தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிகள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

“நடைமுறைப்படுத்தப்படும் தேசியக் கல்விக் கொள்கை – 2020 ! எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?” என்ற தலைப்பின் கீழ், பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) கடந்த 05-01-2022 அன்று பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் தலைமை உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து “அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இயக்கம்” அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் உமா மகேஸ்வரி சிறப்புரை ஆற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரி, தனது உரையில் இந்தியா முழுவதும் மோடி அரசு ஆட்சியில் அமர்ந்த பின்னர் படிப்படியாக கல்வி காவிமயப்படுத்தப் பட்டதை அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிக் கூடங்கள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டி உரையாற்றினார்.

ஆசிரியர் உமா மகேஷ்வரியின் உரை காணொலியாக இங்கு பதிவிடப்பட்டிருக்கிறது !

பாருங்கள் ! பகிருங்கள் !!