19.07.2023
தூத்துக்குடி தியாகிகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சிய
மார்வாடிகளுக்கு எச்சரிக்கை!
கொலைகார அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் நுழைய அனுமதி இல்லை!
கண்டன அறிக்கை
தூத்துக்குடி மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக போராடிய 15 பேரை சுட்டுக் கொன்ற அனில் அகர்வால் வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னைக்கு வருகிறான். 2018-ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் கார்ப்பரேட்டுக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் ஸ்டெர்லைட் வேதாந்தாவின் உரிமையாளரான அனில் அகர்வால் தான் முழு பொறுப்பு. இப்படிப்பட்ட குற்றவாளி தமிழ்நாட்டுக்கு வருவது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சவால்.
இதை தமிழ்நாடு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால் தூத்துக்குடி மட்டுமல்ல உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் நிறுவனங்களை அமைத்து அந்த நாட்டின் மண்ணையும் காற்றையும் நஞ்சாக்கியவன். அதற்கு எதிராக போராடிய மக்களை சுட்டுக் கொண்ட கொலைகாரன். இன்று வரை தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்கள், பிரச்சாரங்களுக்கு அனுமதி வழங்காத போலீசு ஸ்டெர்லைட்டை திறக்க வேண்டும் என்ற கூலிப்படைகளுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தான் சென்னையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள சுராணா ஹை டெக் இன்டர்நேஷனல் பள்ளியின் நிகழ்ச்சிக்கு 06.08.2023 அன்று இந்தக் கொலைகார கொள்ளைக்கார அனில் அகர்வால் வருகை தருகிறான்.
படிக்க: தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்
தமிழ்நாட்டு மக்களின் உழைப்பையும் உதிரத்தையும் உறிஞ்சி வாழுகின்ற இந்த மார்வாடி கும்பல் தமிழ்நாட்டு மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைத்து இருக்கிறது என்றால், இந்த மார்வாடி கும்பலின் கொழுப்பையும் திமிரையும் அடக்க வேண்டியது தமிழ்நாட்டின் பொறுப்பு.
தமிழ் மக்களின், உலக மக்களின் எதிரியான இந்த அனில் அகர்வால் கலந்து கொள்ளக்கூடிய இந்த நிகழ்ச்சிக்கு சென்னை மாநகர போலீசு தமிழ்நாடு அரசு அனுமதி தரக் கூடாது என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசிடம் கேட்டுக்கொள்கிறது.
அதையும் மீறி அனில் அகர்வால் தமிழ்நாட்டுக்குள் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நுழைந்தால் அதற்கான கடும் பதிலடி தமிழ்நாட்டு மக்களால் கொடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321