30.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இன்று (30.03.2025) காலை 10 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றப்பட்டது. பின்பு தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு மறைந்த தோழர் குழந்தைவேலுவுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கை, அமைப்பு விதிகள், மூன்றாண்டு கால அனுபவ அறிக்கை ஆகியவை விவாதித்து ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிர்வாகிகள் தேர்தலில் கடலூர் மாவட்ட செயலாளராக தோழர் முருகானந்தம், இணைச் செயலாளராக தோழர் சக்தி, பொருளாளராக தோழர் அசோக் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர் சேகர், தோழர் விநாயகம் ஆகியோர் மாவட்ட நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கடலூர் இரண்டாவது மாவட்ட மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி-க்கு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு உடனடியாக நிரந்தர பணி வழங்க வேண்டும். மேலும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- நெய்வேலி என்.எல்.சி-யில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி முடிந்த பின்பு மீண்டும் அந்த நிலத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- நெய்வேலி என்.எல்.சி-யில் வடநாட்டவரின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால் இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் என்.எல்.சி நிறுவனம் இருப்பதால் உயர் பதவிகளிலும் நிரந்தர பணிகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் உண்டியலில் வரும் பணத்தையும் நகைகள் மற்றும் அவற்றின் சொத்துக்களில் ஊழல் செய்யும் தீட்சிதர்களை கைது செய்ய வேண்டும். மேலும் சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கடலூரில் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் பதட்டப்படும் வகையில் உயிருக்கு ஆபத்து என அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு அனுப்பி வைக்கின்ற இச்செயலை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் நவீன வசதிகளோடு கூடுதல் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கட்டித் தர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதியின் மர்மமான சாவிற்கு காரணமான பள்ளியின் நிர்வாகிகள் தாளாளர்கள் என சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து சிறையில் அடைப்பதோடு அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசுடைமை ஆக்க வேண்டும் வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி வழக்கில் கலவரத்தில் ஈடுபட்ட அனைவரையும் குற்றவாளி எனவும் குறிப்பாக மாணவி ஸ்ரீமதியின் தாய் முதன்மை குற்றவாளி என்றும் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு ஆதரவாகப் போராடிய அனைவர் மீதும் போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எவ்வித நிபந்தனையும் இன்றி ரத்து செய்ய வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உடனடியாக அரசு கல்லூரி கட்டி தர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் வரை பள்ளி கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்வோருக்கு வசதியாக அரசு நகர பேருந்து கூடுதலாக இயக்க வேண்டும். மேலும் பாலி புது காலனிக்கு புதிய பேருந்து இயக்க வேண்டுமென என மாநாடு கோருகிறது.
- விழுப்புரம் மாவட்டத்தில் மேல்பாதி கிராமத்தில் பூட்டப்பட்டு இருக்கும் கோவிலை உடனடியாக திறந்து தாழ்த்தப்பட்ட மற்றும் அனைத்து சமுதாய மக்களின் வழிபாட்டு உரிமையை உடனடியாக நிலைநாட்ட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பெண்களுக்கு என தனி கல்லூரி கட்டித் தருவதோடு விருத்தாசலம் வளர்ந்து வருவதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்னும் அரசு மருத்துவமனைக்கு கூடுதலான கட்டிடம் கட்டித் தர வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- விருத்தாசலம் மனநலம் குன்றிய பெண் வழக்கில் முக்கிய குற்றவாளியாக பணி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் முருகேசனை எஃப்.ஐ.ஆர்-இல் சேர்த்து தண்டனை வழங்க வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.
தோழர் முருகானந்தம்,
கடலூர் மாவட்டச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram