Saturday, September 14, 2024
முகப்புசெய்திஇந்தியாஇந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. | USCIRF 2024 அறிக்கை

இந்தியாவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க. | USCIRF 2024 அறிக்கை

உபா (UAPA), குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் மூலம் மத சிறுபான்மையினர்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

-

USCIRF என்பது அமெரிக்காவில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் மத சுதந்திரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது குறித்த அறிக்கையை வெளியிடும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான அறிக்கையை USCIRF கடந்த மே 1 ஆம் தேதி வெளியிட்டது.

இந்த அறிக்கையில் 17 நாடுகளில் மத சுதந்திர நிலையை கண்காணிக்க வேண்டும் என கூறியுள்ளது. சீனா , ஈரான், வடகொரியா, ரஷ்யா , சவுதி, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் மத சுதந்திர நிலைமையை கண்காணிக்க வேண்டும் என்று USCIRF கூறியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கையின் படி 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் மத சுதந்திர சூழல் மோசம் அடைந்திருக்கிறது என்றும் பாஜக தலைமையிலான அரசு பாரபட்சமான தேசியவாத கொள்கைகளையும் வெறுப்புணர்வையும் நிலைநிறுத்தியுள்ளது.


படிக்க: உத்தராகண்ட் பொது சிவில் சட்டம்: இந்துராஷ்டிரத்திற்கு அடித்தளமிடும் பாசிஸ்டுகள்!


முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துக்கள், யூதர்கள் மற்றும் பழங்குடியின மக்களைப் பாதிக்கும் வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்த பா.ஜ.க அரசு தவறிவிட்டது. உபா (UAPA), குடியுரிமை திருத்தச் சட்டம், மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம் மூலம் மத சிறுபான்மையினர்கள் கண்காணிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார்கள்.

செய்தி ஊடகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் (என்.ஜி.ஓக்கள்) மத சிறுபான்மையினர் பற்றிய அறிக்கை கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்தல், மற்றும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீருக்கு இருந்த மாநில அந்தஸ்தை ரத்து செய்து யூனியன் பிரதேசமாக்கியது, காஷ்மீரி பத்திரிகையை இந்திய அதிகாரிகள் தொடர்ந்து தடுத்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக 687 சம்பவங்கள் நடந்திருப்பதாகவும், மணிப்பூர் கலவரம், 2002 குஜராத் கலவரம், காலிஸ்தான் பிரிவினைவாத கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு என பல விஷயங்களை அமெரிக்காவின் USCIRF அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்படி தொடர்ந்து நாட்டை சாதி ரீதியாக, மத ரீதியாக, இன ரீதியாக பிளவுபடுத்தி கலவரத்தை ஏற்படுத்தும் RSS – BJPயின் கட்டமைப்பை, பாசிச எதிர்ப்பு மக்கள் படையே வீழ்த்தும்.


சமரன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க