ஓசூர் – உத்தனப்பள்ளி: விளைநிலத்தை விழுங்கவிருக்கும் சிப்காட் || ஆவணப்படம்

சிப்காட் – V அமைக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட நிலத்தில் GMR என்ற பன்னாட்டு ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் 2000 ஏக்கர் உள்ளது. அதன் அருகிலேயே மீதமுள்ள 1000 ஏக்கர் நிலம் விவசாயிகளிடம் உள்ளது. இந்நிலமானது ஓசூரிலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்டது. முப்போகம் விளையும் இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கு நேரடியாக அரசு முயற்சி செய்து வருகிறது.

GMR நிறுவனம் வசம் உள்ள 2000 ஏக்கரும் ஏற்கனவே இப்பகுதி விவசாயிகளிடமிருந்து அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியதுதான். மொத்தமாக வாங்கிய 2500 ஏக்கரில் 500 ஏக்கரை டாடா நிறுவனத்துக்கு விற்று GMR நிறுவனம் கொள்ளை லாபம் அடித்துள்ளதாகவும். அவ்வாறு விற்கப்பட்ட நிலங்கள் பயன்பாடு இல்லாமல் கிடப்பில் கிடப்பதாகவும், அந்நிலங்களை வேளாண்மைப் பயன்பாட்டுக்கு மீட்டுத் தர வேண்டும் என்பதும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு கோரிக்கையாக உள்ளது.

கடந்த ஆண்டு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அரசின் அறிவிப்பு வந்தவுடன் அதைக் கண்டித்து அவ்வப்போது போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், இப்பகுதியைச் சார்ந்த விவசாயிகள் உத்தனப்பள்ளியில் ஜனவரி 5 ம் தேதி முதல் 50 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒசூர் – உத்தனப்பள்ளி விவசாயிகள் போராட்டம்: உயிர்போனாலும் விளைநிலங்களை சிப்காட் அமைக்க தரமாட்டோம்!

சத்யநாராயணன்
போராட்டக்குழு.

சிதம்பரம்
போராட்டக்குழு

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!