பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
கடந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.
கேள்வி: அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்ப்பது?
டெல்லி முதல்வர் அரவிந்த் கைது விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஜெர்மனி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஜெர்மனி தலையிடுவதாகக் கூறி இந்திய அரசு ஜெர்மனிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நேர்மையான வெளிப்படையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பாசிச மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் இந்த அணுகுமுறைக்கெதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு மோடி அரசு சட்டவிரோதமான அணுகுமுறைகளை மேற்கொள்வதுதான் காரணம். இன்னொருபுறம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கட்சிகளாக இருக்கின்றன. அனைத்து மாநில அரசுகளும் அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளைத் தத்தமது மாநிலங்களில் முதலீடு செய்ய அழைத்து வருகின்றன. அந்தவகையில், பல மாநிலங்களில் அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களைக் கைது செய்து, எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அணுகுமுறையானது தங்களது நாடுகளின் முதலீடுகளுக்கு நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சமும் இணைந்துள்ளது.
பாசிசம் என்பது உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, ஆளும் வர்க்கங்களின் பெரும் பிரிவினருக்கே எதிரானது என்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பு.ஜ. உடன் ஓர் உரையாடல்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube