மாறிவரும் விஜயின் அணுகுமுறையை எப்படி பார்ப்பது?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த நவம்பர் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: லியோ திரைப்பட வெற்றி விழாவிற்கு நெத்தியில் குங்குமமிட்டு வந்தது; 12 மணிநேரம் பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சி நடத்தியது; நூலகம் திறப்பது என விஜயின் அணுகுமுறையே மாறிவருகிறது. இதை எப்படி பார்ப்பது?

ஸ்டார் ஹீரோ, சினிமா கவர்ச்சி போன்றவற்றால் விஜய் பின்னே இளைஞர்கள், மாணவர்கள் திரளுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், சீரியஸாக அரசியல் பேசாமல், குறைந்தபட்ச அரசியல் நிலைப்பாடுகளைக் கூட வைத்திருக்காமல் அரசியலுக்கேற்ற எந்தவொரு ஒழுக்கமும் இல்லாமல்தான் விஜய் உள்ளார். சினிமாவில் ஹீரோவாக இருப்பதால், அரசியல் பற்றிய அடிப்படை அறிவில்லாத, சினிமா போதைக்கு பலியாகியிருக்கின்ற பிரிவினர்தான் விஜயை ஆதரிப்பார்களேயொழிய சீரியஸாக சமுகத்தைப் பற்றி புரிந்துக்கொண்ட எவரும் விஜயை ஆதரிக்க மாட்டார்கள்.

மேலும், விஜய் தன்னை சங்கி என்று பொதுவெளியில் அறிவித்துக் கொள்ளவில்லை என்றாலும், பாசிச சக்திகள் தன்னை எளிதாக பயன்படுத்திக் கொள்ளுமளவுக்குதான் தன்னை லாவகமாக வைத்துக்கொண்டிருக்கிறார்.

(புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2023 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க