privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

-

#getoutravi இயக்கம்

ஜனவரி 25 அன்று இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் சமூக வலைத்தளங்களில் #getoutravi என்பதை நிரப்புவோம்! 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இம்மாதம் உளறத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாற்றாக தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் கருணாநிதி ஆகிய வார்த்தைகளை பேச மறுத்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் தமிழ்நாடு இலட்சினையை திட்டமிட்டு புறக்கணித்தார். இப்பொழுது, ஆரிய – பார்ப்பன – வேத எதிர்ப்பையே உயிர்நாடியாக கொண்ட தமிழ்நாட்டில் தான் சனாதனம் தோன்றியது என்று பொய் புரட்டு பேசிக்கொண்டு திரிகிறார்.

ஆக, தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆளுநர் ரவிக்கு #getoutravi என்று எழுதப்பட்ட அஞ்சல் அட்டையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 அஞ்சல் அட்டைகளை அனுப்பி தமிழின எதிரி ஆர்.என்.ரவிக்கு நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்வோம்.

மேலும் அன்றைய தினம் #getoutravi என்று எழுதப்பட்ட கைத்தட்டிகளை பிடித்து தமிழ் மக்கள் தங்களுடைய படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் #getoutravi என்பதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321.
Fb : makkal Athikaram

This slideshow requires JavaScript.

பகிருங்கள் ! பரப்புங்கள் !!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க