கொங்கு பகுதியில் கலவரம் செய்து தேர்தலை நிறுத்த சதி செய்யும்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை எதிர்த்து நிற்போம்!
பதிலடி கொடுக்காமல் பாசிசக் கும்பல் ஒருபோதும் அடங்காது!
14.04.2024
பத்திரிகை செய்தி
வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் போட்டியிடக் கூடிய எந்த தொகுதியிலும் வெல்ல முடியாது என்ற நிலைமை வந்துவிட்டதால் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பல் போட்டியிடக் கூடிய பகுதிகளில் கலவரம் செய்வதற்கு துணிந்து விட்டார்கள்.
நெல்லை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடிய நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான நிறுவனத்தில் பணியாற்றக்கூடியவர்கள் நயினார் நாகேந்திரனுக்காக நான்கு கோடி ரூபாயை எடுத்துச் செல்லும் பொழுது கையும் களவுமாக ரயிலில் பிடிபட்டார்கள்.
சிவகங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி சார்பாக போட்டியிடக் கூடிய தேவநாதன் என்பவர் மயிலாப்பூரில் உள்ள நிதி நிறுவனத்தில் 525 கோடி மோசடி செய்துள்ளார் என்ற தகவலால் தேவநாதனின் செல்வாக்கு புழுத்து நாறிப் போய் உள்ளது. இதனால் அமித்ஷா தனது பிரச்சாரத்தை ரத்து செய்தார்.
ரோடு ஷோ என்ற பெயரில் தெருத் தெருவாக இழுத்துக் கொண்டு சென்றாலும் சீண்டுவதற்குக்கூட நாதியில்லாமல் போய்விட்டது பாசிச பா.ஜ.க கும்பல்.
படிக்க: பாசிச பி.ஜே.பி கும்பல் இஸ்லாமிய குடும்பத்தினர் மீது தாக்குதல்! | மக்கள் அதிகாரம் கண்டனம்
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவால் தொடர்பான வழக்கில் “தேர்தல் நேரம் என்பதால் செய்த குற்றத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது” என்றது அமலாக்கத்துறை. ஆனால் அமலாக்க துறையால் இதுவரை தேவநாதன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
எப்படிக் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் வெல்ல முடியாது என்ற சூழல் வந்து விட்டதால் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் தேர்தலையே நிறுத்துவது என்ற சதி வேலையில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக்கும்பல் ஈடுபட்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாகவே கோவையில், இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலையை தட்டி கேட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை நடத்தியுள்ளது இந்த பாசிசக் கும்பல்.
இச்சம்பவம் நடந்து அடுத்து சில நாட்களுக்கு உள்ளாகவே, ஜிஎஸ்டி தொடர்பாக கேள்வி எழுப்பிய திராவிட விடுதலைக் கழகத்தின் தோழர் சங்கீதா அவர்களின் கடையில் உள்ளே புகுந்து, தோழர் சங்கீதாவை தாக்கி, ஆபாச வார்த்தைகளால் திட்டி, அவருடைய செல்போனை பறித்துச் சென்றிருக்கிறது பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
படிக்க: மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய அண்ணாமலை | மக்கள் அதிகாரம் கண்டனம்
இது போலவே கோவை மற்றும் நீலகிரியில் தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திலும் இடையூறு செய்தது பாசிச பா.ஜ.க கும்பல்.
தற்பொழுது வரை போலீசை வைத்துக்கொண்டு பல்வேறு பொய் காரணங்களை கூறி தோழர் திருமுருகன் காந்தியின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை விதிக்கிறது.
தமிழ்நாட்டில் எங்கேயும் வெல்ல முடியாது என்ற மிக மோசமான நிலைமையை திசை திருப்பவே திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலை நிறுத்த பா.ஜ.க சதி செய்து வருகிறது.
மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ரவுடிகள் யார் மீதும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் மேற்கண்ட தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். அந்த மேட்ச் பிக்சிங் சதிச் செயலை கூட தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த முடியாது என்பதால் தேர்தலையே நிறுத்துவதற்கான மிகப்பெரிய சதித்திட்டத்துடன் செயல்படக்கூடிய ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு தமிழ்நாடு உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒருபோதும் இந்த பாசிசக் கும்பல் அடங்கப் போவதில்லை.
இனி தமிழ்நாட்டில் எந்த மூலையிலாவது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தமிழ்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கான எதிர்வினையாக தமிழ்நாட்டில் பா.ஜ.க எங்கேயும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழலை தமிழ்நாடு உருவாக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube