தேவேந்திர ராஜா மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த தோழர்கள்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அரியநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் தலித் மாணவர் தேவேந்திரராஜா-வை மார்ச் 10 ஆம் தேதி ஆதிக்கச் சாதி வெறியர்கள் கொடூரமாக வெட்டிய நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மார்ச் 24 அன்று அவரை புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பாகவும் நெல்லை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாகவும் பத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் சந்திக்கச் சென்றிருந்தோம்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அனைத்து தோழர்களையும் அனுமதிக்காத நிலையில் நானும் மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல துணை செயலாளர் தோழர் தமிழ்வேந்தன் அவர்களும் தேவேந்திர ராஜாவை சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினோம்.

மேலும் தேவேந்திரராஜாவின் தந்தையைச் சந்தித்தும் ஆறுதல் கூறினோம்.

தேவேந்திர ராஜாவின் தலையில் ஆறு இடத்தில் வெட்டி இருக்கிறார்கள் இரண்டு கைகளிலும் வெட்டி இருக்கிறார்கள் அதில் ஒரு கையில் மூன்று விரல்கள் மற்றும் கட்டை விரல் இல்லாமல் இருக்கிறது. தேவேந்திரராஜா சாதி வெறியர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசே! இன்னும் எத்தனை காலம் மௌனம் சாதிக்கப் போகிறீர்கள்? இப்படிப்பட்ட கொடூரங்களை அனுமதித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்?

சாதிய தாக்குதல்கள் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மற்றும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களைத் தடை செய்!

மேலும் வழக்கறிஞர் மற்றும் முன்னாள் நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை உடனடியாக பள்ளிகளில் நடைமுறை படுத்திடு!

தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க