கடந்த 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடிய மக்களை ஈவிரக்கமின்றி வேதாந்த நிறுவனமும், அரசும் கூட்டு சேர்ந்து சுட்டுக் கொன்றது. இந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உலகம் முழுவது மிகப்பெரிய போராட்ட அலையை உருவாக்கியது. அதன் பிறகு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் வீரத்தின் விளைவாக தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது.
ஆனால் தற்போது கொரோனா கால ஆக்சிஜன் தட்டுப்பாட்டை பயன்படுத்தி புறவாசல் வழியாக மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது. மீண்டும் தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், 2021, மே 22 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 3ஆம் ஆண்டு நினைவஞ்சலி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் தோழர்களால் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற பல்வேறு முழக்கங்கள் மக்களை அதிகாரம் அமைப்பின் சார்பாக முன்வைக்கப்பட்டுள்ளது.
000
திருவாரூர் :
மே-22 ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக மே 22,2021 இன்று காலை 10 மணிக்கு திருவாரூர் மாவட்டம் குளிக்கரை பகுதியில் தூத்துக்குடி மக்களின் தியாகத்தை எடுத்து சொல்லும் விதமாக
போலீசு, வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு!
என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தங்க.சண்முகசுந்தரம் மற்றும் பகுதி மக்கள் சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்,
திருவாரூர்.
8220716242.
000
தருமபுரி
கோவை
மே – 22 ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி கோவை பகுதியில் தோழர் ராஜன் தலைமையில் நடைப்பெற்றது.
தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களை சுட்டு கொன்ற போலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்சிஜன் தயாரிப்பு என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறந்த சதியை அம்பலபடுத்தி முழுக்கம் எழுப்பபட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை,
9488902202.
000
சென்னை
மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 22 இன்று காலையில் சேத்துப்பட்டு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தபட்டது மற்றும் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தபட்டது.
தகவல் :
சேத்துப்பட்டு பகுதி,
மக்கள் அதிகாரம்.
000
புதுச்சேரி
கடலூர் மண்டலம் புதுச்சேரி, மதகடிபட்டு ரவுண்டானா அருகில் ஸ்டெர்லைட் எதிப்பு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும்!
பொது மக்களை கொலை செய்த போலிசு, வருவாய் துறை அதிகரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்ற முழக்கமிடப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.
000
விருதாச்சலம்
கடலூர் மண்டலம் விருத்தாசலம், விஜயமாநகரம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக விருதை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அசோக் தலைமையில் ஸ்டெர்லைட் போராட்ட தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்று சிறப்பு சட்டம் இயற்றுஎன்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருதாச்சம்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.
000
உசிலை
மே 22 ஸ்டெர்லைட் போராட்ட தியாகி நாள் உசிலம்பட்டி ஆரியபட்டியில் குருசாமி தலமையில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது கொடியேற்றி மாலை அனிவித்து முழக்கம்போடப்பட்டு முடிக்கப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலை.
000
மதுரை
000
உடுமலை
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் மூன்றாமாண்டு நினைவஞ்சலி . சிறப்பு சட்டமியற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று. பொதுமக்களை கொலை செய்த போலீஸ் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு. பொதுமக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெறு .
தகவல் :
மக்கள் அதிகாரம்
உடுமலை
000


மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.