உப்பிட்டவரை… ஆவணப்படம் – டீசர் || ம.க.இ.க.

தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளை படம்பிடித்துக் காட்டும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”உப்பிட்டவரை” ஆவணப்படம், விரைவில் வெளிவரவிருக்கிறது. அதன் டீசர் உங்கள் பார்வைக்கு !

ப்பில்லாத பண்டம் குப்பையிலே என்பார்கள். நம் வாழ்வோடும் உணவோடும் என்றென்றும் இணைந்திருக்கும் உப்பு, தமிழகத்தின் தூத்துக்குடி நகரில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த உப்பை உற்பத்தி செய்யும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையை பற்றி நாம் இதுவரை எண்ணிப் பார்த்திருக்கிறோமா ?
நமது உணவுக்கு உப்பிட்டவர்கள் அவர்கள்தான். அவர்களின் வாழ்க்கை நிலையையும் துயரங்களையும் மக்கள் கலை இலக்கியக் கழகம், களப் பதிவு செய்து ஆவணப்படமாகத் தயாரித்துள்ளது. ”உப்பிட்டவரை…” ஆவணப்படம் விரைவில் வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை (டீசர்) தற்போது வெளியிடுகிறோம் !

பாருங்கள் ! பகிருங்கள் !
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :
மக்கள் கலை இலக்கியக் கழகம் (மாநில ஒருங்கிணைப்புக் குழு)

தொடர்புக்கு : 97916 53200