திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்

உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.

திருநெல்வேலியில் உழைக்கும் மக்களின் கடைகளை அகற்றி ஓர் பிரம்மாண்ட ஸ்மார்ட் சிட்டி கட்டப்பட்டு வருகிறது.
நகரங்களின் வேர்களாய் இருக்கும் விவசாயிகள், நாடி நரம்புகளாய் இருக்கும் தொழிலாளர்கள், முகங்களாய் இருக்கும் வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளிகள், கொத்தனார்கள், எலக்ட்ரிசியன்கள், பிலம்பர்கள், துப்புரவு தொழிலாளர்கள், உதிரி பாட்டாளிகள் என அனைத்து உழைக்கும் மக்களின் வியர்வையிலும், உழைப்பிலும் இரத்தத்திலும் தான் ஒரு நகரம் உருவாக்கப்பட்டு இன்று வளர்ந்து நிற்கிறது. ரயில்வே மின்சாரம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் இந்த மோடி அரசு இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களை கூருபோட்டு பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுப்பதற்காக வடிவமைக்கப்பட்ட திட்டமே இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம்
உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திட்டம்தான் இது.
திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம் :

பாருங்கள்! பகிருங்கள் !!
உழைக்கும் மக்களின் துயரங்களை கலை வடிவில் கொண்டு வரும்
மக்கள் கலை இலக்கியக் கழகத்திற்கு ஆதரவு தாரீர் !
கலை இலக்கியம் ஆர்வமுள்ளவர்கள் ம.க.இ.க-விற்கு தோள்கொடுக்க தொடர்பு கொள்ளுங்கள்!
இணைவீர் ம.க.இ.க || தொடர்புக்கு : 97916 53200
இதுபோன்ற ஆவணப் படங்களை தொடர்ந்து படைத்திட நன்கொடை தாரீர் !
வங்கி விவரம் :
Name: R MUTHIAIAH
Bank Name : Canara Bank
A/C.No: 1598101018208
Ifsc code: CNRB0001598
Branch Location : Pudur, Madurai
Account Type : Savings
Mobile – (91) 97916 53200
Email – vinavu@gmail.com
ஆவணப்படம் தயாரிப்பு, ஆக்கம் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 97916 53200