Wednesday, October 16, 2024
முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைஎட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!

எட்டு முறை பாஜகவுக்கு கள்ள ஓட்டு போட்ட இளைஞர்!

ஒரு தொகுதியில் எட்டு முறை பா.ஜ.க-விற்கு வாக்களித்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட முடிகிறது என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாகத்தான் நடக்கிறதா ?

-

பாஜகவுக்கு எட்டு முறை வாக்களித்த இளைஞர்!
தேர்தல் நியாயமாகதான் நடக்கிறதா?

ந்தத் தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதியுள்ள நபர்களாக உள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில்தான் தேர்தல் ஆணையத்தின்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் என்பது இந்திய தேர்தல் ஜனநாயகத்தின்மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக பா.ஜ.க-வுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. முஸ்லீம் மக்கள் மீதான மத வெறுப்பு பேச்சுக்கு பிரதமர் மோடி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பா.ஜ.க தலைவர்கள் மீதும், அவர்களுடைய ஆதரவாளர்கள் மீதும் மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் மீது மிக வீரியமாக நடவடிக்கை பாய்கிறது.

படிக்க : தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் ! | இணைய போஸ்டர்

வாக்குப்பதிவு தொடர்பான விவரங்களை வெளியிடாமல் சதவீதத்தின் அடிப்படையில் வெளியிட்டு மக்களையும் எதிர்க்கட்சிகளையும் தேர்தல் ஆணையம் ஏமாற்றுகிறது. இது நேரடியாகவே தேர்தல் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கையை கேள்வி எழுப்புகிறது.

ஒரு தொகுதியில் எட்டு முறை பா.ஜ.க-விற்கு வாக்களித்து அதை வீடியோவும் எடுத்து வெளியிட முடிகிறது என்றால் இந்தத் தேர்தல் ஜனநாயகமாகத்தான் நடக்கிறதா ?

ஏற்கனவே, குஜராத்தில் இன்ஸ்ட்டா நேரலையில் ஓட்டு போட்ட பா.ஜ.க தலைவரின் மகன் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் என்பது சடங்குத்தனமாக பி.ஜே.பி-க்கு ஆதரவாகவே நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் பி.ஜே.பி.யின் கைபாவையாகவே உள்ளது என்று நான்கு கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தலிலேயே நமக்கு தெளிவாகிறது.

ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் மீதும், நடைபெறும் தேர்தலின் மீதும் நம்பிக்கை இல்லை என்றும் தெருவில் இறங்கி போராடுவோம்!

சிந்தனைச் செல்வன்

பு.மா.இ.மு முகநூலிலிருந்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க