அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
டிசம்பர் – 2023 மாத புதிய ஜனநாயகம் மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் :
தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.20
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம் :
Bank : SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் : தமிழ்நாட்டைச் சுற்றிவளைக்கும் ஆர்.எஸ்.எஸ்!
- காங்கிரஸ் தோல்வி: பாசிஸ்டுகளின் வழியில் பா.ஜ.க. எதிர்ப்பு அரசியலின் விளைவு!
- இந்துத்துவ பாசிசத்தின் இருமுனைக் கத்தி: பலிகடாவாக்கப்படும் ‘தேவேந்திர குல வேளாளர்கள்’!
- ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள்: பாசிஸ்டுகளின் தோல்வி முகமும்!
எதிர்க்கட்சிகளின் கேடுகெட்ட சந்தர்ப்பவாதமும்! - பு.ஜ.உடன் ஓர் உரையாடல்..
- விவசாயிகள் மீது குண்டாஸ் : தி.மு.க. அரசின் துரோக நடவடிக்கை!
- நேற்று ராகுல் காந்தி!
இன்று மஹுவா மொய்த்ரா! நாளை? - தேர்தல் நிதிப்பத்திரம்: ‘தேர்தல் ஜனநாயகத்திற்கு’ வெட்டப்பட்ட சவக்குழி!
- வங்கதேச ஆயத்த ஆடை தொழிலாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டம் வெல்லட்டும்!
- விரட்டியடிக்கப்படும் அனகாப்புத்தூர் மக்கள்: தி.மு.க. அரசின் அராஜகம்!
அறிவிப்பு – இதழ் விலையேற்றம் தொடர்பாக
புதிய ஜனநாயகம் இதழ் கடனில்தான் தொடர்ந்து இயங்கி வருகிறது. 2021-இன் தொடக்கத்தில் நிறுத்தப்பட்ட புதிய ஜனநாயகத்தை மீண்டும் கொண்டுவருகிறோம். பல முகவர்கள் சீர்குலைவுவாதிகள் பின்னால் சென்றுவிட்டதால், விற்பனை வட்டம் சுருங்கிவிட்டது. புதிய ஆசியர்கள்தான் இந்தப் பணியை மேற்கொண்டு செய்து வருகிறோம். இதனால், இதழ் அச்சாக்கச் செலவுகள் அதிகரிப்பு, விற்பனை படிகளின் எண்ணிக்கை குறைவு போன்றவை இதழின் செலவினங்கள் அதிகரிக்கக் காரணமாக இருக்கின்றன.
இதேகாலத்தில், விளம்பரங்களைப் போட்டு, பெருவீத அளவில் அச்சிடப்பட்டு வெளிவரும் நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்கள்கூட ரூ.25 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. காகித விலையேற்றம், போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு ஆகியன நீடித்துவரும் நிலையில், புதிய ஜனநாயகமோ நீண்ட காலமாக ரூ.20 என்ற விலையிலேயே கொடுத்து வருகிறோம்.
ஆகையால், இதழ் விலையை அதிகரிப்பது அவசியமானதாக உள்ளது. அந்த வகையில், 2024 ஜனவரி முதல் ரூ.30 விலையில் இதழைக் கொண்டுவருவது என முடிவு செய்துள்ளோம். இதன்படி, ஆண்டுச் சந்தா ரூ.360 ரூபாயாக இருக்கும். விற்பனைப் பிரதிகளுக்கான கழிவு, வழக்கம் போல ரூ.3-ஆக இருக்கும்.
கடன் நெருக்கடியில் இருந்து சற்று மீள்வதற்குத்தான் இந்த விலையேற்ற முயற்சியை மேற்கொள்கிறோம். இதழ் விலையுயர்வைக் காரணம் காட்டி வாசகர்கள் சந்தாக்களையும் விற்பனைப் படிகளையும் குறைத்துவிட்டால், இந்த விலையுயர்வு பலனளிக்காமல் போய்விடும். ஆகையால், தொடர்ந்து சந்தாக்களை அதிகப்படுத்துமாறும் இதழ் விற்பனையை விரிவுப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த ஆண்டின் மத்தியில், ஆண்டு சந்தா செலுத்திய வாசகர்களுக்கு 2023 டிசம்பர் வரையில் ரூ.20 என்ற விலையிலும், 2024 ஜனவரி முதல் ரூ.30 என்ற விலையிலும் இதழ் அனுப்பப்படும். அந்தவகையில், தற்போது செலுத்தியிருக்கும் சந்தா தொகையான ரூ.240-லிருந்து கணக்கிட்டு இதழ்வழங்கப்படும். ஆகையால், ஆண்டின் மத்தியில் சந்தா தொகை செலுத்தியவர்களுக்கு ஓரிரண்டு மாதங்கள் முன்னதாகவே சந்தா முடிவடைந்துவிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆண்டு சந்தா புதுப்பித்தல் தொடர்பாக:
இந்த மாதத்திலிருந்தே 2024-ஆம் ஆண்டுக்கான சந்தா சேகரிப்புப் பணியைத் தொடங்குகிறோம். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாங்கள் செலுத்தும் ஓராண்டு சந்தா தொகையை ரூ.360 என செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதனை நேரடியாக புதிய ஜனநாயக அலுவலக எண்ணிற்குத் தொடர்பு கொண்டும், பகுதியில் தங்களைச் சந்திக்கவரும் முகவர்கள் மூலமாகவும் செலுத்தலாம்.
அஞ்சல் சந்தாக்களுக்கு இதழை முறையாக அனுப்பி வருகிறோம். சில பகுதிகளில் தொடர்ந்து இதழ் வந்து சேர்வதில்லை என்று புகார்கள் வருகின்றன. இதற்கு அந்தந்த பகுதியில் இருக்கும் அஞ்சல் நிலையங்களைத் தொடர்பு கொண்டு ஒருமுறை இத்தவறை சுட்டிக்காட்டினால், அதன் பின்னர் முறையாக இதழை வினியோகம் செய்துவிடுவார்கள்.
இவ்வாறு சிக்கல் இருக்கும் பகுதிகளில் வாசகர்கள் மேற்கண்ட வகையில் முயற்சிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ஆகையால், சந்தா புதுப்பிப்பதை எக்காரணம் கொண்டும் நிறுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube