ஏப்ரல் 22 | தோழர் லெனினின் 154-வது பிறந்த நாள்!
வேண்டாம் பி.ஜே.பி; வேண்டும் ஜனநாயகம் என முழங்குவோம்!
மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!
ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
1. சென்னை
பாட்டாளி வர்க்க பேராசான் தோழர்.லெனின் 154 – வது பிறந்தநாள்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) யின் இணைப்பு சங்கமான டி . ஐ மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் .லெனின் – 154 வது பிறந்தநாள் ஆலைவாயில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். தோழர் ஆசான் லெனின் அவர்களின் பிறந்தநாளை நாம் ஏன் உயர்த்திப் பிடிக்க வேண்டும். தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரையும் வர்க்கமாக ஒன்றிணைத்து பாட்டாளி வர்க்க அரசை நிறுவியவர் தோழர் லெனின். அந்த வகையில் அவரை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
சிறப்புரையாற்றினார். பாட்டாளி வர்க்க ஆசான் தோழர். லெனின் அவர்கள் இந்த சமூக மாற்றத்தை நிகழ்த்துவதற்கு தேவைப்படுகிறார்.
புரட்சி எல்லாம் நடைபெறாது, சாத்தியமில்லை என்ற கருத்து சமூகத்தில் நடைமுறையில் நிலவுகின்றன. இந்த கருத்தை சுக்கு நூறாக நொறுக்கி நடைமுறையில் புரட்சியை நடத்திக் காட்டியவர் தோழர் லெனின்.
பாசிச ஹிட்லர் போலவே இந்தியாவில் மோடி அரசு கொண்டுவரும் மக்கள் விரோத திட்டங்கள் அனைத்தும் தேச நலன், நாட்டுப்பற்று என்ற போலியான தேசபக்தியின் மூலமாக நிறைவேற்றப்படுகிறது. இவர்களை அம்பலப்படுத்தி பாட்டாளி வர்க்கமாக அணி திரள வேண்டும்.
ஆர் .எஸ். எஸ்- பா.ஜ.க ,அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிக்க வேண்டும். இதற்கு எந்த கொள்கையும் கோட்பாடும் இல்லாத இந்தியா கூட்டணி மாற்று அல்ல. பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு நிறுவ வேண்டும். சமூக மாற்றத்தை நடத்திக் காட்டுவோம் வாருங்கள் தோழர்களே என அறைகூவல் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக சங்கத்தின் பொருளாளர். தோழர் மகேஷ் குமார் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
2. நெல்லை
ஏப்ரல்22
தோழர் லெனின் 154வது பிறந்தநாள் !
3. உளுந்தூர்பேட்டை
மாமேதை தோழர் லெனின் 154வது பிறந்த தினத்தை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பாலி கிராமத்தில் 22/04/2024 இன்று இரவு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது இதில் பாலி பகுதி இளைஞர்கள் கலந்துக்கொண்டனர் கலந்தக்கொண்ட இளைஞர்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டது
பதிவு
வினவுவன்
மக்கள் அதிகாரம் விருதை உளுந்தூர்பேட்டை
கடலூர் மண்டலம்
4.கடலூர்
பாட்டாளி வர்க ஆசான் தோழர் லெனின் அவர்களின் 154 வது பிறந்தநாள் மக்கள் அதிகாரம் சார்பாக கடலூர் பெரியார் சிலை அருகில் தோழர்.கார்திகேயன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி. அம்பானி -அதானி பாசிசம் ஓழிக! பாசிசத்தை வீழ்த்த மக்கள் எழுச்சியை கட்டியமைப்போம் என முழக்கங்கள் இடப்பட்டது. இறதியாக அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
5. மக்கள் கலை இலக்கிய கழகம்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube