Friday, July 19, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுவேண்டாம் GST; வேண்டும் ஜனநாயகம் | பிரச்சார இயக்கம் | துண்டறிக்கை

வேண்டாம் GST; வேண்டும் ஜனநாயகம் | பிரச்சார இயக்கம் | துண்டறிக்கை

மோடி ஆட்சியில் இதுபோல ஒவ்வாரு துறையிலும் நிறுவப்பட்டுள்ள இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை எவ்வாறு, யார் முறியடிப்பது என்பதுதான் மக்களுக்குள்ள கேள்வி.

-

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., அம்பானி – அதானி பாசிசம் ஒழிக!
சுற்றிவளைக்குது பாசிசப்படை; வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு!

2024 நாடாளுமன்றத் தேர்தல்:
வேண்டாம் GST
வேண்டும் ஜனநாயகம்
கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!

பிரச்சார இயக்கம்
தெருமுனைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,

ன்பதரை ஆண்டுகால மோடி கும்பலின் கொடுங்கோல் ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளிகள், சிறு-குறு உற்பத்தியாளர்கள், மாணவர்கள்- இளைஞர்கள், பெண்கள், மத-இனச் சிறுபான்மையினர், தலித் மக்கள் என பல்வேறு பிரிவு மக்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். நாட்டின் பெரும்பான்மையோரான இம்மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டி, மிகச்சிறிய, விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் அம்பானி- அதானிகளுக்கு படையல் வைக்கிறது மோடி அரசு.

GST: மாநில உரிமை பறிப்பு! சிறு-குறு தொழில்கள் அழிப்பு! ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, கார்ப்பரேட்டுக்கு சேவை!

மோடி அரசால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜி.எஸ்.டி. வரியும், பிராந்திய – மாநில மற்றும் உள்ளூர் அளவிலான பன்முகத்தன்மை கொண்ட சிறு- குறு-நடுத்தர உற்பத்தியாளர்களை ஒழித்துக்கட்டி, ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பார்ப்பன-பனியா-குஜராத்தி-மார்வாடி முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் கொண்டு சேர்க்கும் சதிகாரத் திட்டமே ஜி.எஸ்.டி.

ஜி.எஸ்.டி-யை ஏவி, மாநிலங்களின் வரிவசூல் உரிமையைப் பறித்து, மாநிலக் கட்சிகளின் பெயரளவுக்குக் கூட தனித்த அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியாதபடி செய்துவிட்டது ஒன்றிய அரசு.

மக்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூட ஒன்றிய அரசிடம் கையேந்தி பிச்சையெடுக்கும் அவலநிலைக்கு மாநில அரசுகளைத் தள்ளியிருக்கிறது மோடி அரசு.

“ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை” எனும் ஜி.எஸ்.டி வரிவசூல் கொள்கையால் நாட்டில் தொழில் வளர்ச்சி பூத்துக் குலுங்குவதாக கூச்சமே இல்லாமல் புளுகிக் கொண்டிருக்கிறார்கள் பாசிஸ்டுகள். ஆனால் உண்மையில் கோவை, திருப்பூர், ஈரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் கைத்தறி நெசவாளர்கள், பின்னலாடை உற்பத்தியாளர்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பலரும் தொழிலை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளனர்.

நல்ல நாட்கள் வரும் என ஜி.எஸ்.டி-யைக் கொண்டு வந்த மோடி அரசு, இந்த ஆறு ஆண்டுகளில் உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் விலைவாசி உயர்வு, பசி-பட்டினி, வேலையின்மை, சிறு-குறு உற்பத்தியாளர்கள் கடன் நெருக்கடியால் தற்கொலை, நிறுவனங்களை மூடுவது ஆகியவற்றைத்தான் நாட்டு மக்களுக்கு பரிசளித்துள்ளது.

சில நிறுவனங்களில் பணிபுரிந்த 40 தொழிலாளர்களில் தற்போது 12 தொழிலாளர்கள் தான் பணியில் உள்ளனர். 3-5 இயந்திரங்களை வைத்து தொழில் நடத்தி வந்த உற்பத்தியாளர்கள் பலரும் தற்போது ஒற்றை இயந்திரத்தை வைத்திருக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆர்டர் குறைந்து வருவதால் வேலைநாட்களைக் குறைத்து அடிக்கடி விடுமுறை விடும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால், சிறு-குறு உற்பத்தியையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் உற்பத்தியாளர்களின் ரத்தத்தைப் பிழித்து வெறும் சக்கையாக்கி விட்டது, ஜி.எஸ்.டி.

நம் நாட்டில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. அதில் 3.8 கோடி நிறுவனங்கள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பளித்து வரும் சிறு-குறு தொழில்களை அழிப்பதன் மூலம் நாட்டையே பேரழிவுக்கு இழுத்துச் செல்கிறது ஒன்றிய அரசு. இன்னொரு பக்கத்தில் ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ திட்டம் பெரும் வரவேற்பு பெற்றள்ளதாக பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறது.

ஜி.எஸ்.டி.யின் தாக்குதலையே தாங்க முடியாத நிலையில், மூலப்பொருட்களின் விலையேற்றமும், மின்கட்டண உயர்வும் சிறு-குறு உற்பத்தியாளர்களை உற்பத்தியில் நீடிக்காதபடி விரட்டி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசோ பல ஆயிரம்-இலட்சம் கோடிகளை மானியமாகவும் சலுகைகளாகவும், கடன்-வட்டித் தள்ளுபடிகளாகவும் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறது. இதன் மூலம் சிறு – குறு – நடுத்தரத் தொழில்களின் சமாதியின் மீது கார்ப்பரேட்டுகளின் மாளிகையை எழுப்பிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ஏழை மக்களுக்கு சாவு! பெரும்பணக்காரர்களுக்கு வாழ்வு!

கொரோனா காலத்திலும் சானிடைசர், மாஸ்க், பிற அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரிவசூல் சுரண்டலை நிறுத்தாமல் சாமானிய மக்களைக் கசக்கிப் பிழிந்த மோடி அரசு, ஜி.எஸ்.டி. வசூல் தொடர்ந்து ஆண்டு தோறும் 10ரூ உயர்ந்து வருவதாகவும், தற்போது மாதாந்திர சராசரி வரிவசூல் 1.63 லட்சம் கோடி ரூபாய் எனவும் ஒன்றிய அரசு பெருமையாக அறிவித்துக் கொள்கிறது. ஆனால், ஆக்ஸ்பாம் இந்தியா வெளியிட்ட “இந்தியா ஏற்றத்தாழ்வு” அறிக்கையின்படி “2021-2022 ஆண்டில் வசூலான மொத்த ஜி.எஸ்.டி.-யில், 64ரூ அடித்தட்டு ஏழை மக்களிடமிருந்தும், 33ரூ நடுத்தர மக்களிடமிருந்தும், 3ரூ பணக்காரர்களிடமிருந்தும்” வசூலிக்கப்பட்டது. இலட்சம் கோடிகளைக் குவிந்த பெரும் பணக்காரர்களுக்கு மேலும் வரிச்சலுகையும் மானியமும் கொடுப்பதற்காகவே, ஏழைகளைக் கசக்கிப் பிழிந்து வருவது தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் (நூறுகோடி சொத்து கொண்டவர்கள்) பட்டியலில் 1,319 பேர் இடம்பெற்றுள்ளனர். அதேவேளையில் உழைக்கும் மக்கள் 22.89 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின் பல்லாயிரம் சிறு- குறு நிறுவனங்கள் மூடப்படும், பல இலட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பும் பணிநீக்கமும் நடந்தேறிய நிலையில் தான் இத்தனை பணக்காரர்கள் உருவாகியுள்ளனர் என்றால், ஜி.எஸ்.டி. தனது நோக்கத்தை சாதித்து விட்டது என்று தானே அர்த்தம்!

இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களைத் தகர்த்தெறிவோம்!

ஜி.எஸ்.டி. வரிவசூல்முறை, தேசிய பணமாக்கல் திட்டம் போன்று கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதற்கு ஏற்ற வகையில், ஏற்கனவே இருந்த “திட்டக் கமிசன்” கலைக்கப்பட்டு அதனிடத்தில் “நிதி ஆயோக்” அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதி ஆயோக் குழுவானது, கார்ப்பரேட் சார்பு கொண்டது மட்டுமல்ல இந்துராஷ்டிரத்துக்கான அடிக்கட்டுமானங்களில் ஒன்று என்கிறோம்.

மோடி ஆட்சியில் இதுபோல ஒவ்வாரு துறையிலும் நிறுவப்பட்டுள்ள இந்துராஷ்டிர அடிக்கட்டுமானங்களை எவ்வாறு, யார் முறியடிப்பது என்பதுதான் மக்களுக்குள்ள கேள்வி.

தொழில் முனைவோர்களுக்கான ஜனநாயகம் என்பது தொழில்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, முனைவோர்களை ஒட்டச் சுரண்டி நசுக்கிப் பிழிவதாக, தொழிலை அழிப்பதாக இருக்கக் கூடாது. தொழில் முனைவோர், சிறு-குறு வணிகர்கள், சங்கங்கள் ஆகியோரை கலந்து ஆலோசனை செய்து ஜனநாயகப்பூர்வமான வரிவசூல் முறையை கொண்டுவர வேண்டும்.

கார்ப்பரேட்டுகளுக்காக மட்டுமே ஆட்சியும் அதிகாரமும் என்ற நிலை வந்துவிட்ட பிறகு, இனி அரசுகளிடம் கெஞ்சிப் பயனில்லை. “ஜி.எஸ்.டி-யை ரத்து செய்!” என்ற கோரிக்கையின் கீழ் தொழில் முனைவோர், வணிகர்கள், உழைக்கும் மக்கள் ஆகியோரை ஒன்றிணைத்த களப்போராட்டத்தைக் கட்டியமைப்பதே ஒரே தீர்வு!

* சிறு-குறு-நடுத்தர உற்பத்தியாளர்களை ஒட்டச் சுரண்டும் ஜி.எஸ்.டி. யை ரத்து செய்!

* மாநில உரிமைகளை பறிக்கும் ஜி.எஸ்.டியை ரத்து செய்!

* ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை எனும் இந்துராஷ்டிரா வரிக்கொள்கையை ரத்து செய்!

* அம்பானி, அதானி, அகர்வால் போன்ற மார்வாடி-குஜராத்தி-பார்ப்பன-பனியா-கார்ப்பரேட் கும்பல்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

* மூலப்பொட்கள் விலையேற்றம், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெறு!

* சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களின் உற்பத்தியை கார்ப்பரேட் நிறுவனங்- களுக்குக் கொடுக்கும் பொதுசந்தைக் கொள்கையைத் திரும்பப் பெறு!

என்ற முழக்கங்களை மக்கள் முழக்கங்களாக மாற்றுவோம்! ஜனநாயகத்திற்கான போரில் வெல்வோம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம். (தமிழ்நாடு-புதுவை)
97916 53200, 94448 36642, 73974 04242, 99623 66321
கோவை மண்டலம் : 94889 02202

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க