Tuesday, October 15, 2024
முகப்புஇதரபுகைப்படக் கட்டுரைபாலஸ்தீன மக்களை தேடித்தேடி இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

பாலஸ்தீன மக்களை தேடித்தேடி இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்!

-

மீபத்தில் பாலஸ்தீன மக்களை, ரஃபாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேலின் இன வெறிப்போரால் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், திட்டமிட்ட குண்டு வீச்சாலும், தேவையான மருத்துவ வசதி கிடைக்காததாலும், சர்வதேச மனிதாபிமான உதவிகள் கிடைக்காததாலும், பசியாலும், பட்டினியாலூம் இதுவரை 35,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துள்ளனர்.

இஸ்ரேலின் இந்த இனப்படுகொலையில் இருந்து தப்பித்து, தங்கள் உடலில் மீதமிருக்கும் உயிரை வைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயருகின்றனர் பாலஸ்தீன மக்கள். அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை தேடித்தேடி படுகொலை செய்துவருகிறது இஸ்ரேல்.

14 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் ரஃபாவில் தான் தற்போது தஞ்சமடைந்துள்ளனர். அந்த கடைசி பாதுகாப்பிடத்தையும் திட்டமிட்டு நிர்மூலம் செய்யத்துடிக்கிறது இனவெறிப்பிடித்த இஸ்ரேல்.

இந்த இனப்படுகொலையை நடத்திவரும் அமெரிக்காவின் முகத்திரை ஏற்கனவே கிழிந்துவிட்டது. சமீபத்தில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் “காஸாவிற்கு கிழக்கே அமைந்துள்ள ரஃபா மீது இஸ்ரேல் ஒரு திட்டமிட்ட படையெடுப்பை மேற்கொண்டால் என்ன நடக்கும் ? என்று பைடனிடம் கேட்டபோது, அப்படியென்றால் நாங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கப்போவதில்லை என்றார்.” பாலஸ்தீன மக்களை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கான ஆயுதங்களை வழங்கிவிட்டு, அதனை மறைக்க தற்போது பல நாடகங்களை நடத்தி வரும் பைடனின் முகத்தில் மனித மலத்தை தான் எறிய வேண்டும்.

பாலஸ்தீன மக்களின் கடைசி பாதுகாப்பு இடமான ரஃபாவை அழித்துக்கொண்டிருக்கும் இனவெறி பிடித்த இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவிலான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்போம்.

பாலஸ்தீன மக்கள் தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் செல்வதற்காக, வேனின் பின்புறத்தில் தங்கள் உடமைகளை ஏற்றிச் செல்லும் காட்சி. [AFP]
பாலஸ்தீன மக்கள் ஒரு டிரக்கின் பின்புறத்தில் தண்ணீர் தேவைக்காக கொள்கலன்களை ஏற்றும் காட்சி. [AFP]
ஒரு பாலஸ்தீனிய சிறுவன், ஷாப்பிங் டிராலியில் தனக்கான பொருட்களை எடுத்துக்கொண்டு ரஃபாவை விட்டு வெளியேறும் காட்சி [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
ரஃபாவை விட்டு வெளியேறும் பாலஸ்தீன மக்கள். [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
இஸ்ரேலின் இனப்படுகொலை தொடங்கியதில் இருந்து பாலஸ்தீன மக்கள் ஏற்கனவே பலமுறை இடம்பெயர்ந்துள்ளனர். [ஹடேம் கலீத்/ராய்ட்டர்ஸ்]
 

ஆதன்
நன்றி – அல் ஜசீரா

 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க