23, 2020 அன்று காவிகார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக அஞ்சாதே போராடு ! என்னும் முழக்கத்தை முன்வைத்து, தமிழக மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மிகப் பெரும் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற சூழலில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பல ஆயிரக்கணக்கான தோழர்களுக்கு அவநம்பிக்கையையும், சோர்வையும் ஏற்படுத்தும் வண்ணம் மாநாட்டின் வெற்றியையும் உற்சாகத்தையும் குலைக்கும் வகையில், நமது அமைப்பின் இணையதளத்திலேயே தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையை கேடான வகையில் பயன்படுத்தி, சதி செயல்களில் ஈடுபட்டு தங்களது விலகல் அறிக்கையை பொதுவெளியில் மாநில செயற்குழு உறுப்பினர் நாதன் மற்றும் மாநில பொதுச்செயலாளர் மருதையன் ஆகியோர் வெளியிட்டனர்.

இவர்கள் வெளியிட்ட அறிக்கையில், தங்களுக்கு அமைப்பின் தலைமையுடன் முரண்பாடு இருப்பதாகவும் அமைப்பில் ஜனநாயகம் இல்லை என்பதையும் காரணமாக அறிவித்தனர். ஆனால் உண்மையில் ம...க உறுப்பினர்களாகிய எங்களிடம் கூட எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருவரும் அவ்வாறு செயல்பட்டது, கடும் அமைப்பு விரோத சீர்குலைவு நடவடிக்கையாக இருந்தாலும், அவர்களின் கடந்தகால பங்களிப்பின் காரணமாக அவ்விருவரும் மீண்டும் அமைப்பிற்குள் வரவேண்டும் என விரும்பினோம்.

இந்நிலையில் அவ்விருவரும் மீண்டும் அமைப்பிற்குள் வரமுடியாது என அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டனர். சதித்தனமாக சீர்குலைவு செய்து பொதுவெளியில் விலகல் அறிக்கை வெளியிட்ட அவர்களின் இந்த நடவடிக்கையானது, காவிகார்ப்பரேட் பாசிசத்திற்கு ஆதரவாக சேவை செய்வதாகும். அமைப்பை சீர்குலைக்கின்ற, காட்டிக் கொடுக்கின்ற செயலாகும் என இக்கூட்டம் ஒருமனதாக முடிவு எடுக்கின்றது.

மருதையன், நாதனின் சதிச் செயல்கள் ஒருபுறமிருக்க, அவர்களுடன் இணைந்து கொண்டு சதி செயல்களில் ஈடுபட்ட மாநில இணைச் செயலாளர் காளியப்பன் மற்றும் கோவன், சத்தியா போன்றோர் ம...க வின் மாநில மாநாட்டை நடத்துவதற்கும் அமைப்பை நடத்துவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தங்களுடைய புகழ் நாட்டம் பிழைப்புவாத செயல்பாட்டிற்கு ஏற்ப அமைப்புக் கொள்கை, கட்டுப்பாட்டை மீறி பொது வெளியில் பல்வேறு பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “அதிமுக பாஜகவின் கூட்டணியை தேர்தலில் தோற்கடிப்போம்” என்று போலி ஜனநாயகத் தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். “வாக்களி! வாக்களி!” என மிகக் கேவலமாக ஓட்டுச் சீட்டு அரசியலில் மூழ்கித் திளைக்கின்றனர்.

“ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!” என்ற ம...க வின் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர்.

அவர்கள் தங்களின் பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அவரவர் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆகையால் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் அடிப்படை கொள்கை விதிகளின் (கொள்கை அறிக்கை பக்கம் 38 விதி 10) படி அமைப்பின் கொள்கைக்கு விரோதமாக செயல்பட்டதற்காக, காளியப்பன், கோவன், சத்தியா ஆகிய இம்மூவரையும் ம...க-வில் இருந்து வெளியேற்றுகிறோம்.

தற்போது ஓட்டுச் சீட்டு அரசியலுக்குச் சென்று சீரழிந்து விட்ட இந்தக் கும்பல் கடந்த பல ஆண்டுகளாக கிளைகளை முறையாக கூட்டி இயக்காமல் இருந்தனர். இதனால் சில மாவட்டங்களில் கிளைகள் கலைந்து போய்விட்டன. தற்போது எஞ்சியுள்ள மூன்று மாவட்டங்களில் உறுப்பினர்கள் தங்களை முறைப்படுத்திக் கொண்டு மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளோம்.

ஓடுகாலியாக சீரழிந்துபோன மருதையனும், நாதனும் தற்போது தி.மு.கவிற்கு ஆதரவாக ஓட்டுப் பொறுக்கி அரசியல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். இந்த சதிகார கும்பல் 2020-ல் அமைப்பில் இருந்து வெளியேறிய போது சில அமைப்பு பிரச்சினைகளை காரணம் காட்டியது. ஆனால் உண்மையில் இந்த கும்பல் வலது சந்தர்ப்பவாத கும்பல் என்றும் இது தாராளவாத பாணியிலான அமைப்பு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்துகிறது என்றும் நமது அரசியல் தலைமை தெரிவித்தது.

அப்போது அதையெல்லாம் மறுத்து அவதூறு செய்து வந்த இந்தக் கும்பல், அவர்களது வலைப்பூவான ‘இடைவெளி’யில் கடை விரித்து 2018-லேயே தங்களுக்கு தேர்தல் அரசியல் மோகம் வந்து விட்டதை ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இத்தனை ஆண்டு காலம் இவர்கள் செயல்பட்ட ம...விலேயே தேர்தல் நிலைபாட்டை தெரிவிக்காமல், தமது கருத்துகளை மறைத்து வைத்துக் கொண்டு இந்த கும்பல் சதித்தனமாக செயல்பட்டு வந்தது நிரூபணம் ஆகிவிட்டது.

இந்தக் கும்பலின் சதித்தனத்தை புரிந்துகொள்ள இயலாமல் இவர்கள் பின்னே உள்ள ஓரிரு ம...க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், தற்போது இவர்களது ஓட்டு சீட்டு அரசியல் நடவடிக்கையிலும் காளியப்பன், கோவன், சத்தியா போன்றவர்களின் பிழைப்புவாத நடவடிக்கைகளாலும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆகையால் ம...க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம...க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழர்களே! நண்பர்களே!

இன்றைக்கு அசாதாரணமான சூழலுக்கு நாடு சென்று கொண்டு இருக்கிறது. காவி கார்ப்பரேட் பாசிசம் அனைத்து அரங்குகளிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டுவருகிறது. மிச்சம் மீதி இருக்கின்ற ஜனநாயக உரிமைகளை துப்புரவாக துடைத்தெறிவது மட்டுமின்றி, உழைக்கும் மக்களை ஒரு மிகப்பெரிய கேடான சூழலுக்கு இழுத்துச் செல்லும் இந்து ராஷ்டிரத்தை நிலைநாட்ட துடித்துக் கொண்டிருக்கிறது.

காவி கார்ப்பரேட் பாசிசம் நெருங்கி வருகின்ற இன்றைய சூழலில், கலை இலக்கிய ரீதியாக புரட்சிகர கருத்துகளை கொண்டு செல்வது முன்னிலும் அவசியமாக உள்ளது. இந்த கடமைகளை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ம...க-வில் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்! காவிகார்ப்பரேட் பாசிசத்தை முடிப்பதற்கும், புதிய ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கும் அணிதிரள்வோம் !

இவண்
தோழர் ப.
ராமலிங்கம்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்.
தமிழ் நாடு, புதுச்சேரி.
தொடர்புக்கு
: 97916 53200

8 மறுமொழிகள்

  1. நீங்களே தேர்தலைப் புறக்கணித்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் தாமரை மலராது என்று கார்ட்டூன் போடுகிறீர்கள் தாமரை மலர்கள் இல்லையென்றால் உதயசூரியன் வளர்ந்துவிட்டால் உங்களுக்கு சம்மதமா

  2. இந்த புரட்சிகர ‘திருவாளர்களை’ எப்பவோ நடவடிக்கை எடுத்து நீக்கியிருக்க வேண்டும். தாமதம் என்றாலும் வாழ்த்துகள்.

  3. முதற்கண் வாழ்த்துகள், கேட்கும் கேள்விக்கு பதிலளிக்காமல் நழுவும் போக்கு எங்கே கற்றவை இதில் நான் முன் வைத்த கேள்விக்கு இதுவரை பதில் இல்லை (இணைப்பு நீக்கப்பட்டுள்ளது – வினவு)

    • வணக்கம் தோழர் … இணைப்பு அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் எடுக்கப்பட்டுவிட்டது. பழைய பதிவில் நீங்கள் ஏற்கெனவே கேட்டிருந்த கேள்விக்கு பதில் கேட்டிருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறோம். அந்தப் பதிவில் பதிலளிக்கிறோம். நன்றி!

  4. தோழர்களே இந்த கட்டுரைக்கு முந்தைய கட்டுரையில் தாமரை மலராது என்று நீங்கள் கார்ட்டூன் போட்டிருக்கிறீர்கள்

    நிச்சயமாக தாமரைக்கு பதில் உதய சூரியன அல்லது இரட்டை இலை இரண்டில் ஒன்று தான் மக்களால் தேர்வு செய்யப்படும்

    எது தேர்வு
    செய்யப்பட்டாலும் அது பாட்டாளி வர்க்கக் கட்சிகள் இல்லையே

    #பின் ஏன் ஒரு பக்க ஆதரவு #

    இரண்டையும் ஒரே தராசில் வைக்க வேண்டியதுதானே தேர்தல் புறக்கணிப்பு செய்கின்ற நீங்கள்

    இரண்டுமே முதலாளித்துவக் கட்சிகள் தானே உங்கள் பார்வையில்

  5. வாழ்த்துகள். களையெடுக்கப்பட்ட நற்பெயராக வளர்ந்து நல்ல விளைச்சல் தர வாழ்த்துகள். எனக்குள் உள்ளுணர்வாகத் தோன்றுவதைச் சொல்கிறேன். “இன்னும் பல கைக்கூலிகள் உள்ளே இருக்கிறார்கள்”.

  6. மாநில மாநாட்டிற்கு மாநிலக்குழு தானே அய்யா பொறுப்பு? இவ்வளவு காலமாக நீங்கள் புரட்சி போதையில் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? நீங்கள் அந்த மானிடப் பதர்களை இயக்கத்திலிருந்து நீக்கும்வரை மாநில மாநாட்டிற்கு லீவு விட்டிருந்தீர்களா? இல்லை உங்கள் துலாக்கோல் தூர்வாரப்படவில்லையா?

    எப்படியோ எல்லோரும் ஒன்று சேர்ந்தும், பிரிந்து சென்றும் பாசிசம் வளர நன்கு சேவை செய்கிறீர்கள். இன்று மதவாதம் இந்த அளவு வளர உங்களைப்போன்ற குழாயடிச் சண்டையும் முக்கிய காரணம். “முரண்பாடுகளை பிறகு பேசுவோம், இப்போது பாசிசத்தை விரட்டுவோம்” என்று எப்போதெல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் மேலும் மேலும் பிளவுபட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுகிறீர்கள். 10 பேருக்கு 15 இயக்கங்கள், பிரிவுகள், பிளவுகள், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு லாஜிக். மீண்டும் சொல்கிறேன், பாசிசம் இந்த அளவு தமிழகத்தில் வளர்ந்து நிற்க உங்களைப் போன்றோர் முக்கிய காரணங்கள். “பரலோக புரட்சி பரவச நிலை”யிலிருந்து, நடப்பு உலகத்திற்கு வந்து உண்மை நிலவரம் அறியுங்கள். இல்லாவிட்டால் குப்புறப்படுத்து உறங்குங்கள். மீண்டும் புரட்சி செய், புண்ணாக்கு செய் என்று எங்கள் கழுத்தை அறுக்காதீர்கள்.

    பின்குறிப்பு: உடனே “எதிர்புரட்சிக்காரன்” என்று பட்டமளித்து விடாதீர்கள். இதற்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். இது கோபமல்ல… ஆதங்கம்.

Leave a Reply to சி.பி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க