ந்தியாவில் பல்வேறு மாநிலங்களுடைய பழங்குடிகளும் அவர்கள் வாழ்விடமான காடுகள் – மலைகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சத்தீஸ்கரின் வனப்பகுதிகளில் அரசே டிரோன்களை வைத்து குண்டுவீசி, பழங்குடி மக்களை அச்சுறுத்தி விரட்டும் விசயம் சமீபத்தில் அம்பலமாகியிருக்கிறது. சத்தீஸ்கருக்கு டிரோன் என்றால், மணிப்பூருக்கு இனப் படுகொலை.

சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒழித்ததன் மூலம், காஷ்மீரில் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்க முடியும் என்று தம்பட்டமடித்தது காவிக் கும்பல். ஆனால், இன்று காஷ்மீரில் ஜக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமானது பெரிய மால் தொடங்குவதற்கு அனுமதி பெற்றிருக்கிறது என்று தனது பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் நந்திதா.காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து, அக்கனிம வளத்தைக் கொள்ளையிட காத்திருக்கின்றன அம்பானி-அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் கழுகுகள். காஷ்மீரின் நிலைதான் நாளை மணிப்பூருக்கும்.

இனவெறிக் கும்பலும், மதவெறிக் கும்பலும், கார்ப்பரேட் கழுகுகளும் சுரண்டிக் கொழுப்பதற்காக அப்பாவி மேய்தி இன மக்களும், குக்கி இன மக்களும் பகையாளிகளாக்கப் பட்டிருக்கிறார்கள்.

புத்தகம்: பற்றி எரியும் மணிப்பூர் பற்ற வைத்தது காவி

முதற்பதிப்பு: ஜனவரி 2025

வெளியீடு: புதிய ஜனநாயகம் பதிப்பகம்
15/5, தெற்கு ஜெகநாதன் தெரு,
1-வது மெயின் ரோடு, நேரு நகர்,
வில்லிவாக்கம், சென்னை – 600 049.

தொலைப்பேசி எண்: 97915 59223

மின்னஞ்சல்: puthiyajananayagampublication@gmail.com

அச்சாக்கம்:
எழில் பிரிண்ட்ஸ், சென்னை – 24

உள்ளடக்கம்:

  1. எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி! (ஜூன் 2023)
  2. நேற்று குஜராத், இன்று மணிபூர்: ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வை தடை செய்! (ஆகஸ்ட் 2023)
  3. மணிப்பூர்: ஐந்து மாதங்களாகியும் அணையாத நெருப்பு! (அக்டோபர் 2023)
  4. பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்! (செப்டம்பர் 2024)
  5. மணிப்பூரில் தேர்தலை புறக்கணிக்கும் குக்கி அமைப்புகள்: பா.ஜ.க-வின் சதித்திட்டத்திற்கு விழுந்த அடி

48 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சியில் அரங்கு எண் 246 -இல் இடம்பெற்றுள்ள புதிய ஜனநாயகம் பதிப்பகத்தில் இப்புத்தகம் கிடைக்கும்.

வாசகர்கள் வாங்கிப் படித்து ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
தோழர் ஆகாஷ்,
நிர்வாகி,
புதிய ஜனநாயகம் பதிப்பகம்,
9791559223.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க