அன்பார்ந்த வாசகர்களே,
2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி, வினவு மற்றும் புதிய ஜனநாயகம் சார்பாக “THE FINAL COUNTDOWN” என்ற செய்தி அறை அமைக்கப்பட்டது. இந்த செய்தி அறையில் இணைந்துகொள்ள பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் அதேசமயம் ஊடகம் சார்ந்த திறன் கொண்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதுமிருந்து தோழர்கள் FINAL COUNTDOWN செய்தி அறையை தொடர்பு கொண்டு இப்பணியில் இணைந்தனர். தோழர்கள் அனைவரும் இணைந்து பா.ஜ.க-வை வீழ்த்துவது குறித்த கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையிலான கட்டுரைகள், காணொளிகள், சமூக வலைதள பதிவுகளை கொண்டுவந்து இம்முன்னெடுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவளித்த வாசகர்களுக்கும் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த செய்தி அறையின் இரண்டாவது கட்டத்திற்கான தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்பதையும் தெரிவித்துகொள்கிறோம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,