ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...

ரு மனசாட்சி என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா? ஒரு மாணவி இறந்துள்ளார் பெற்றோர்கள் போராடுகிறார்கள் என்றால், நியாயம் கேட்டு போராடிக் கொண்டிருக்கும் பலரில், ஒரு சிலர் மட்டும் இப்படி செய்கிறார்கள் என்றால் இது யாருக்கு சார்பாக; அந்த பள்ளிக்கு சார்பாக அந்த குண்டர்படை ஐயோக்கியர்களை காசு கொடுத்து தூண்டிவிட்டுள்ளது. இதனை நாங்கள் ஸ்டெர்லைட்டிலேயே பார்த்தோம்!

அந்த பள்ளிக்கு ஆர்.எஸ்.எஸ் பின்புலம் இருக்கிறது. அங்கு சாகாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஸ்ரீமதி மரண வழக்கில் கைதான குற்றவாளிகளை ஏன் வெளியே விடக்கூடாது என்று கூறுகிறோம் என்றால், அவர்கள் உண்மை ஆதாரங்களை அழித்து விடுவார்கள், சாட்சிகளை அழிப்பார்கள் என்பதால்தான். நக்கீரன் பத்திரிகையாளர்களின் மீதான இவர்களின் தாக்குதல் என்பதே அவர்களின் ஜாமீனை ரத்து செய்வதற்கான போதுவான ஆதாரம் என்று நாங்கள் சொல்கிறோம்!

கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க