கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான விவசாயிகள் விரோத மூன்று வேளாண் சட்டங்களையும் இரத்து செய்வதாக மோடி வாயில் சுட்ட வடையை ஏற்காமல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை திரும்பப் பெறுவது பற்றி முடிவு செய்ய முடியும் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் அறிக்கை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (29/11/2021) நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவை நிறைவேற்றியது மோடி அரசு. விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டத்தின் வெற்றி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்நிலையில் கடந்த நவம்பர் 26, 2021 அன்று டெல்லியில் விவசாயிகள் போராடத் துவங்கியதில் இருந்து ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் சங்கங்களுடன் இணைந்து புரட்சிகர அமைப்புகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன் செய்தித் தொகுப்பு !
மதுரை :
கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு நவம்பர் 26 மதுரை திருநகர் யூனியன் அலுவலகத்தின் அருகில் விவசாய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பேரணி, பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றன.
ஒன்றிய அரசே ! மோடி அரசே !
♠ நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே விவசாயி விரோத 3 சட்டங்களை ரத்து செய்!
♠ அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்தும் வகையில் சட்டம் இயற்று!
♠ மின்சார திருத்த மசோதா 2020 திரும்பப் பெறுக!
♠ போராட்டத்தில் உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்குக!
♣ தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறு!
ஆகிய கோரிக்கைகளை ஒன்றிய மோடி அரசுக்கு முன்வைத்து ஐக்கிய விவசாயி முன்னணி பேரணி பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தியது. இதில் மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் பல்வேறு முற்போக்கு அமைப்பினர், கட்சிகள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல்:
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்
000
சென்னை :
நவம்பர் 26, 2021அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார்பாக, மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்ததையொட்டியும், மீதமுள்ள கோரிக்கைகளான அத்தியாவசிய வேளாண் பொருட்களுக்கு அடிப்படை ஆதார விலையை கொடு, மின்சார மசோதாவை ரத்து செய்! என்ற முழக்கங்களை முன் வைத்தும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
SKM சென்னை பெருநகர குழுவின் சார்பாக பங்கேற்ற அமைப்புகளின் தலைவர்கள் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். சென்னை மண்டல மக்கள் அதிகாரம் தோழர் அமிர்தா உரையாற்றினார்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
000
தருமபுரி :
மூன்று வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டம் ஓராண்டு நிறைவை ஒட்டியும், போராட்டத்தில் இறந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகள் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு எதிரான மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். முதல் நாள் கூட்டத்தொடரிலேயே மூன்று வேளாண் சட்டம் திரும்பப் பெறும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) ஒருங்கிணைப்பில் பேரணி ஆர்ப்பாட்டம் தருமபுரி தலைமை தபால் நிலையம் அருகில் நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு SKM தருமபுரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தோழர் அர்ஜுனன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்ட உரை :
தோழர் கோபிநாத், மக்கள் அதிகாரம்.
தோழர் முத்து, அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர் சங்கம், மாவட்ட செயலாளர்.
தோழர் கோவிந்தராஜ், சி.பி.ஐ. (ML) விடுதலை, மாவட்ட செயலாளர்.
தோழர் பிரதாபன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கம், மாவட்ட செயலாளர்.
தோழர் கிள்ளிவளவன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம், மண்டல செயலாளர்.
தோழர் ரங்கநாயகி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, மாவட்ட பொறுப்பாளர்
ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் மலையன் அவர்கள் நன்றி உரையாற்றினார்.
This slideshow requires JavaScript.
தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
9790138614
000
கோவை :
பணிந்தது மோடி அரசு! கார்ப்பரேட் ஆதரவு 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவுப் பேரணியில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக கோவை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நவம்பர் 26-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜன் மற்றும் பகுதித் தோழர்கள் கலந்து கொண்டனர்.
This slideshow requires JavaScript.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம்.
94889 02202

Related